தேவையானது:
கொத்தமல்லி விதை - 1 கப்
ஏலக்காய் - 2
பனஞ்சர்க்கரை - 2 டீஸ்பூன்
பால் - 1/2 டம்ளர்
செய்முறை:
அடுப்பில் வாணலியை வைத்து அதில் கொத்தமல்லி விதையை வறுத்து ஆற வைத்து மிக்ஸியில் பொடிக்கவும். (பாட்டிலில் போட்டு வைக்கவும்)
பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணி ஊத்தி ஒரு டீஸ்பூன் கொத்தமல்லி பொடி சேர்த்து கொதிக்க விட்டு ஏலக்காய் தட்டி சேர்த்து நன்கு கொதித்ததும் வடிகட்டி பால் பனஞ்சர்க்கைரை சேர்த்து பருகவும்.
பலன்கள்: இதில் மாங்கனீஸ் இரும்புச் சத்து, விட்டமின் சி, கே உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும், வயிற்றுப் புண்ணைப் போக்கும், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்.
தேவையானது:
புதினா இலை - 5
தேயிலை - 1 டீஸ்பூன்
தேன் அல்லது பனங்கற்கண்டு - 1 டீஸ்பூன்
பால் - விருப்பப்பட்டால்
செய்முறை:
ஒரு டம்ளர் நீரில் புதினா இலை, தேயிலை சேர்த்து கொதிக்க வைத்து சுண்டியதும் வடிகட்டி தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து பருகலாம். பால் விருப்பம் இருந்தால் சேர்க்கலாம்.
பலன்கள்: இதில் ஆண்டி ஆக்ஸிடன்ட் உள்ளதால் புண்களை குணப்படுத்தும். செரிமானத்தை மேம்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். வாய் துர்நாற்றத்தை போக்கும். இதில் உள்ள கால்சியம் பற்களை வலுவாக்கும்.
தேவையானது:
தேயிலை - 2 டீஸ்பூன்
கிராம்பு, ஏலக்காய் - தலா 2
பால் - 1/2 கப்
பட்டை - சிறு துண்டு
சர்க்கரை - 2 டீஸ்பூன்
செய்முறை:
பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து உரலில் நைசாக பொடிக்கவும். பாத்திரத்தில் ஒரு டம்ளர் நீரை கொதிக்க விட்டு, அதில் தேயிலை பொடித்த பொடியை கால் டீ ஸ்பூன் சேர்க்கவும். பாதியாக சுண்டியதும் இறக்கி வடிகட்டி பால் சர்க்கரை சேர்த்து பருகலாம்.
பலன்கள்: வைட்டமின் ஏ, பி, சி, இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம், ஆன்டி ஆக்சிடென்ட் நிறைந்துள்ளன. இது உயிர்நாலத்தை மேம்படுத்தும். புற்றுநோயை கட்டுப்படுத்தும். சர்க்கரை நோய் வராமல் தடுக்கும். உடல் வலிக்கு இது உடனடி நிவாரணம் கிடைக்கும்.
தேவையானது:
கிரீன் டீ - 1 டீஸ்பூன்
ஓமம் - 1 டீஸ்பூன்
பனங்கற்கண்டு - 1 டீஸ்பூன்
செய்முறை:
கிரீன் டீயுடன், ஓமத்தை சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்க விடவும். சாறு இறங்கியதும் வடிகட்டி தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து பருகலாம்.
பலன்கள்: வைட்டமின் ஏ, கே, இ, சி,போலிக் அமிலம் செலினியம் நிறைந்துள்ளன. இதில் போலிக் ஆசிட் உள்ளதால் கர்ப்பிணிகளுக்கு மிகவும் நல்லது. செரிமானத்தை மேம்படுத்தும். சளி இருமலை தடுக்கும். தொண்டைப் புண்ணை குணமாக்கும்.
தேவையானது:
கற்பூரவள்ளி இலைகள் - 5
மிளகு - 5
கிரீன் டீ - 1 டீஸ்பூன்
பனங்கற்கண்டு - 2 டீஸ்பூன்
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் நீர் ஊற்றி அடுப்பில் வைத்து கிரீன் டீ, ஓமவள்ளி இலைகள், மிளகு சேர்த்து கொதிக்க விடவும். நன்றாக கொதித்ததும் வடிகட்டி பனங்கற்கண்டு சேர்த்து பருகலாம்.
பலன்கள்: ஓமவள்ளியில் தைமால், டெர்பினாய்ட்ஸ் எதிர்ப்பு சக்தி நிறைந்துள்ளன. இது செரிமான பிரச்சனையை தடுக்கும். ஆஸ்துமாவை ஏற்படுத்தும் கிருமிகளை அழிக்கும். சளி இருமல் குணமாகும். மலச்சிக்கலை போக்கும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)