நம் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க ஊட்டச் சத்துக்களும் சக்தியை அளிக்கக்கூடிய உணவுகளைத் தேர்ந்தெடுத்து உண்பது அவசியம். அவ்வாறான உணவுகளின் பட்டியலில் முதன்மையாக உள்ள 10 வகை தென்னிந்திய உணவுகள் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
1. கீரை மசியல்: பச்சை இலைக் காய்கறிகளில் ஒன்றான பசலைக் கீரையுடன் ஸ்பைசஸ் சேர்த்து தயாரிக்கப்படுவது. உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் பல ஊட்டச்சத்துக்களும் இதில் அதிகம் உள்ளன.
2. கொள்ளு ரசம்: கொள்ளுப் பயறு (Horse Gram) உபயோகித்து சூப் போல் தயாரிக்கப்படுவது இந்த ரசம். இதில் புரோட்டீன் மற்றும் இரும்புச் சத்துக்கள் அதிகம். இவை சிறப்பான செரிமானத்துக்கும் எடைப் பராமரிப்பிற்கும் உதவும்.
3. பத்ரோட் (Pathrode): கர்நாடக மாநிலத்தில் கொலோகாசியா என்ற கீரையுடன் அரிசி மற்றும் ஸ்பைசஸ் சேர்த்து தயாரிக்கப்படுவது இந்த உணவு. இதில் கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் A, C ஆகிய சத்துக்கள் அதிகம். இவை எலும்புகளின் ஆரோக்கியம் மற்றும் நோயெதிர்ப்புச் சக்தி அதிகரிக்க உதவுகின்றன.
4. உள்ளி தீயல்: இது கேரள மாநிலத்தில் வறுத்த தேங்காய் மற்றும் புளிக் கரைசலுடன் சின்ன வெங்காயம் சேர்த்து தயாரிக்கப்படும் உணவு. இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இதய ஆரோக்கியம் காக்க வல்லவை. புளியிலுள்ள வைட்டமின் C, இரும்புச் சத்து உறிஞ்சப்பட உதவும்.
5. கூட்டு: பருப்பில் காய்கறி சேர்த்துத் தயாரிக்கப்படுவது. புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து அதிகம். ஊட்டச் சத்துக்கள் தரவும் நல்ல செரிமானத்துக்கும் உதவும்.
6. தோரன்: கோஸ், பீன்ஸ், கேரட் போன்ற காய்களுடன் தேங்காய் துருவல் சேர்த்து ஸ்டிர் ஃபிரை போன்று சமைக்கப்படும் கேரள உணவு. நார்ச்சத்து, வைட்டமின்கள், மினரல்கள் நிறைந்தது. நோயெதிர்ப்புச்சக்தி அதிகரிக்கவும் நல்ல செரிமானத்துக்கும் உதவும்.
7. கேழ்வரகு களி (Ragi Muddle): கால்சியம், இரும்புச்சத்து மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்த கேரள உணவு. இரத்த சர்க்கரை அளவை சமநிலைப்படுத்தவும் எலும்புகளின் ஆரோக்கியம் காக்கவும் உதவும்.
8. நவரா ரைஸ் கஞ்சி: நவரா எனும் மருத்துவ குணம் கொண்ட அரிசியுடன் தேங்காய்ப் பால் சேர்த்து தயாரிக்கப்படும் கேரள கஞ்சி. நார்ச்சத்து, ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது. நோயெதிர்ப்புச் சக்தி அதிகரிக்கவும், நல்ல செரிமானத்துக்கும் உதவும்.
9. உப்பு ஹுலி தோசை: அரிசி, பருப்பு, புளி ஸ்பைசஸ் சேர்த்து தயாரிக்கப்படும் கர்நாடக உணவு.
10. கம்பு கூழ்: நார்ச்சத்து, புரோட்டீன், இரும்புச்சத்து நிறைந்தது. கோடைக்கேற்ற குளிர்ச்சி தரும் உணவு.