இந்தியர்களுக்கான ஆரோக்கியமான 10 உணவுமுறைப் பழக்கங்கள்!

Healthy Eating Habits for Indians
Healthy Eating Habits for Indians

உடலுக்கு ஊட்டமளிப்பதற்கும் சிறந்த ஆரோக்கியத்தை பேணுவதற்கும் ஆரோக்கியமான உணவுப் பழக்கங்கள் அவசியம். இந்தியாவில் பலவிதமான சத்தான உணவுகள் கிடைத்தாலும், அதை பெரும்பாலும் யாரும் முறையாக எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் நமது ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்துவதற்கு ஆரோக்கியமான உணவு பழக்கத்தை நாம் அனைவருமே கடைபிடிக்க வேண்டும். 

இந்தியர்கள் பின்பற்ற வேண்டிய 10 ஆரோக்கியமான உணவுப் பழக்கங்கள்:

  1. பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள் போன்ற முழு உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

  2. தினசரி உடலுக்குத் தேவையான எல்லா விதமான ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும் உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். 

  3. பருப்பு, பீன்ஸ், மீன் மற்றும் கோழி போன்ற லீன் புரதம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். 

  4. ஆரோக்கியமற்ற கொழுப்புகள், சர்க்கரைகள் மற்றும் சோடியம் அதிகம் உள்ள பதப்படுத்தப்பட்ட உணவுகளைக் குறைக்கவும்.

  5. வேகவைத்தல், வறுத்தல் அல்லது வதக்குதல் போன்ற ஆரோக்கியமான சமையல் நுட்பங்களைப் பயன்படுத்தி வீட்டிலேயே உணவை சமைத்து சாப்பிடுங்கள்.

  6. இன்டர்மீடெட் ஃபாஸ்டிங் முறையை முயற்சித்து, உங்கள் உடலின் பசி மற்றும் அதன் தன்மையைப் புரிந்து கொள்ளுங்கள். 

  7. தண்ணீர் குடிப்பது மூலமும், மோர் அல்லது இளநீர் போன்ற நீரேற்று பானங்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலமும், எப்போதும் நீரேற்றமாக இருக்கலாம். 

  8. ஆரோக்கியமற்ற பதப்படுத்தப்பட்ட தின்பண்டங்களுக்கு பதிலாக பழங்கள், மிக்ஸட் நட்ஸ், தயிர் மற்றும் வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட காய்கறி சாலட் ஆகியவற்றை அவ்வப்போது சாப்பிடுங்கள். 

  9. நட்ஸ், விதைகள், அவகாடோ மற்றும் நெய் போன்ற ஆரோக்கிய கொழுப்பு நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். 

  10. சாப்பிடும் உணவை மெதுவாக ருசித்து மென்று சாப்பிடுவதன் மூலம், அதன் ஊட்டச்சத்துக்களை நீங்கள் முழுமையாகப் பெறலாம். 

இதையும் படியுங்கள்:
செய்யலாம் வாங்க சியா விதை புட்டிங்.. அசரவைக்கும் சுவையில் ஆரோக்கியமான உணவு! 
Healthy Eating Habits for Indians

இந்த ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களைக் கடைபிடிப்பதன் மூலம், நமது ஊரில் கிடைக்கும் மாறுபட்ட சத்தான உணவுகளை எடுத்துக்கொண்டு, நமது ஒட்டுமொத்த நல்வாழ்வையும் மேம்படுத்த முடியும். உணவுகளை கவனமாக தேர்வு செய்து, வீட்டிலேயே சமைக்கும் உணவுகளுக்கு முன்னுரிமை அளிப்பதால், முழு ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழலாம். எனவே நாம் நமது உணவுப் பழக்கத்தில் கவனம் செலுத்தி கட்டுப்பாட்டுடன் இருப்பது, நம்மை நிச்சயம் மேம்பட்ட மனிதர்களாக மாற்றும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com