மூங்கில் அரிசியின் முத்தான 5 முக்கியத்துவங்கள்!

5 Important benefits of Bamboo Rice
5 Important benefits of Bamboo Ricehttps://fiveelementorganic.com

மூங்கில் அரிசி என்பது நாள்பட்ட மூங்கிலின் தளிர் மூலம் வளர்க்கப்படும் ஒரு சிறந்த அரிசி வகையாகும். இந்த அரிசி சற்று இனிப்பான சுவையில், ஈரப்பதமாகவும், கைகளில் ஓட்டுவதுபோல, மெல்லும் தன்மையுடனும் இருக்கும். இதை பல்வேறு உணவுகளோடு சேர்த்து சாப்பிட சிறந்த உணவாகக் கருதப்படுகிறது.  அதுமட்டுமின்றி, மூங்கில் அரிசியின் ஊட்டச்சத்து உள்ளடக்கம், குறைந்த கிளைசெமிக் குறியீடு, வைட்டமின் பி, கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற வைட்டமின் சத்துக்கள் நிறைந்திருப்பதால் இது மிகச்சிறந்த ஆரோக்கியமான உணவாக விளங்குகிறது.

எங்கு தோன்றியது?

மூங்கில் அரிசி தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் பண்டைய காலங்களிலிருந்தே பிரபலமாக இருந்து வருகிறது. இது ஒருவகையான பாரம்பரிய சீன உணவாகும். குயிங் வம்சத்தின்போது, சீனாவின் ஹெபெய் மாகாணத்தில் உள்ள ‘ஜுக்சியன்’ கிராமத்தில்தான் மூங்கில் அரிசியின் தோற்றமானது முதன்முதலாக அறியப்பட்டது. உலகின் பல பகுதிகளில் பிரபலமாக இருக்கும் இந்த அரிசி வகை நம்முடைய இந்தியாவில், குறிப்பாக கேரள மாநில வயநாடு சரணாலயம் போன்ற பகுதிகளில் பழங்குடியின சமூகத்தினரால் அதிகளவில் அறுவடை செய்யப்படுகிறது. மேலும், இது அவர்களின் குறிப்பிடத்தக்க வருமானம் மற்றும் தினசரி வாழ்வாதாரத்துக்கு வழிவகுக்கிறது.

மூங்கில் அரிசியின் 5 முக்கியத்துவங்கள்:

கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தும்: மூங்கில் அரிசியில் அதிகளவிலான நார்ச்சத்து மற்றும் பைட்டோஸ்டெரால்கள் உள்ளன. இது நம்முடைய உடம்பின் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. கூடுதலாக, மூங்கில் அரிசியில் இருக்கும் சத்துக்கள் மன அமைதி மற்றும் கொழுப்பைக் குறைக்கவும் உதவுகிறது.

மனநிலையை மேம்படுத்துகிறது: பொதுவாகவே, மூங்கிலில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்கள் உடலின் நரம்பு மண்டல கோளாறுகள் உட்பட பல்வேறு பாதிப்புகளுக்கான பாதுகாப்பு பண்புகளை வழங்குகின்றன. அதோடு மூங்கில் விதைகளிலிருந்து தயாரிக்கப்படும் பிரவுன் ரைஸ், மனஅமைதி மற்றும் மனநிலையைக் கட்டுப்படுத்தும் திறன் நிறைந்து காணப்படுகிறது. செரோடோனின் மற்றும் டோபமைன் என்றழைக்கப்படும் இவ்விரண்டு அத்தியாவசிய நரம்பியல் கடத்திகளும் மனநிலையை மேம்படுத்தவும், அறிவாற்றல் திறனை அதிகரிக்கவும் உதவுகின்றன.

வாய் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்: மூங்கில் அரிசியில் வைட்டமின் பி6 பரவலாகக் கிடைக்கிறது. இந்தச் சத்தானது, பல் சொத்தைக்கு எதிராகப் போராடும் சக்தி கொண்டது. இது பாக்டீரியா, பற்சிதைவு அல்லது அழிவுக்கு எதிராகப் பற்களைப் பாதுகாக்கிறது. இயல்பாகவே வைட்டமின் பி6 அதிகமாக பயன்படுத்துவதன் மூலம் நம்முடைய பற்களை பலப்படுத்தலாம்.

இதையும் படியுங்கள்:
என்னது... ஒரு கைப்பையின் விலை 24 கோடி ரூபாயா?!
5 Important benefits of Bamboo Rice

எலும்புகளின் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும்: முடக்கு வாதம் மற்றும் பிற நாள்பட்ட நோய்கள் பெரும்பாலானவை உடலில் ஏற்படும் வீக்கத்தால்தான் ஏற்படுகின்றன. மேலும், இந்த நிலையானது எலும்புகள் மற்றும் மூட்டுப் பகுதிகளை பாதிப்படையச் செய்கிறது. மூங்கில் அரிசியில் ஃபிளாவனாய்டுகள், ஆல்கலாய்டுகள் மற்றும் பாலிசாக்கரைடுகள் உள்ளிட்ட பல உயர்சத்துகள் நிறைந்திருக்கின்றன. இந்தச் சத்துக்கள் முதுகு, இடுப்பு மற்றும் மூட்டு வலி வராமல் பாதுகாக்க உதவுகிறது.

குழந்தையின்மை பிரச்னை: குழந்தையின்மை பிரச்னை உள்ளவர்கள் இந்த மூங்கில் அரிசியை தினமும் காலையில் கஞ்சியாக செய்து தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் குழந்தையின்மை பிரச்னை விரைவிலேயே சரியாகும் எனக் கூறப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com