வாஷிங் மிஷினை க்ளீன் செய்ய வேண்டுமா? ஒரு சீக்ரெட் பட்டனை கண்டுபிடித்த டிக்டாக்கர்!

Washing machine
Washing machine

பல பெண்களின் வேலை பளுவை குறைக்க அனைத்திற்கும் தற்போது மிஷின்கள் வந்துவிட்டன. அப்படி ஒரு தீர்வு தான் வாஷின் மெஷின். வாஷிங் மெஷின் வந்த பிறகு பலருக்கும் துவைக்கும் பிரச்சனை குறைந்துவிட்டது. அதுவே துவைத்து காய வைத்து விடுவதால் பலருக்கும் வேலை குறைவு என்றே சொல்லலாம்.

வாஷிங் மெஷினில் பவுடரோ, சோப் Liquid ஊற்றி விட்டால் அதுவே கரைந்து துவைத்து விடும். ஆனால் அந்த சோப் பொடி போடும் டப்பா நாளடைவில் வெள்ளை வெள்ளையாக படிந்து பூச்சி பிடிக்கும். இதனை க்ளீன் செய்வது எப்படி என தெரியாமல் பலரும் கவலையில் இருப்பார்கள். இந்த பிரச்சனையை போக்கும் விதமாக பிரபல டிக்டாக்கர் ஒருவர் ஒரு பட்டனை கண்டுபிடித்துள்ளார்.

இந்த பட்டனை அழுத்துவதன் மூலம், அந்த டப்பா வெளியே வந்துவிடுவதாக அதில் குறிப்பிடுகிறார். இதனை நீங்கள் வெந்நீரில் போட்டு கழுவி விட்டு பிறகு பயன்படுத்துவதன் மூலம் உங்கள் வாஷிங் மெஷின் அழுக்காமல் தடுக்கலாம். பிறகு அந்த சோப் பொடி நன்றாக வேலை செய்து துணியை அலசிவிடும்.

இதையும் படியுங்கள்:
பிளாஸ்டிக் அரிசியை கண்டுபிடிப்பதற்கான ஈசி டிப்ஸ்!
Washing machine

2022 ஆம் ஆண்டில், அந்த பெண் தனது வாஷரின் முன் மற்றும் பின் புகைப்படங்களை பேஸ்புக் பக்கத்தில் கிளீனிங் டிப்ஸ் அண்ட் ட்ரிக்ஸ் என்ற பக்கத்தில் வெளியிட்டார்.

ஆனால் பலருக்கும் இந்த பட்டன் எங்கே இருக்கும் என தெரியவில்லை. வாஷிங் மெஷினுக்குள் யாரும் பார்த்திடாத வகையில் ஒரு சீக்ரெட் பட்டன் இடம்பெற்றிருக்கும். இந்த பட்டனை அழுத்துவதன் மூலம் உங்கள் வாஷிங் மெஷின் சுத்தமாக இருக்கும். நீண்ட நாட்கள் உழைக்கும் எனவும் சொல்லலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com