காலை நேரங்களில் வழக்கமாக அருந்தும் பால் சேர்த்து தயாரிக்கப்படும் டீயை விட அதிக ஆரோக்கியம் தரும் ஐந்து வகை ஹாட் ட்ரிங்க்ஸ் தெரியுமா?
தினமும் காலை வேளைகளில் வழக்கமாக அருந்தும் பால் சேர்த்து தயாரிக்கப்படும் தேநீருக்குப் பதில் வெவ்வேறு சுவையில் அதிக ஆரோக்கியம் தரக்கூடிய ஐந்து வகை சூடான பானங்கள் உள்ளன. அந்த ஐந்து வகை பானங்கள் மற்றும் அவற்றிலிருந்து கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
ஃபுரூட் டீயில் வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. இந்த டீ உடலை நீரேற்றத்துடன் வைக்கவும் உடலின் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும் உதவும். இயற்கை முறையில் நச்சுக்களை உடலிலிருந்து நீக்கவும் இந்த டீ உதவி புரியும். பொதுவாக ஆப்பிள், லெமன், ஹைபிஸ்கஸ், ரோஸ் ஹிப்ஸ் மற்றும் உலர் பழங்களை சேர்த்து இந்த டீயை தயாரிக்கலாம்.
புதினா டீ செரிமானத்தை சிறப்பாக்கும். தலை வலியைப் போக்கவும் ஸ்ட்ரெஸ்ஸைக் குறைக்கவும் உதவும். புதினாவின் குளுமை தரும் குணம் மற்றும் ஆன்டி பாக்டீரியல் குணமானது இரைப்பை குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். வாய் துர்நாற்றத்தைப் போக்கி சுவாசத்தை மணமுள்ளதாக்கும்.
டார்க் ஹாட் சாக்லேட்டில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம். இவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் மனநிலையை மகிழ்ச்சியுடன் வைக்கவும் உதவும். மூளையின் செயல்பாடுகள் சிறக்கவும் ஹாட் சாக்லேட் உதவி புரியும். இதிலுள்ள பிளவனாய்ட்கள் உடலின் வீக்கங்களைக் குறைக்கவும் உதவும்.
மாட்சா லாட்டேயில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. இவை உடலுக்குத் தேவையான சக்தியை தொடர்ந்து அளிக்கும். மெட்டபாலிச ரேட்டை அதிகரிக்கச் செய்யும். காஃபினின் குறுக்கீடின்றி, கவனம் சிதறாமல் கூர் நோக்குடன் செயல் புரிய உதவும், மாட்சா லாட்டே.
இஞ்சி டீ சிறப்பான செரிமானத்துக்கும், உடலின் வீக்கங்களைக் குறைக்கவும் உதவும். உடலின் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்யும். குமட்டலைக் குறைக்கும். இரத்த ஓட்டத்தை சீராக்கி இரத்தக் குழாய்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
இஞ்சி டீ செரிமானத்துக்கு உதவும் என்பதும் ஃபுரூட் டீ ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தவை, நீரேற்றம் தரும் என்பதும் ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளன. தனிப்பட்ட முறையில் ஆலோசனை பெற விரும்புவோர் ஊட்டச் சத்து நிபுணர் அல்லது மருத்துவரை கலந்தாலோசிப்பது நலம்.