சர்க்கரை நோயாளிகளுக்கான 5 ஆரோக்கியமான சிற்றுண்டிகள்! 

5 Healthy Snacks for Diabetics!
5 Healthy Snacks for Diabetics!

இன்றைய காலத்தில் சர்க்கரை நோய் என்பது உலக அளவில் அதிகரித்து வரும் ஒரு பொதுவான நோயாகும். இது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு அதிகரிப்பதால் ஏற்படுகிறது. சர்க்கரை நோய்க்கு தற்போது வரை முழுமையான சிகிச்சை இல்லை என்றாலும், ஆரோக்கியமான உணவு உடற்பயிற்சி மற்றும் மருந்துகள் மூலம் இதை நிர்வகிக்க முடியும். எனவே சர்க்கரை நோயாளிகள் அவர்களது ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது மிகவும் முக்கியம். இதற்கு சரியான உணவு முறையை பின்பற்ற வேண்டும். 

சர்க்கரை நோயாளிகள் ஒரே அடியாக உணவுகளை சாப்பிடாமல் அவற்றை சிற்றுண்டிகளாக சாப்பிட்டால் ரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்கவும், அதிக பசியைக் கட்டுப்படுத்தவும் உதவும். இருப்பினும் அவர்கள் எல்லாவிதமான சிற்றுண்டிகளையும் சாப்பிட முடியாது. சில ஸ்நாக்ஸ் வகைகள் ரத்த சர்க்கரை அளவை விரைவாக உயர்த்தும் ஆபத்து இருப்பதால், அவர்கள் எதுபோன்ற சிற்றுண்டிகளை சாப்பிடலாம் என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

  1. காய்கறிக் கலவை: காய்கறிகள் நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்தவை என்பதால் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. எனவே கேரட், வெள்ளரிக்காய் போன்ற காய்கறிகளை நறுக்கி ஒன்றாக கலக்கி சாப்பிடுவது ஒரு சுவையான மற்றும் ஆரோக்கியமான சிற்றுண்டி ஆகும். 

  2. முட்டை: முட்டை புரதத்தின் சிறந்த மூலமாகும். இது உங்களுக்கு அதிக நேரம் வயிறு நிரம்பிய உணர்வைக் கொடுக்கும். இதில் ஆரோக்கியக் கொழுப்புகள் மற்றும் விட்டமின்கள் இருப்பதால் வேக வைத்த முட்டை, ஆம்லெட் போன்றவற்றை காய்கறிகளுடன் சேர்த்து சாப்பிடுவது சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற சிற்றுண்டியாக இருக்கும். 

  3. பருப்பு வகைகள்: பருப்பு வகைகளில் நார்ச்சத்து, புரதம் மற்றும் இரும்புச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவும். வேக வைத்த பருப்பு வகைகள், சாலட் அல்லது பருப்பு வகைகளால் செய்யப்பட்ட ஸ்னாக்ஸ் போன்றவை சர்க்கரை நோயாளிகளுக்கு ஆரோக்கியமானதாகும். 

  4. தயிர் மற்றும் பழங்கள்: தயிர் ப்ரோ பயோடிக்குகள் நிறைந்த ஒரு சிறந்த உணவு. இது செரிமான ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. தயிரில் கால்சியம் மற்றும் விட்டமின்கள் இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் தாராளமாக சாப்பிடலாம். மேலும், பழங்களில் விட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. தயிரில் பழங்களை சேர்த்து சாப்பிடுவது ஒரு சுவையான மற்றும் ஆரோக்கியமான சிற்றுண்டி உணவாகும். 

  5. நட்ஸ் மற்றும் விதைகள்: முந்திரி, பாதாம், வால்நட் போன்ற பருப்பு வகைகளில் புரதம் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு சிறப்பான சிற்றுண்டி உணவாக இருக்கும். இவற்றில் நிறைந்திருக்கும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நல்லது. 

இதையும் படியுங்கள்:
இரத்த சர்க்கரை அளவை சமநிலைப்படுத்த உதவும் 8 மூலிகைகள்!
5 Healthy Snacks for Diabetics!

இதே போல சர்க்கரை நோயாளிகளுக்கு ஏராளமான சிற்றுண்டி உணவுகள் உள்ளன. இவற்றை எடுத்துக்கொள்வதால் ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். எனவே சர்க்கரை நோயாளிகள் தங்களது தனிப்பட்ட விருப்பங்கள் மற்றும் தேவைகளுக்கு ஏற்ப இவற்றை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது முக்கியம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com