உடல் எடையைக் குறைக்க உதவும் 6 Low Carb உணவுகள்! 

6 Low Carb Foods
6 Low Carb Foods to Help You Lose Weight!
Published on

இன்றைய காலத்தில் உடல் எடை அதிகரிப்பு என்பது பரவலாக பலரை பாதிக்கும் ஒரு பிரச்சனையாக உள்ளது. இதற்கு பதப்படுத்தப்பட்ட உணவுகள், குறைந்த உடற்பயிற்சி மற்றும் தவறான உணவுப் பழக்கங்கள் போன்ற காரணிகள் இதற்கு முக்கிய காரணமாக இருக்கின்றன. இந்தப் பிரச்சனையைத் தீர்க்க பல வகையான உணவு முறைகள் உள்ளன.‌ அவற்றுள் குறைந்த கார்போஹைட்ரேட் உணவு முறை (Low Carb Diet) மிகவும் பிரபலமான ஒன்று.‌

கார்போஹைட்ரேட் என்பது நம் உடலுக்கு ஆற்றலைத் தரும் ஒரு முக்கிய ஊட்டச்சத்து. ஆனால், அதிகப்படியான கார்போஹைட்ரேட்டை உட்கொள்வது ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரித்து, உடல் எடையை அதிகரிக்க வழிவகுக்கும். குறைந்த கார்போஹைட்ரேட் உணவு முறையில் கார்போஹைட்ரேட் உட்கொள்ளலைக் குறைத்து, புரதம் மற்றும் கொழுப்புச் சத்துக்களை அதிகம் உட்கொள்வது அடங்கும்.‌ இது உடல் எடையைக் குறைக்க உதவுவதோடு ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தி ஆற்றலை அதிகரிக்கச் செய்யும். 

Low Carb உணவுகள்: 

  • இறைச்சி உணவுகள் புரதச்சத்து மிகுந்தவை. புரதம் உடல் எடையைக் குறைக்க உதவும். இது உடல் தசைகளைப் பாதுகாத்து, பசியைக் குறைத்து, உடல் எடை அதிகரிப்பதைக் கட்டுப்படுத்துகிறது. 

  • சால்மன், டியூனா போன்ற கொழுப்பு மீன்கள், ஒமேகா மூன்று கொழுப்பு அமிலங்கள் நிறைந்தவை. இவை இதய ஆரோக்கியத்திற்கு நல்லது மற்றும் உடல் எடையைக் குறைக்க உதவும். 

  • முட்டையில் புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுப் பொருட்கள் நிறைந்துள்ளன. இவை வயிறு நிரம்பிய உணர்வைத் தருவதால், அதிகமாக உணவு அருந்துவது தடுக்கப்படுகிறது. 

  • பச்சை இலைக் காய்கறிகள், வெள்ளரிக்காய், கேரட் போன்ற காய்கறிகள் குறைந்த கார்போஹைட்ரேட் மற்றும் அதிக நார்ச்சத்துக்கள் கொண்டவை. இவை உடல் எடையைக் குறைக்க உதவுவதோடு, பல்வேறு வகையான வைட்டமின்கள் மற்றும் தாதுப் பொருட்களை வழங்குகின்றன.‌ 

  • பெர்ரி வகைப் பழங்கள், ஆப்பிள், பேரிக்காய் போன்ற பழங்கள் குறைந்த கார்போஹைட்ரேட் மற்றும் அதிக நார்ச்சத்து கொண்டவை. இவை உடல் எடையை குறைத்து, நம் இனிப்பு தேவையை பூர்த்தி செய்கின்றன.‌

  • பாதாம், வால்நட், சியா விதை போன்ற நட்ஸ் மற்றும் விதைகள், ஆரோக்கியமான கொழுப்புகள் புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்தவை. இவற்றை தொடர்ச்சியாக சாப்பிட்டு வருவதால், உடல் எடை குறைக்க உதவும். 

இதையும் படியுங்கள்:
சைவ உணவு உண்பதால் கிடைக்கும் 12 நன்மைகள் தெரியுமா?
6 Low Carb Foods

குறைந்த கார்போஹைட்ரேட் உணவு முறையைப் பின்பற்றுவது உடல் எடையைக் குறைக்க ஒரு பயனுள்ள வழிமுறையாக இருக்கலாம். மேலே, குறிப்பிட்ட ஏழு உணவுகளை உங்கள் உணவுத் திட்டத்தில் சேர்த்துக் கொள்வதன் மூலம், ஆரோக்கியமான முறையில் உங்கள் உடல் எடையைக் குறைக்க முடியும். இருப்பினும் எந்த ஒரு புதிய உணவுத் திட்டத்தையும் தொடங்குவதற்கு முன் உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசிப்பது நல்லது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com