குடல், வயிற்று சுவர் மற்றும் வயிற்றின் பிற உறுப்புகள் என வயிற்றின் எந்தப் பகுதியிலும் கட்டி வளரும். ‘ஸ்டொமக் டியூமர்’ என்று அழைக்கப்படும் கட்டிகள் சாதாரணமாகவோ அல்லது புற்றுநோய் கட்டிகளாகவோ இருக்கலாம். இத்தகைய கட்டிகள் ஆரம்பத்தில் ஏற்படும்போது உணர்த்தும் 5 அறிகுறிகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
வயிற்றுக் கட்டிக்கான அறிகுறிகள்:
1. வயிற்றில் வீக்கம் அல்லது குவியல் போன்ற தோற்றம் இருந்தால் கட்டி இருக்கலாம். நாளடைவில் இந்தக் கட்டி பெரிதாகி தொடும்போது வலிக்க ஆரம்பித்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.
2. வயிற்றில் வலி உருவாகி நாளடைவில் அது அதிகரித்தால் கட்டிக்கான அறிகுறியே இது. கட்டியின் அளவு அதிகரிக்கும்போது வலியின் தீவிரமும் அதிகரிக்கும் என்பதால் அத்தகைய அறிகுறிகளை உணர்ந்தால் உடனே மருத்துவரின் உதவியை நாட வேண்டும்.
3. எந்த முயற்சியும் இல்லாமல் திடீரென, விரைவான எடை இழப்பு வயிற்றுக் கட்டியின் அறிகுறியாக இருக்கலாம். இந்த சூழ்நிலையில் ஒரு நபர் குறைந்த பசியை உணர்கிறார். எந்தவொரு வெளிப்படையான காரணமும் இல்லாமல் உங்கள் எடை வேகமாக குறைந்துகொண்டே இருந்தால். உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.
4. வயிற்றில் கட்டி இருந்தால் செரிமானம் பாதிக்கப்பட்டு இதன் காரணமாக மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, அஜீரணம், குமட்டல் மற்றும் வாந்தி போன்ற பிரச்னைகள் ஏற்படும். நீண்ட கால செரிமான பிரச்னைகளுக்கும் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்வதே நல்லது.
5. வயிற்றில் கட்டி இருக்கும்போது, உடலில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டு, உடலில் உள்ள ஆற்றல் பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக, நபர் எப்போதும் சோர்வாகவும் பலவீனமாகவும் உணர்கிறார். சரியான உணவு மற்றும் போதுமான ஓய்வு இருந்தபோதிலும், சோர்வாகவும் பலவீனமாகவும் உணரும் நபர் மருத்துவரை அணுக வேண்டும்.
விரைவான எடை இழப்பு, சோர்வு, பலவீனம் செரிமான பிரச்னை வாந்தி, வயிற்று வலி போன்ற கோளாறுகள் தொடர்ந்து இருந்தால் இவை வயிற்று கட்டிக்கான அறிகுறிகளாக இருப்பதால் மருத்துவரின் ஆலோசனையை பெற முயற்சிப்பது நல்லது.