மோசமான வாழ்க்கை முறையே கெட்ட கொலஸ்ட்ராலுக்கு காரணமாக கருதப்படுகிறது. உடலில் கெட்ட கொழுப்பு அதிகரிக்கும் போது கைகள் மரத்து போதல், கால்களில் வலி, மார்பு வலி, குமட்டல், பார்வை மங்கலாகுதல், கரும்புள்ளிகள், கண்களில் வலி போன்ற அறிகுறிகள் தென்படுகின்றன. இதனை ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை மூலம் கட்டுப்படுத்த முடியும். ஆரம்ப கட்டத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்க உதவும் 5 இலைகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
கறிவேப்பிலை உடலில் கெட்ட கொழுப்பைக் குறைப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கறிவேப்பிலையில் உள்ள ஆண்டி ஆக்சிடெண்டுகள், நல்லகொழுப்பை அதிகரிக்க அவசியம் என்பதால் கறிவேப்பிலையின் நன்மைகளைப் பெற, தினமும் 8-10 இலைகளை சமையலில் பயன்படுத்துவதோடு , கறிவேப்பிலை சாற்றை குடிப்பதும் நன்மை பயக்கும். எனினும், இதை தினமும் சாப்பிடும் முன் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.
அனைத்து வீடுகளிலும் சமையலுக்கு பயன்படுத்தப்படும் கொத்தமல்லி இலைகள் சுவையை அதிகரிப்பதோடு ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் நன்மை பயக்கின்றன . அதிக கொழுப்பு பிரச்சனையை குணப்படுத்த கொத்தமல்லி இலைகளை உணவு வகைகளில் அதிகம் சேர்ப்பதோடு சட்னி செய்தும் சாப்பிடலாம்.
நாவல் பழ இலைகள் கொழுப்பைக் குறைக்க சிறந்த வீட்டு வைத்தியமாக கருதப்படுகின்றன. இதில் ஆண்டிஆக்சிடெண்டுகள் மற்றும் அந்தோசயினின்கள் போன்ற பண்புகள் நரம்புகளில் படிந்துள்ள கொழுப்பைக் குறைக்கும் பணியை செய்வதால் நாவல் பழ இலைகளை தூள் வடிவிலும் உட்கொள்ளலாம்.
வெந்தய இலைகளில் உள்ள மருத்துவ பண்புகள் உடலில் படிந்துள்ள அழுக்கு, கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைட்டின் ஆரோக்கியமான அளவுகளை பராமரிப்பதில் உதவுவதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே, கெட்ட கொழுப்பை குறைக்க வெந்தயக்கீரையை அவ்வப்போது உட்கொள்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.
துளசி இலைகள் கொழுப்பு அளவை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதில் உள்ள பண்புகள் வளர்சிதை மாற்ற அழுத்தத்தைக் குறைக்க உதவி, உடல் எடை மற்றும் கொழுப்பைப் பராமரிக்கிறது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் 5-6 துளசி இலைகளை உட்கொள்வதோடு, துளசி தேநீரும் குடிக்கலாம். மேற்கூறிய 5 வகை இலைகளும் கெட்ட கொழுப்பை குறைக்கும் என்பதால் தவறாமல் பயன்படுத்தி ஆரோக்கியம் பெறுங்கள்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)