குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் குறைந்து காணப்படும் என்பதால் ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கங்களை கடைபிடித்தால் உடல் நலம் பாதிப்படையாது. மேலும், குளிர்காலத்தில் ஊறவைத்த உணவுகளால் உடலுக்கு வெப்பம் கிடைக்கும். அந்த வகையில், குளிர் காலத்தில் ஊற வைத்து சாப்பிட வேண்டிய 5 உணவுகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
1. சியா விதைகள்: குளிர்காலத்தில் சியா விதைகளை ஊறவைத்து தினமும் சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் மேம்படுகிறது. மேலும், செரிமானம் சீராகி, குடல் இயக்கம் ஆரோக்கியமாக நடைபெற உதவிபுரிகிறது.
2. பயிர்கள்: பச்சை பயிர் உள்ளிட்ட பயிர் வகைகள் மற்றும் பருப்புகளை ஊறவைத்து சாப்பிடுவதன் மூலம் அதில் உள்ள நார்ச்சத்து, வைட்டமின், கனிமங்கள், புரதங்கள் ஆகியவை முழுவதுமாகக் கிடைப்பதோடு, இதில் குறைந்த கிளைசெமிக் இன்டெக்ஸ் உள்ளதால் இரத்த சர்க்கரை அளவை திடீரென உயர்த்தாது. மேலும், பயிரில் உள்ள இரும்புச்சத்து நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்குவதோடு, அலர்ஜிகளுடன் போட்டியிட்டு குளிர்காலத்தில் நோய்களை அண்ட விடாது.
3. வால்நட்ஸ்: வால்நட்ஸை குளிர்காலத்தில் ஊற வைத்து சாப்பிடுவதால் கூடுதல் நன்மை கிடைக்கிறது. குறிப்பாக, இதில் உள்ள புரதங்கள், ஒமேகா3 கொழுப்பு அமிலங்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உடலுக்கு ஆரோக்கியத்தை அளிப்பதோடு, செரிமானத்தை சீராக்கி, இதய ஆரோக்கியத்தைக் காக்கிறது. அத்துடன் அறிவாற்றலையும் பெருகச் செய்கிறது.
4. ஓட்ஸ்: ஓட்சை இரவில் ஊற வைத்து காலையில் சாப்பிடுவதால் அதில் உள்ள நார்ச்சத்து காரணமாக செரிமானம் சீராகிறது. ஊற வைத்த ஓட்ஸ் கொலஸ்ட்ராலை குறைத்து இரத்த அளவை சீராக்குகிறது. அதோடு, இதய ஆரோக்கியத்திற்கும் நன்மை அளிக்கிறது.
5. பாதாம்: பாதாமை இரவு முழுவதும் ஊறவைத்து அடுத்த நாள் காலையில் சாப்பிடுவதால் அதிலுள்ள கால்சியம், மெக்னீசியம் ஆகியவை எளிமையாக உறிஞ்சப்பட்டு செரிமானத்தை சிறப்பாக வைக்கிறது. பாதாமை ஊறவைப்பதால் இதில் உள்ள பைடிக் அமிலம் இதில் கரைந்து, கனிமங்கள் எளிமையாக உடலில் சேர உதவும்.
மேற்கண்ட இந்த 5 உணவுகளையுமே குளிர்காலத்தில் ஊற வைத்து சாப்பிடுவதால் இரு மடங்கு பலன்களைத் தரும் என்பதால் சாப்பிட்டுப் பலன் பெறுவோம்.