
நாம் உட்கொள்ளும் உணவுகளின் அடிப்படையிலேயே நம் உடல் ஆரோக்கியம் பெறுகிறது. சமீப காலத்தில் விழிப்புணர்வு எழுச்சி பெற்றதின் காரணமாக, எந்த வகை உணவுகளை ஏற்றுக்கொள்வது, எவைகளைத் தவிர்ப்பது என்ற ஞானம் நிறையப் பேருக்கு வந்து விட்டது என்றே கூறலாம். இந்த விஷயத்தில், பகவத் கீதை என்ன கூறுகிறது என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
1. சாத்விக் ஃபுட்: கண் கவர் வண்ணம் கொண்ட ஃபிரஷ் ஃபுரூட்ஸ், காய்கறிகள், தானிய வகைகள், தங்கம் போல் தக தகவென மின்னும் நெய் போன்ற உணவுகள் உடலுக்கு உயிரோட்டமும், தெளிவும் அளித்து வாழ்நாளை நீடிக்க உதவுபவை. இவை ஆன்மாவிற்கு புனிதமான எரிபொருள்போல் செயல் புரிந்து பக்தி உணர்வை வளர்க்கவும் உதவி புரியும்.
2. ராஜாசிக் ஃபுட் (Rajasic Food): மிளகாய் தூள், உப்பு, எண்ணெய் போன்ற சுவையூட்டிகள் அதிகம் சேர்த்து, அதிக சூட்டில் கிளறி நாவில் ஜலம் ஊறச் செய்யும்படி தயாரிக்கப்படும் ஸ்னாக்ஸ் மற்றும் ஸ்ட்ராங் காபி ஆகியவை ஆரம்பத்தில் ருசியாக இருந்தாலும் விரைவில் ருசி குன்றிப் போய்விடும். அவைகளிலிருந்து கிடைக்கும் சக்தியும் சீக்கிரமே குறைந்து, உடல் சோர்வுற்ற நிலைக்குத் தள்ளப்படும். பேரார்வம் காரணமாக இவ்வுணவுகளை நாடுவது அமைதியை குலைத்துவிடும் என எச்சரிக்கிறார் பகவான் கிருஷ்ணர்.
3. தமாசிக் (Tamasic)ஃபுட் (உயிர்ப்பில்லாத உணவுகள்): உயிரோட்டமில்லாத, நிறம் மங்கி தரமற்றுப்போன, பழைய உணவுகளை உட்கொள்வது நமது மூச்சையடைக்கச் செய்யும். கெட்ட வாடை வரும் பழைய உணவை மறுபடியும் சூடுப்படுத்தி உண்பது, நம் மூளையின் செயலாற்றும் திறனையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் குறையச் செய்யும்.
4. சமநிலையான உணவு: பசியெடுத்து உணவு உண்ண ஆரம்பிக்கையில் கூடுதலாகவும் இல்லாமல், குறைவாகவும் இல்லாமல் சமநிலையில் உண்பது அவசியம். அரை வயிறு உணவு, கால் வயிறு தண்ணீர், கால் வயிறு வெற்றிடம் என்கிறார் பகவான். இம்முறையைப் பின்பற்றியே சன்னியாசிகள் நீண்ட காலம் ஆரோக்கியம் பெற்று வாழ்ந்துள்ளனர்.
5. மைண்ட் ஃபுல்னெஸ்: உணவு உட்கொள்வதில் மைண்ட் ஃபுல்னெஸ் என்பது மெடிடேஷன் மாதிரி. முழு கவனத்தையும் உணவில் செலுத்தும்போது ஜீரணம் சிறப்பாகும். ஆன்மாவும் அமைதியுறும். இதையே இன்றைய விஞ்ஞானம் எதிரொலிக்கிறது. மைண்ட் ஃபுல் ஈட்டிங், ஸ்ட்ரெஸ் குறையவும், அதிகம் உண்ண வேண்டும் என்னும் ஆவலை கட்டுப்படுத்தவும் உதவும்.
6. அன்புடன் சமைப்பது ஆரோக்கியம்: கோபமான உணர்வோடு சமைப்பது அதன் தாக்கத்தை சமைத்த உணவில் பிரதிபலிக்கச் செய்யும். சாத்விக் கிச்சனில் சமைக்கப்படும் உணவில் அன்பு, அமைதி, பிரார்த்தனை ஆகியவையும் கலந்திருக்கும். இவை அனைத்தும் அந்த உணவை உட்கொள்பவருக்கு கிடைக்கும் சக்தியிலும், இரத்த ஓட்டத்திலும் கலந்துவிடும் என்பது கல்வியாளர்களால் உறுதி செய்யப்பட்ட உண்மை.
7. கீதையின் உபதேசம்: உணவு உடலுக்கு ஒரு புனிதமான எரிப்பொருளாகக் கருதப்படுகிறது. உணவை மகிழ்ச்சிக்காக உட்கொள்ளாமல், ஒவ்வொரு கைப்பிடியும் நமக்கு சக்தி அளிக்கிறது என்று நினைத்துக் கொண்டோமானால் அது நம்மை தர்மத்தை நோக்கி ஒரு படி முன்னோக்கிச் செல்ல உதவும்.
8. காலநிலைக்கேற்ற உணவு: இயற்கையுடன் ஒத்திசையுமாறு, குளிர் காலத்தில் சூடான ஸ்டூ (Stew), கோடை காலத்தில் குளுமை தரும் பழங்கள் என வகை பிரித்து உட்கொள்ளும்போது உடல், தேவைக்கேற்றபடி உள்ளுறுப்புகளை சமநிலைப்படுத்தி வைத்து ஆரோக்கியதைப் பாதுகாக்கும். கீதையில் கூறப்பட்டது தற்காலத்திற்கும் பொருந்தி வருவதை நாம் காண முடிக்கிறது.
9. சவுச்சா-Saucha (Purity): இரசாயனம் அல்லாத மற்றும் உயிர்வதைக்குட்படாத உணவுகளையே கீதை பரிந்துரை செய்கிறது. ஃபிரஷ், ஆர்கானிக் மற்றும் உயிரோட்டம் பெற உதவும் உணவுகளை தேர்ந்தெடுத்து உண்பது ஆரோக்கியம் தரும் எனவும், சுத்தமான உடல், மாசற்ற மனம் மற்றும் மேன்மை பெற்ற ஆன்மா கொண்டிருப்பது மிகச் சிறந்ததெனவும் கீதை அறிவுறுத்துகிறது.
கீதையின் அறிவுறுத்தலை மனதில் ஏற்று 'மைண்ட் ஃபுல்னெஸ்' என்னும் மந்திரத்தைப் பின் பற்றுவோமாயின் ஆரோக்கியம் நம் வசப்படும்.