க்ரானிக் கிட்னி வியாதி (Chronic kidney disease) என்பது உங்கள் சிறுநீரகம் சரியாக செயல்பட முடியாததை உணர்த்துகிறது. இதற்கு பல காரணங்கள் உள்ளன. சில அறிகுறிகளை காட்டி இந்த பிரச்னை இருப்பதை உணர்த்துகிறது. அந்த 5 அறிகுறிகள் என்னென்ன என்பதை இப்பதிவில் காண்போம்.
கண் வீக்கம், கால் வீக்கம்
உங்கள் கண் காலையில் எழுந்திருக்கும் போது வீங்கிய படி உள்ளதா? சிறுநீரகம் சரியாக செயல்படாததால் அது புரதத்தை சிறுநீரில் சேர்த்து விடுகிறது. இந்த நிலையை புரோட்டினூரியா(Proteinuria) என்று கூறுவார்கள் . இது உடல் முழுவதும் பரவுவதால் காலில் வீக்கமாக இடிமா என்னும் நிலையும் ஏற்படுகிறது. சிறுநீர் சரியாக வெளியேறாமல் இந்த நிலைமைகள் ஏற்படுகின்றன. சில சமயம் முகமும் வீக்கமாக காணப்படும். இந்த அறிகுறி இருந்தால் சிறுநீரகம் பிரச்னையில் உள்ளது எனப்பொருள்.
சிறுநீரில் மாற்றங்கள் :
சிலர் நேரமற்ற நேரத்தில் சிறுநீர் கழிப்பார்கள். சிலருக்கு சிறுநீர் நுரையுடன் காணப்படும்.
இதற்கெல்லாம் காரணம் புரதம் சிறுநீரில் கலப்பதால் தான் என தெரிகிறது. சிலசமயம் சிறுநீரில் இரத்தம் வரும் இந்த நிலையை hematuria என்று கூறுவார்கள். இது சிறுநீரகத்தில் அழற்சி மற்றும் காயம் ஏற்பட்டிருப்பதை குறிக்கிறது. சிலருக்கு சிறுநீர் சிவப்பாக இருக்கும் இது சிறுநீரகத்தில் கற்கள் இருப்பதை குறிக்கிறது.
சோர்வு பலவீனம் :
சிறுநீரக பிரச்னைக்கு ஆளானவர்கள் மிகவும் சோர்வுடன் காணப்படுவார்கள். இது சிறுநீரகம் உடலில் உள்ள நச்சுக்களை நீக்காமல் சரியாக செயல்படாமல் இருப்பதை உணர்த்துகிறது. இதனால் நச்சுக்கள் உடலில் சேர்ந்து சோர்வு ஏற்படுவதை யுரீமியா என்பார்கள். இதனால் இரத்த சிவப்பு அணுக்கள் குறைந்து அனீமியா ஏற்படும். ஆகவே இந்த நிலை ஏற்படும்போது மருத்துவ சோதனை அவசியமாகிறது.
வெடிப்பும் அரிப்பும் நிறைந்த சருமம் :
உடலின் நச்சுக்கள் வெளியேறாவிட்டால் சருமம் மிக வறண்டதாக ஆகிவிடும். சிறுநீரக பிரச்சனை உள்ளவர்களுக்கு சருமத்தில் கொப்பளங்களும் ஏற்படும். இது சிறுநீரகம் மோசமான நிலையில் இருப்பதை உணர்த்துகிறது.
கால்களில் ஏற்படும் நரம்பு இழுப்பு :
சிறுநீரகம் சரியாக செயல்படாத போது கால்சியம், பொட்டாசியம் மற்றும் பாஸ்பேட் போன்றவை சமநிலையில் இல்லாமல் போகும். இதனால் தசைகளில் பாதிப்பு ஏற்பட்டு இழுத்துக் கொண்டு வலியை ஏற்படுத்தும். இவை தூங்கும் சமயத்தில் ஏற்பட்டு நமக்கு பிரச்சனை தரும். நரம்பு இழுப்பு பாதிப்பு சிறுநீரகம் சரியாக செயல்படாததை உணர்த்துகிறது.
மேற்கூறிய பாதிப்புகள் ஏற்பட்டால் மருத்துவ பரிசோதனை மூலம் பிரச்னையைக் கண்டறிந்து தீர்வு காண்பது நல்லது.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)