எலும்புகளை அழிக்கும் மோசமான 5 உணவுகள்!

Foods for Bone Depreciation
Foods for Bone Depreciation
Published on

ன்றாட வாழ்க்கையில் சரிவிகித உணவு, தினசரி உடற்பயிற்சி ஆகியவை ஆரோக்கியமாக இருக்க இன்றியமையாதது. இன்றைய காலகட்டத்தில் எலும்பு ஆரோக்கியத்திற்கு  முக்கியத்துவம் கொடுக்காததால் எலும்பு புற்றுநோய், குறைந்த எலும்பு அடர்த்தி, எலும்பு தொற்று, ஆஸ்டியோபோரோசிஸ், ஆஸ்டியோனெக்ரோசிஸ், ரிக்கெட்ஸ் மற்றும் ஆஸ்டியோமலாசியா போன்ற பல நோய்கள் எலும்புகளை சீரழிக்கும். சில நோய்கள் மரபணு காரணமாக ஏற்பட்டாலும், அன்றாடம் நாம் செய்யக்கூடிய சில தவறுகளும் எலும்பு ஆரோக்கியத்தை கெடுப்பவையாக இருக்கின்றன. அவை குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

1. டீ காபி: பெரும்பாலானோர் தினமும் அன்றைய பொழுதை காபி, டீ குடிப்பதில் இருந்து ஆரம்பிக்கிறார்கள். ஆனால், அவற்றின் அளவு அதிகமாக இருக்கும் காபின் எலும்புகளுக்கு எதிரியாக இருப்பதோடு, எலும்புகளை கடுமையாக பாதிக்கிறது. எனவே, காபி டீ குடிப்பது குறித்து கவனமாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.

2. இனிப்பு உணவு: இனிப்பு உணவுகள் நீரிழிவு நோயை மட்டுமே ஏற்படுத்தும் என பலரும் கருதுகிறார்கள். உடலின் இன்சுலின் சுரப்பில் மாற்றம் ஏற்படுத்தும் செயற்கை இனிப்புகள்தான் எலும்புகளின் ஆரோக்கியத்தையும் கடுமையாக பாதிப்பவையாக இருக்கின்றன. எலும்புகளை பாதிக்கும் இனிப்புகளை சரியான அளவில் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். ஏற்கெனவே நீரிழிவு நோய் இருப்பவர்கள் இனிப்பு உணவுகளைத் தவிர்ப்பது நல்லதுதான்.

இதையும் படியுங்கள்:
மூலிப் பட்டாவிலிருக்கும் முழுமையான ஆரோக்கியம்!
Foods for Bone Depreciation

3. மதுபானம்: தீமைகளின் வேராக இருக்கும் ஆல்கஹால் பல நோய்களுக்கு காரணமாக இருப்பதோடு, அது எலும்புகளுக்கு தீங்கு விளைவிக்கிறது.  இதன் காரணமாக, எலும்புகளின் வளர்ச்சி நின்று, எலும்பின் அடர்த்தியும் குறையத் தொடங்குவதால், சாதாரண அசைவுகளில் கூடஎலும்பு முறிவு ஏற்படும். எனவே, எலும்புகளின் ஆரோக்கியத்தை கெடுக்கும் மது வகைகளை நுகர்வதையும் குறைத்துக் கொள்வது மிகவும் நல்லது.

4. உப்பு பொருட்கள்: சோடியம் நமது எலும்புகளுக்கு தீங்கு விளைவிக்கும். அதோடு, உப்பு பொருட்களை அதிகம் சாப்பிடுவதால் ஆஸ்டியோபோரோசிஸ் ஆபத்து கணிசமாக அதிகரிப்பதால் இதில், எலும்புகள் மெல்லியதாகவும் பலவீனமாகவும் மாறுவதோடு, இதன் காரணமாக எலும்பு முறிவு ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. எனவே சிப்ஸ், பிரெஞ்ச் ஃப்ரைஸ் போன்றவற்றை தவிர்த்து விடுங்கள்.

இதையும் படியுங்கள்:
அடிக்கடி கடன் கேட்பவர்களிடம் ‘நோ’ சொல்லி தப்பிக்க 10 ஆலோசனைகள்!
Foods for Bone Depreciation

5. சோடா பானம்: சோடா பானம் எப்போதும் உடலுக்கு ஆபத்து ஏற்படுத்தும் என்பதால் அளவுக்கு அதிகமாக சோடா பானங்கள் சாப்பிடுவதைத் தவிர்ப்பது மிகவும் நல்லது. வாய்வு பிரச்னை முதல் எலும்பு ஆரோக்கியம் கெடுவது வரை சோடா பானங்கள் தீங்கானவை. அசைவ உணவுகளை அதிகம் சாப்பிடும்போது செரிமானத்துக்காக சோடா குடிப்பதால்   ஏற்படும் சிக்கல் உடனே  தெரியாமல் நாட்பட்ட அளவிலேயே புரிந்துகொள்ள முடியும். அதனால், எப்போதும் இயற்கை பழச்சாறுகளுக்கு முன்னுரிமை கொடுப்பது நல்லது.

மேற்கூறிய 5 பழக்கங்களை தவிர்ப்பது எலும்பு ஆரோக்கியத்திற்கு உறுதுணையாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com