சுறுசுறுப்பூட்டும் 5 வகை ஆரோக்கிய காலை உணவுகள்!

Healthy Breakfast
Healthy Breakfast

- மணிமேகலை

காலை உணவு அத்தியாவசியமான ஒன்று. அன்றைய நாளில் நம்முடைய மனநிலையைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு இதற்கு உண்டு என்றே சொல்லலாம்.

காலை உணவு பொங்கல் என்றால் அன்றைய நாள் முழுவதும் தூக்க கலக்கத்தில் தான் நாம் மிதந்து கொண்டிருப்போம் அல்லவா ..?

நம்மை நாள் முழுவதும் புத்துணர்வாக, சுறுசுறுப்பாக, ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளும் காலை உணவுகள் உள்ளன. அவைகளில் ஒருசில உணவுகளைப் பற்றி இந்தப் பதிவிலே காண்போம்.

முளைகட்டிய பயிறுகள்:

பொதுவாக முளைகட்டிய உணவுகள் என்றாலே ஆரோக்கியம் தான். இதில், புரதம் மற்றும் வைட்டமின் பி சத்துகள் உள்ளன. முளைகட்டிய பயறுகளை சாலட் வடிவில் காலை உணவாக எடுத்துக்கொள்ளலாம். இது நமது மன ஆரோக்கியத்தையும் உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

சியா விதைகள்:

இதில் ஒமேகா 3 என்ற கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இந்த ஒமேகா 3 அமிலங்கள் பதட்டம் மற்றும் மனச்சோர்வை குறைப்பதன் மூலம் அன்றைய நாளை புத்துணர்வாக வைத்து கொள்ள உதவுகிறது

சியா விதைகளுடன் ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த ஸ்ட்ராபெரி மற்றும் பிளூபெரி பழங்களை காலைஉணவாக எடுத்துக்கொள்ளலாம்.

ஓட்ஸ்:

மனநிலையை ஒழுங்குபடுத்துவதற்கு உதவும் முக்கிய ஹார்மோனான செரோடோனின் அளவை ஓட்ஸ் அதிகரிக்கிறது. மேலும், இது கார்போஹைட்ரேட் நிறைந்த உணவு. ஆகும். அவரவர் விரும்பம் போல ஓட்ஸ் உப்புமா செய்து சாப்பிடலாம்.

வாழைப்பழம்:

வாழைப்பழத்தில் டிரிப்டோபான் ஹார்மோன் உள்ளது. இது 'மகிழ்ச்சியூட்டும் ஹார்மோன்' என்றும் அழைக்கப்படுகிறது. காலையில் வாழைப்பழ smoothy செய்தும் சாப்பிடலாம் அல்லது ஸ்ட்ராபெ்ரி, தேன் மற்றும் புளிப்பு சுவை இல்லாத பழங்களுடன் கலந்து சாலட் ஆகவும் சாப்பிடலாம். இதன் மூலம் அன்றைய நாளை மகிழ்ச்சியாக ஆரோக்கியமாக கழிக்கலாம்.

இதையும் படியுங்கள்:
மூட்டு வலி உள்ளவர்களுக்கு ஏத்த பாட்டி வைத்தியம்! 
Healthy Breakfast

பாரம்பரிய காலை உணவுகள்:

எளிதில் செரிமானம் ஆகக்கூடிய வேகவைத்த உணவுகளான இட்லி, புட்டு, களி, கஞ்சி போன்ற உணவுகளையும் எடுத்துக் கொள்ளலாம்

மேலே குறிப்பிட்ட காலை உணவுகள் அன்றைய நாளை புத்துணர்வாக்க நம்மை தயார்படுத்தும் ஒரு உந்து சக்தி. நம் உடலை இயங்க வைப்பதற்கான மூலப்பொருள். எனவே, காலை உணவைத் தவிர்க்கமால் எடுத்துக்கொள்ளவேண்டும். காலை உணவை தவிர்ப்பது உடல் ஆரோக்கியத்தைப் பாதிக்கும். மேலும், உடல் உறுப்புகளை ஆற்றலை இழந்து சோர்வடையத் தொடங்கிவிடும். காலை உணவைத் தொடர்ந்து சாப்பிடாமல் தவிர்த்தோமானால் சர்க்கரை நோய் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com