உடல் எடையைக் குறைக்கும்போது தவிர்க்க வேண்டிய 6 தவறுகள்!

6 Mistakes to Avoid While Pursuing Weight Loss
6 Mistakes to Avoid While Pursuing Weight Loss

உடல் எடை குறைப்பது என்பது ஒரு சவாலான பயணமாகும். அதற்கு அர்ப்பணிப்பும், விடாமுயற்சியும் அதிகம் தேவைப்படுகிறது. உடல் எடையைக் குறைக்க நினைக்கும் பலர் அவர்களது முன்னேற்றத்தைத் தடுக்கும் பல தவறுகளை செய்கின்றனர். இதன் மூலமாக அவர்கள் எவ்வளவு முயன்றாலும் தங்களின் உடல் எடையைக் குறைக்க முடிவதில்லை. இந்தப் பதிவில் உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் தவிர்க்க வேண்டிய 6 தவறுகள் என்னவென்று பார்க்கலாம். 

இதையும் படியுங்கள்:
Ather Halo Helmet: இது சாதா ஹெல்மெட் இல்ல, ஸ்மார்ட் ஹெல்மெட்! 
6 Mistakes to Avoid While Pursuing Weight Loss
  1. அதிக டயட்: உடல் எடையைக் குறைக்க நினைக்கும் நபர்கள் செய்யும் மிகப்பெரிய தவறுகளில், தொடக்கத்திலேயே அதிக டயட் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும். உடல் எடையைக் குறைக்க வேண்டுமென சாப்பிடாமல் இருந்தால் ஊட்டச்சத்து குறைபாடு, வளர்ச்சிதை மாற்ற மந்தநிலை மற்றும் தசையிழப்புக்கு வழிவகுக்கும். இதன் மூலமாக உங்கள் உடல் எடை குறையும் என்றாலும், உடலில் வேறு சில பிரச்சனைகளையும் ஏற்படுத்தும். எனவே நீங்கள் டயட் இருக்கிறீர்கள் என்றால் தினசரி உடலுக்குல் தேவையான ஊட்டச்சத்துக்கள் உள்ளடங்கிய சீரான உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம். 

  2. அதிக உணவு அளவு: சிலருக்கு ஜிம்முக்கு சென்றால் உடல் எடை குறையும் என்று நினைப்பு உள்ளது. எனவே தினசரி உடற்பயிற்சி செய்து, வீட்டிற்கு வந்து நன்றாக வயிறுமுட்ட சாப்பிடுவார்கள். இதனால் ஒருபோதும் நீங்கள் எதிர்பார்க்கும் ரிசல்ட் கிடைக்காது. உடல் எடை குறைப்பில் உடற்பயிற்சியின் பங்கு 20% மட்டுமே. மீதமுள்ள 80% நீங்கள் எத்தகைய உணவு முறையைக் கடைபிடிக்கிறீர்கள் என்பதிலேயே அடங்கியுள்ளது. 

  3. உடற்பயிற்சிகளை புறக்கணித்தல்: வலிமையான பளு தூக்கும் பயிற்சிகளை புறக்கணித்து வெறும் கார்ட்டியோ உடற்பயிற்சியில் மட்டுமே கவனம் செலுத்துவது பலரால் பொதுவாக செய்யப்படும் தவறாகும். இது உங்கள் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரித்து, உடல் தசைகளையும் வலுவிழக்கச் செய்துவிடும். எனவே உடல் எடை குறைப்பில் Strength Training மிக மிக முக்கியம். 

  4. தூக்கத்தை தவிர்த்தல்: தூக்கமின்மை எடை இழப்பில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மோசமான தூக்கம் பசியைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன்களை சீர்குலைத்து அதிக பசியைத் தூண்டுவதால், நீங்கள் அதிகம் சாப்பிட வழிவகுக்கும். இது மன அழுத்த ஹார்மோனான கார்டிசோலை வெளியிடுவதால், நீங்கள் மன அழுத்த பாதிப்பையும் சந்திக்க நேரிடலாம். எனவே உடல் எடை இழப்பில் தூக்கம் முக்கியம் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். 

  5. சப்ளிமெண்ட்களை நம்புதல்: உடல் எடையைக் குறைப்பதற்கு சப்லிமெண்ட்கள் பயன்படுத்தி நல்ல ரிசல்ட் ஏற்படுத்த முடியும் என்றாலும், அவற்றை மட்டுமே முழுமையாக நம்பி இருப்பது தவறு. சந்தையில் கிடைக்கும் பல எடை இழப்பு சப்ளிமெண்ட்கள் மிகைப்படுத்தப்படுகின்றன. எனவே இவற்றுக்கு பதிலாக இயற்கையான உணவு முறையைப் பின்பற்றி உடல் எடையைக் குறைக்க முயலுங்கள்.

  6. Consistency மற்றும் பொறுமை இல்லாமை: உடல் எடையை குறைப்பதென்பது ஒரே இரவில் நடக்கும் செயல் அல்ல. உடனடியாக முடிவுகளை எதிர்பார்த்தால் விரக்தி மற்றும் விட்டுக் கொடுத்துவிடும் மனப்பான்மைக்கு வழிவகுக்கும். மேலும் உங்கள் உடலமைப்பை சிறப்பாக மாற்றுவதற்கு போதுமான நேரத்தைக் கொடுக்க வேண்டியது அவசியம். அவசரப்பட்டால் உங்களால் நீங்கள் எதிர்பார்க்கும் ரிசல்ட்டை அடைய முடியாது. எனவே நீண்ட காலத்திற்கு நிலையான திட்டங்களைப் பின்பற்றி பொறுமையாக முயற்சித்தால், உடல் எடையை நிச்சயம் குறைக்க முடியும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com