சுலபமான கருத்தரிப்பிற்கு உதவும் 5 வகை தாவர விதைகள்!

Chia seeds and Flax seeds
Chia seeds and Flax seedshttps://draxe.com
Published on

ன்றைய காலத்து நாகரிக மங்கையர்கள் தங்கள் திருமணத்திற்குப் பின் உடனடியாக குழந்தை பெற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. மாறாக தங்களின் வேலை நிரந்தரமாவதிலும், சொந்த வீடு மற்றும் கார் போன்றவையெல்லாம் வாங்கி வாழ்க்கையில் செட்டில் ஆன பிறகு குழந்தை பெற்றுக்கொள்ளும் திட்டத்தில் வேலை செய்து கொண்டிருக்கின்றனர். இதில் சில விதிவிலக்கான பெண்களும் உண்டு. எது எப்படியாயினும் பொதுவாக, பெண்களின் கருத்தரிப்பிற்கு அவர்களுக்கு பயன் தரக்கூடிய 5 விதைகள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

* வெள்ளை மற்றும் கருப்பு எள் விதைகளில் சிங்க் என்ற கனிமச் சத்து அதிகம் உள்ளது. இது பெண்களின் கருவுறுதல் சம்பந்தப்பட்ட செயல்களில் உதவக்கூடிய ஹார்மோன் சுரப்பை ஊக்குவித்து தேவையான அளவு  ஹார்மோன் சுரக்க உதவி புரியும்.

* சூரியகாந்தி விதைகளில் வைட்டமின் E மற்றும் ஃபொலேட் ஆகிய சத்துக்கள் அதிகம் உள்ளன. இவை செல் சிதைவைத் தடுக்கவும், நரம்புக் குழாய் (Neural Tube) குறைபாடுகளை நீக்கவும் உதவுகின்றன.

* பூசணி விதைகளில் சிங்க் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத் தேவையான ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களும் அதிகளவில் உள்ளன. இவை கருவுறுதலை ஊக்குவிக்கவும், கருவின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கும் பெரிய அளவில் உதவி புரிகின்றன.

இதையும் படியுங்கள்:
வயதான தோற்றத்தைத் தள்ளிப்போட உதவும் 8 வழிகள்!
Chia seeds and Flax seeds

* ஃபிளாக்ஸ் விதைகளில் உள்ள லிக்னன்ஸ் (Lignans) என்ற பொருள் கருவுறுதலை ஊக்குவிக்கவும், ஹார்மோன் சுரப்பின் அளவை சமநிலையில் வைக்கவும் உதவுகிறது.

* சியா விதைகளை தாவரப் புரோட்டீன் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களின் 'பவர் ஹவுஸ்' என்றே கூறலாம். இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உடலுக்குத்  தேவையான அளவு இரும்புச் சத்தைத் தரவும் கருவுறுதலை ஊக்குவிக்கவும் உதவுகின்றன.

குழந்தைப் பேற்றை அடைய விரும்பும் பெண்கள் அனைவரும் இந்த 5 வகை தாவர விதைகளையும் தவறாமல் உட்கொண்டு நல்ல பயன் பெறலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com