

தினமும் மூன்று வேளை உண்பதோடு, இடை இடையே நொறுக்குத் தீனிகள், காபி, டீ போன்ற பானங்களையும் எடுத்துக் கொள்கிறோம். வயிற்றுக்கு தொடர்ந்து வேலை கொடுப்பதை விட்டு விட்டு அவ்வப்போது விரதம் இருப்பது நல்லது. அதிலும் 36 மணி நேரங்கள் விரதம் இருந்தால் நமது உடல் உறுப்புகளுக்கு ஏற்படும் பயன்கள் என்ன என்பது பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
முதல் ஆறு மணி நேரம்
36 மணி நேரம் ஒருவர் உண்ணாமல் விரதம் இருக்கும்போது உடலில் பல விதமான நன்மைகள் ஏற்படும். விரதம் இருக்கும் போது முதல் ஆறு மணி நேரம் நமது உடலில் என்ன நடக்கிறது தெரியுமா? கடைசியாக உண்ட உணவில் இருந்து உடல் குளுக்கோசை எடுத்துக் கொள்கிறது. முதல் 6 மணி நேரத்திற்குள் கல்லீரல் வேகமாக செயல்படுகிறது. உடலையும் மூளையையும் சீராக இயங்க வைக்க உடல் சேமித்து வைத்திருக்கும் சர்க்கரையை வெளியிடுகிறது. வயிறு மற்றும் குடல் போன்ற உறுப்புகள் பசியை உணரத் தொடங்கும்.ஆனால் மூளை ஆற்றலுடன் செயல்படும்.
ஆறிலிருந்து 12 மணி நேரம்
உடலுக்குத் தேவையான எரிபொருள் 12 மணி நேரத்தில் தீர்ந்துவிடும். உண்மையான வளர்ச்சியை மாற்றம் இந்த நேரத்தில் தான் நிகழ்கிறது. உடல் ஒரு சிக்கலான ஹார்மோன் எதிர்வினையைத் தொடங்குகிறது. இப்போது பசி உணர்வுகள் அதிகமாக இருக்கும். உடல் மற்றும் மூளை சுறுசுறுப்பாக இயங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும். இந்த சமயத்தில் கணையம் ஒரு ஹார்மோனை அனுப்புகிறது. இது உடலில் இருக்கும் கொழுப்பை உடைக்க சொல்லி கல்லீரலை அறிவுறுத்தும். மூளை இந்த எரிபொருளை பயன்படுத்தத் தொடங்கும். மூளை திறமையாக இயக்கப்படுவதால் கடுமையான பசி மறைந்து விடும். மூளை எப்போதும் போல புத்துணர்ச்சியுடன் செயல்படத் தொடங்கும்.
20 முதல் 36 மணி நேரம் வரை
இந்த நேரத்தில் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லும் தன்னைத்தானே சுத்தம் செய்து கொள்ளும் ஒரு செயல்முறையைத் தொடங்குகிறது. இதனால் சேதமடைந்த மற்றும் நச்சுப் புரதங்கள் மற்றும் செல் குப்பைகள் அகற்றப்படுகின்றன. செல்கள் குப்பைகளை வெறுமனே தூக்கி எறிவது இல்லை, அவற்றை மறுசுழற்சி செய்கின்றன. பழைய உடைந்த துண்டுகளை உடைத்து புதிய வலுவான மற்றும் ஆரோக்கியமான கூறுகளை உருவாக்க உடல் பாகங்களைப் பயன்படுத்துகின்றன. இந்த உள்ளூரப் பழுது பார்க்கும் வேலையால் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் புதிய, ஆரோக்கியமாக சிறந்ததாக மாறும். செல்கள் புத்துயிர் பெறுகின்றன. மூளை கூர்மையாக மாறிவிடுகிறது. புதிய உணவு ஏதும் உடலுக்கு கொடுக்கப்படாததால் உறுப்புகள் ஆழமான சுத்திகரிப்பை செய்யத் தொடங்குகின்றன
வாழ்த்துக்கள்! நீங்கள் நான்காவது க்ளு உள்ள இடத்தை அடைந்துவிட்டீர்கள்.
இதோ உங்களுக்கான க்ளு - 'முன்ன பின்ன தெரியாத'
அடுத்த க்ளுவை கண்டுபிடிக்க கீழே உள்ள பட்டனை கிளிக் செய்யவும்.
சுகாதார நன்மைகள்
தொடர்ந்து 36 மணி நேரம் விரதம் இருப்பதால் உடலில் உள்ள கொழுப்பு எரிக்கப்படுகிறது. மூளைப் பகுதியில் தெளிவான மற்றும் சிறந்த அறிவாற்றல் செயல்பாடு அதிகரிக்கிறது. செல்கள் பழுது பார்க்கப்படுவதால் நீண்ட ஆயுளுக்கு வித்திடும். நாட்பட்ட நோய்களின் அபாயமும் குறையும். விரதம் இருப்பது உடலின் வளர்ச்சி ஹார்மோன்களை அதிகரித்து தசை வளர்ச்சி மாற்றத்தை தூண்டுகிறது மன அழுத்தமும் வெகுவாக குறையும். விரதம் இருக்கும் போது அது இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
தொடர்ந்து 36 மணி நேரங்கள் ஒருவர் விரதம் இருக்கும் போது மன உறுதி, பொறுமை மற்றும் சுய கட்டுப்பாட்டை வலுப்படுத்துகிறது. உடல் ரீதியாக இந்த 36 மணி நேரம் விரதத்தின் போது சோர்வாக உணரலாம். ஆனால் மூளை விழிப்புணர்வுடனும், கவனத்துடனும் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விரதத்தை கடைபிடிக்கும் முன்பாக தகுந்த மருத்துவ ஆலோசனை தேவை. ஆரோக்கியமாக இருப்பவர்கள் மட்டுமே இதை கடைபிடிக்கலாம்.