
எவ்வளவு கடினமாக வேலை செய்தாலும் செய்யாவிட்டாலும் ஒரு மனிதனுக்கு இரவு எட்டு மணி நேர தூக்கம் என்பது மிகவும் அவசியம். ஏனெனில் இந்தத் தூக்கம்தான் அடுத்த நாளுக்கான எனர்ஜியாக இருக்கிறது. ஒரு இரவில் ஆழ்ந்து 8 மணி நேரம் தூங்கினால் நம் மூளையின் சக்தி 30 சதவீதம் அதிகரிப்பதோடு, நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரித்து மன அழுத்தத்தை குறைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அத்தகைய நிம்மதியான தூக்கத்திற்கு, தூங்குவதற்கு முன் செய்ய வேண்டிய 5 விஷயங்கள் குறித்து இப்பதிவில் காண்போம் .
1. ஸ்க்ரீன்களுக்கு 'பை' சொல்லுங்க:
மொபைல் போனிலிருந்து வரும் ப்ளூ லைட் தூக்க ஹார்மோனான மெலடோனின் உற்பத்தியை 50 சதவீதம் வரை குறைப்பதாக 2022-ல் வெளிவந்த ஸ்டான்ஃபோர்ட் ஆய்வு கூறுகிறது. ஆகவே தூங்குவதற்கு அரை மணி நேரம் முன்பாக போன், லேப்டாப், டிவி இவற்றை பார்ப்பதை தவிர்த்து விட்டு அதற்கு பதிலாக புத்தகம் படிப்பது, இதமான பாடல்கள் கேட்பது என மனதை ரிலாக்ஸ் செய்து தூக்கத்திற்கு தயாராக வேண்டும்.
2. ஒரு சின்ன நன்றி டைரி:
அன்றைய தினம் நடந்த நல்ல 3 விஷயங்களை டைரியில் எழுதினால் மன அழுத்தம் 25 சதவீதம் குறைவதாக 2019-ல் கலிபோர்னியா யூனிவர்சிட்டி நடத்திய ஒரு ஆய்வு கூறுகிறது. அதாவது ஒரு சின்ன டைரியில் இன்று தோழனுடன் பேசினேன்; ஒரு நல்ல காபி அருந்தினேன்; ஒரு நல்ல திரைப்படம் பார்த்தேன் என்பது போன்ற விஷயங்களை எழுதும்போது மூளை சமநிலை அடைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
3. ஒரு லைட் ஸ்ட்ரெச்சிங்:
உடற்பயிற்சி கூடத்திற்கு செல்லாதவராக இருந்தாலும் தூங்குவதற்கு முன்பாக இரவு ஒரு 5 நிமிஷ ஸ்ட்ரெச்சிங் உடற்பயிற்சி செய்வது 40% ஆழ்ந்த தூக்கத்தை அனுபவிக்க வழி வகுக்கும் என 2021-ல் ஒரு ஜப்பானில் நடைபெற்ற ஆய்வு கூறுகிறது.
ஆகவே இரவு தூங்குவதற்கு முன்பாக மெதுவாக கை கால்களை நீட்டி ஒரு சிறிய மூச்சுப் பயிற்சி செய்தால் உடம்பில் டென்ஷன் குறைந்து தூக்கத்திற்கு பாதை அமைக்கும்.
4. ஒரு கப் ஹெர்பல் டீ:
இரவில் தூங்குவதற்கு முன்பாக கெமோமைல் டீ அல்லது லாவண்டர் டீ குடிப்பது தூக்கத்திற்கு தேவையான மெலடோனின் அளவு 20% அதிகரிப்பதாக 2020ல் ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட ஆய்வு அறிவுறுத்துகிறது. ஆகவே இரவில் ஒரு சிறிய ஹெர்பல் டீ சர்க்கரை இல்லாமல் குடிப்பதால் உடலும் மனதும் குளிர்ச்சியாகி ஆனந்த தூக்கம் கண்களை தழுவும்.
5. ஒரு சின்ன தியானம்:
இரவு தூங்குவதற்கு முன்பாக ஐந்து நிமிட தியானம் செய்வது 35 சதவீதம் கெட்ட கனவுகளை குறைக்கிறது. மேலும் இதனால் காலையில் 50 சதவிகித அதிக புத்துணர்ச்சி கிடைப்பதாக 2024 இல் வெளிவந்த எம்ஐடி ஆய்வு கூறுகிறது. ஆகவே இரவு தூங்குவதற்கு முன்பாக ஒரு அமைதியான இடத்தில் அமர்ந்து மெதுவாக மூச்சுப் பயிற்சி செய்து எண்ணங்களுக்கு விடுதலை கொடுத்து தூங்கச் சென்றால் தூக்கம் இனிமையாகும்.
மேற்கூறியவற்றை தொடர்ந்து ஒரு மாத காலம் செய்வதனால் ஆழ்ந்த தூக்கம் கண்களைத் தழுவி அதிகாலை புத்துணர்ச்சியை அனுபவிப்பீர்கள் என்பதில் சற்றும் ஐயமில்லை.