மனநிலையை மேம்படுத்தி மன நலம் காக்கும் 14 மலர்கள்!

Flowers
Flowers
Published on

மலர்கள் நம் மனநிலையை மேம்படுத்த உதவும். சில மலர்களை காணும் பொழுதே நம் மனதில் மகிழ்ச்சி உண்டாகும். இந்த வகையில் நம் மனநிலையை மேம்படுத்தும் மலர்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

1) லாவண்டர் பூக்கள்:

லாவண்டர் பூக்களின் இனிமையான மணம் நம் மன அழுத்தத்தை பெரிதும் குறைக்க உதவுகிறது. பூக்கள் அழகாக இருப்பதுடன் மகிழ்ச்சியான உணர்வுகளையும் தூண்டும். சிறந்த தூக்கத்தை ஊக்குவிக்கும். அரோமா தெரபியில் லாவண்டர் மற்றும் மல்லிகை போன்றவை தளர்வை போக்கும். மன அழுத்தத்தை குறைத்து நேர்மறையான எண்ணங்களை ஊக்குவிக்கும்.

2) டெய்சி பூக்கள்:

டெய்ஸி பூக்கள் பார்க்க அழகாக இருப்பதுடன், நமக்கு மகிழ்ச்சியான உணர்வை தருவதுடன், மனநிறைவை தந்து மனதை அமைதியாக வைத்துக்கொள்ள உதவுகின்றன.

இதையும் படியுங்கள்:
உலகின் மிக விலை உயர்ந்த 10 வகை பூக்கள்!
Flowers

3) டூலிப் மலர்கள்:

பலவிதமான வண்ணங்களில் கண்ணை கவர்வதுடன் மகிழ்ச்சி, அன்பு , காதல் போன்ற பல உணர்வுகளையும் நமக்கு ஏற்படுத்துகிறது.

4) பியோனிகள்:

இந்த பூக்கள் நமக்கு அதிர்ஷ்டத்தையும், செழிப்பையும் வழங்குகின்றன. அத்துடன் மகிழ்ச்சியான மனநிலையையும், அமைதியான உணர்வையும் தருகின்றன.

5) கிரிசான்தமம்கள்:

கிரிசான்தமம்கள் மனதின் தெம்பையும், நம்பிக்கையையும் பிரதிபலிக்கின்றன. இந்த மலரின் பிரகாசமான வண்ணம் நமக்கு நம்பிக்கை அளிக்கக் கூடியதாக உள்ளது. இவற்றின் தேநீர் நம் உடலை குளிர்வித்து பதட்டத்தின் அறிகுறிகளை குறைக்க உதவுகிறது.

6) மல்லிகை:

மல்லிகையின் நறுமணமும், வெள்ளை நிறமும் நம் மனதை அமைதிப்படுத்துகிறது. பதட்டத்தை குறைக்கிறது. இதனால் தான் இது வாசனை திரவியங்கள், மூலிகை தேநீர் போன்றவற்றிலும், பாரம்பரிய ஹோமியோபதி வைத்தியங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. மல்லிகை மலர்கள் அமைதியான தூக்கத்தை தரக் கூடியவை.

7) சூரியகாந்தி பூ:

சூரியகாந்தி பூவின் மஞ்சள் நிறம் மகிழ்ச்சியையும், நேர்மறையான எண்ணங்களையும் தோற்றுவிக்கிறது. இது நம் மனநிலையை பெருமளவில் மேம்படுத்துகிறது. பூக்களின் துடிப்பான வண்ணங்கள் நேர்மறை உணர்வை தூண்டும் தன்மை கொண்டவை.

Flowers
Flowers

8) ரோஜா பூக்கள்:

ரோஜா பூ காதல் உணர்வை தூண்டுவதுடன் அன்பையும் பெருக்கும்; அன்பின் அடையாளமாக காணப்படும். சிவப்பு ரோஜாக்கள் காதல் மற்றும் ஆர்வத்தை தூண்டும் தன்மை கொண்டவை. ரோஜா பூவை பார்த்தாலே மன பதட்டம் அகன்று மகிழ்ச்சி ஏற்படும். பூக்களை முகர்ந்து பார்ப்பது மன அழுத்தத்தையும், , பதட்டத்தையும் குறைப்பதுடன் மனச்சோர்வையும் குறைப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

9) பீச் மலர்:

நீண்ட ஆயுளையும், நல்ல மனநிலையையும் குறிக்கிறது. மலர்களின் குணப்படுத்தும் பண்புகளைப் பயன்படுத்தி மலர் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

10) அமைதி லில்லி:

பீஸ் லில்லி எனப்படும் இவை நம் வீடுகளில் வைத்திருக்க வேண்டிய மிகவும் பயனுள்ள தாவரங்களில் ஒன்றாகும். அழகான தோற்றம் கொண்ட பூக்களில் இருந்து வரும் மயக்கும் நறுமணம் மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை குறைக்க உதவுகிறது. மனச்சோர்வையும் குறைத்து மகிழ்ச்சியை உண்டு பண்ணுகிறது.

இதையும் படியுங்கள்:
பளிங்குக் கண்ணாடி போன்று காட்சி தரும் மாய மலர்கள்!
Flowers

11) லிசியான்தஸ்:

இந்த அழகிய பூக்கள் மக்களின் படைப்பாற்றலை வெளி கொணர்வதற்கும் சுதந்திர சிந்தனையை ஊக்குவிப்பதற்கும் பெயர் பெற்றவை.

12) ஆர்க்கிடுகள்:

புத்துணர்ச்சியூட்டும் நறுமணம் மூளையின் ஆல்பா அலைகளை அதிகரித்து அமைதியான மனநிலையை ஊக்குவிக்கும். ஆர்க்கிடுகள் மன அழுத்தத்தை குறைத்து, பதற்றத்தை போக்கி நல்ல மனநிலையை உருவாக்கும்.

13) ஜெரனியம்:

நறுமண சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது. இதன் அமைதியான வாசனை பதட்டம், எரிச்சல், கோபம், தலைவலி போன்றவற்றை குறைக்க உதவுகிறது.

14) மனோரஞ்சித பூக்கள்:

அதிக நறுமணத்தைக் கொண்ட மனோரஞ்சித பூக்கள் காற்றில் அதன் இதமான நறுமணத்தை பரவ விடுவதால் நரம்புகளை அமைதிப்படுத்தி பதட்டத்தினை குறைக்க உதவுகின்றன. நாடித்துடிப்பு மற்றும் சுவாசத்தை குறைக்கும் என்பதால் மன அழுத்தத்தை குறைத்து மனதை லேசாக்குகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com