அஜீரண பிரச்னைக்கு குட்பை சொல்லும் 5 விஷயங்கள்!

5 things to say goodbye to indigestion
5 things to say goodbye to indigestionhttps://tamil.boldsky.com

செரிமானமின்மை பிரச்னை கண்டிப்பாக நம் வீட்டில் யாராவது ஒருத்தருக்கு இருக்கும். ஏன் எதற்காக இந்த அஜீரணப் பிரச்னை ஏற்படுகிறது என்று நாம் எப்போதாவது யோசித்திருக்கிறோமா? உடனே சோடா குடிப்பது, அலோபதி மருந்தில் இருக்கும் ஜல்களை வாங்கி அருந்துவது என செய்து தற்காலிக நிவாரணம் பெற்று வருகிறோம். நமக்கு ஏற்படும் செரிமானப் பிரச்னை எதனால் ஏற்படுகிறது? அது ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? அதைத் தெரிந்து கொண்டால் எளிதாக இந்தப் பிரச்னையை தவிர்க்கலாம். அது குறித்து இந்தப் பதிவில் காணலாம்.

1. சூடான உணவு: நீங்கள் எந்த நேரத்தில் சாப்பிட உட்கார்ந்தாலும் சாப்பிட போகும் உணவுகள் சூடாக இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள். அதற்காக பழைய உணவை சுட வைத்து சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ள கூடாது. ஏனென்றால், அந்தந்த நேரத்தில் புதிதாக மற்றும் சூடாக சமைக்கப்பட்ட உணவுகளையே நம் உடல் எளிதில் ஜீரணம் செய்து கொள்ளும். ஆறி போன உணவுகள் அல்லது ஃபிரிட்ஜிலிருந்து நேரடியாக எடுத்து சாப்பிடும் உணவுகள் உடலின் ஜீரண சக்தியை குறைத்து, செரிமானக் கோளாறுகளுக்கு வழிவகுக்கிறது.

2. பசிக்கும்போது சாப்பிடுங்கள்: பசி இல்லாத நேரங்களில் ஸ்நாக்ஸ் அல்லது உணவுகளை சப்பிட்டே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் சாப்பிடாதீர்கள். மூன்று வேளையும் சாப்பிடுவது அவசியம் என்றாலும், பசியே இல்லாமல் உணவுகளை கட்டாயத்தின் பேரில் சாப்பிடுவது ஜீரண சக்தியை பாதிக்கும். தினமும் சாப்பிடுவதற்கான நேரம் அடங்கிய அட்டவணையை பின்பற்றுவதன் மூலம் ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரத்தில் தானாகவே பசியை உணரும் சூழல் ஏற்படும். எனவே, நேர அட்டவணையை தயார் செய்து கொள்ளுங்கள். எல்லா உணவுகளையும் சாப்பிட நினைக்காமல் உங்கள் பசிக்கு ஏற்ற அளவு சாப்பிடுவது, உணவுகளை சரியாக ஜீரணிக்க உங்கள் உடலுக்கு போதுமான நேரத்தை ஏற்படுத்தித் தரும்.

3. நன்றாக மென்று சாப்பிடுங்கள்: உண்மையில் சரியான செரிமான செயல்முறை நாம் உணவுகளை வாயில் வைத்து சாப்பிடும் முறையில் தொடங்குகிறது. உணவுகளை நன்றாக மென்று சிறு துண்டுகளாக உடைத்து முடிந்தவரை கூழாக்கி சாப்பிடுவது செரிமானத்தை மேலும் எளிதாக்குகிறது. உணவுகளை நன்றாக மென்று சாப்பிடாமல் அப்படியே விழுங்குவது, குறைந்த ஊட்டச்சத்துக்களின் உறிஞ்சலுடன் தொடர்புடையது. எனவே, செரிமானத்தை மேம்படுத்த உணவை நன்றாக மென்று சாப்பிடுவது அவசியம்.

4. சம்பந்தமில்லாத உணவுகள்: பழங்களுடன் பால் அல்லது காய்கறிகள், பீன்ஸ் ஆகியவற்றுடன் முட்டைகள் அல்லது பழங்களை அடுத்தடுத்து சாப்பிடுவது செரிமான ஆரோக்கியத்தை பாதிப்படைய செய்யும். ஒன்றுக்கொன்று பொருத்தமற்ற உணவுகளை சேர்த்து சாப்பிடுவது அஜீரண அபாயத்தை அதிகரிக்கும்.

இதையும் படியுங்கள்:
வாஷிங் மிஷினை க்ளீன் செய்ய வேண்டுமா? ஒரு சீக்ரெட் பட்டனை கண்டுபிடித்த டிக்டாக்கர்!
5 things to say goodbye to indigestion

5. தண்ணீர் அவசியம்: நாளொன்றுக்கு பரிந்துரைக்கப்பட்ட அளவை விட குறைவாக தண்ணீர் குடிப்பது மலச்சிக்கல் மற்றும் தலைவலி மற்றும் சிறுநீரக கற்கள் போன்ற பிற உடல்நலப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். தவிர போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் விடுவது பசியை ஏற்படுத்தி அதிக உணவை சாப்பிட வழிவகுக்கும். எனவே, தண்ணீர் மட்டுமின்றி ஃபிரஷ் ஜூஸ், மூலிகை டீ உள்ளிட்டவற்றையும் பருகலாம்.

மேற்கண்ட இந்த ஐந்து விஷயங்களை நாம் முறையாக பின்பற்றினால் போதும். அப்புறம் என்ன செரிமானமின்மை பிரச்சனைக்கு குட் பை சொல்லிடுங்களேன்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com