செரிமான உறுப்புகளின் ஆரோக்கியம் காக்க கார்போஹைட்ரேட்ஸ் தரும் 6 நன்மைகள்!

 Digestive organs health
Digestive organs health
Published on

கார்போஹைட்ரேட்ஸ் (சுருக்கமாக 'கார்ப்ஸ்') என்பது பல வகையான உணவுப் பொருட்களில் காணப்படும் ஒரு வகையான ஊட்டச்சத்து. உடலுக்கு சக்தியை அளிக்கும் முதன்மையான ஊட்டச்சத்து இது. சர்க்கரையை மூலக்கூறுகளாகக் கொண்டுள்ள இச்சத்து, சர்க்கரை, ஸ்டார்ச், நார்ச்சத்து போன்ற பல வடிவங்களில் வருவது. முழு தானியங்களில் உள்ள காம்ப்ளெக்ஸ் கார்ப்ஸ் சர்க்கரை சத்தை ஒழுங்கான முறையில் மெதுவாக இரத்தத்தில் கலக்கச் செய்யும். இதனால் இரத்த சர்க்கரை அளவு திடீரென உயர வாய்ப்பு உண்டாகாது. மூளையின் ஞாபக சக்தி, கூர்நோக்கும் திறன் போன்ற அறிவாற்றலானது கார்ப்ஸ்களில் உள்ள க்ளுக்கோஸ் மூலமே இயங்குகிறது. ஜீரண உறுப்புகளின் ஆரோக்கியத்தை கார்ப்ஸ் எவ்வாறு மேம்படுத்துகின்றன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

1. கார்ப்ஸ்களில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து செரிமான செயல்பாடுகளை சீராக்கும். முழு தானியங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகளில் உள்ள நார்ச்சத்து குடல் இயக்கங்களை சீராக நடைபெறச் செய்து கழிவுகளை பெருந்திரளாக்கி மலக்குடல் வழியே சுலபமாகப் பயணித்து சிரமமின்றி வெளியேற உதவும். மேலும், மலச்சிக்கலை நீக்கவும் செய்யும்.

2. கார்போஹைட்ரேட்களில் உள்ள ஒரு வகை பிரீபயோடிக் நார்ச்சத்தானது நமது செரிமான உறுப்புகளில் உள்ள நன்மை செய்யும் பாக்டீரியாக்களுக்கு உணவாகப் பயன்படுகிறது. வெங்காயம், வாழைப்பழம், பூண்டு போன்ற உணவுகளில் உள்ள பிரீபயோடிக் சத்துக்களை உட்கொண்டு குடலில் உள்ள புரோபயோட்டிக்குகள் நன்கு செழித்து வளரும். ஆரோக்கியமான புரோபயோட்டிக்குகள் செரிமானம் சிறக்கவும், ஊட்டச்சத்துக்கள் நல்ல முறையில் உடலுக்குள் உறிஞ்சப்படவும், நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் உதவும்.

3. அதிகளவு நார்ச்சத்து உள்ள முழு தானியங்கள் போன்ற உணவுகளை உட்கொள்ளும்போது டைவெர்ட்டிகலிடிஸ் (Diverticulitis) மற்றும் எரிச்சலூட்டும் பவல் சின்ட்ரோமே (Irritable Bowl Syndrome) போன்ற நோய்கள் வரும் அபாயம் தடுக்கப்படுகிறது. மேலும், வயிறு மற்றும் குடலின் அடிப்பகுதி (Bottom Line) ஆரோக்கியமடைந்து வயிறு வீக்கம் அல்லது வீக்கம் உண்டாகும் அறிகுறிகளும் தடுக்கப்படும்.

4. முழு தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள் போன்றவற்றில் உள்ள கார்போஹைட்ரேட்கள், நிலையான செரிமானத்துக்கு உகந்த சூழலை உருவாக்கி இரும்புச் சத்து, கால்சியம், மக்னீசியம் போன்ற ஊட்டச் சத்துக்கள் நல்ல முறையில் உறிஞ்சப்பட்டு உடலுக்குள் சேர உதவுகின்றன.

இதையும் படியுங்கள்:
பிரம்ம தேவனால் நடத்தப்பட்ட திருப்பதி பிரம்மோத்ஸவத்தின் வரலாறு தெரியுமா?
 Digestive organs health

5. அதிகளவு நார்ச்சத்து அடங்கிய கார்போஹைட்ரேட்கள், வயிற்றுக்குள் அதிக நேரம் தங்கி இருப்பதால் பசி உணர்வு வரும் நேரம் நீடிக்கப்பட்டு, உட்கொள்ளும் மொத்த கலோரி அளவு குறைகிறது. இதனால் உடல் எடை கூடாமல் பாதுகாக்க முடியும்.

6. சிம்பிள் கார்ப்ஸ்களுடன் ஒப்பிடுகையில் காம்ப்ளெக்ஸ் கார்ப்ஸ் பிரவுன் ரைஸ், குயினோவா, ஸ்வீட் பொட்டட்டோ போன்ற உணவுகளில் இருக்கும் சர்க்கரை சத்தை மிக மெதுவாக இரத்தத்தில் கலக்கச் செய்யும். இதனால் இரத்த சர்க்கரை அளவு தேவையான அளவு மட்டும் கூடும். மேலும், இரைப்பை-குடல் இயக்கங்களில் எதிர்மறை விளைவுகள் ஏதும் நிகழாமல் ஆரோக்கியம் நிலைக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com