நீண்ட ஆயுள் பெற விரும்புவோர் கவனிக்கவேண்டிய 6 விஷயங்கள்!

Healthy Life
Healthy Life
Published on

1. முறையற்ற உணவுப் பழக்கம்: தவிர்க்க வேண்டிய முக்கியமான உணவு ‘ஜங்க் புட்’ எனப்படும் துரித உணவுகளைத்தான். கல்லைத் தின்றாலும் செரித்து விடும் வயதைக் கடந்த பின்னர் விரும்பும் அனைத்து உணவுகளையும் வரைமுறையின்றி உண்பதை நிறுத்த வேண்டும். குறிப்பாக, கொழுப்புகள் அதிகம் இருக்கும் உணவுகளைத் தவிர்த்து, நோய் எதிர்ப்பு சக்தி தரும் பழங்கள், காய்கறிகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சுண்டல் வகையறாக்களை தினமும் எடுத்துக் கொள்ளலாம்.

2. உடற்பயிற்சி இல்லாமை: தற்போது பெருகிவரும் வசதிகளில் மிகவும் குறைந்து வருவது உடற்பயிற்சி இன்மையே. தினசரி நடைப்பயிற்சி போன்ற ஏதாவது ஒன்றை சிறு வயதில் இருந்தே பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். முறையான உடற்பயிற்சி  நோய் எதிர்ப்பு சக்தியையும் ஆற்றலையும் அதிகரிக்கச் செய்து ஆரோக்கியம் தரும். இதனால் வயது குறைந்த உணர்வு வரும். உடற்பயிற்சியின்மை பலவீனத்தைத் தந்து ஆரோக்கியத்தை கெடுத்து விடும்.

3. தேவையற்ற கவலைகள்: கவலைகள் இல்லாத வாழ்க்கை இல்லை என்பதை புரிந்துகொண்டு தீர்க்க முடியும் பிரச்னைகள், தீர்க்க முடியாத பிரச்னைகள் என பகுத்து ஆராய்ந்து தெளிவு பெற வேண்டும். தீர்வு இருக்கும் பிரச்னைகளுக்கு தீர்வைத் தேடியும் தீர்க்கவே முடியாத பிரச்னைகளை வாழ்வில் இருந்து அப்புறப்படுத்தியும் பழக வேண்டும். தேவையற்ற கவலைகளால் ஏற்படும் பலவீனம் தேக நலனுக்கு ஆபத்தையே தரும்.

4. தகுந்த ஓய்வு இல்லாமை: உடலும் எந்திரம் போல்தான். இடைவிடாத உழைப்பு விரைவான தளர்ச்சியைத் தரும். ஓயாமல் உழைக்கும் உடலுக்கும் ஓய்வும் அவசியம். ஒவ்வொருவருக்கும் சக்தியின் அளவுகள் வேறுபடலாம். ஒருவருக்கு மதிய உறக்கம் நிச்சயம் தேவைப்படலாம். மற்றொருவருக்கு இரவு சீக்கிரம் உறங்கச் செல்லும் பழக்கமிருக்கலாம். இப்படி அவரவர் உடலுக்குத் தகுந்த ஓய்வை எடுத்துக் கொண்டால் ஆரோக்கியம் கிட்டும்.

இதையும் படியுங்கள்:
உலகின் மிக விலையுயர்ந்த 5 மாளிகை வீடுகள்!
Healthy Life

5. ஆழ்ந்த தூக்கமின்மை: தூக்கத்தின்போது உடல் சைட்டோகான்களை உற்பத்தி செய்கிறது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி நமக்குத் தேவையான அளவு கிடைக்கிறது. ஆழ்ந்த தூக்கம் இல்லாதவர்களுக்கு இந்த சைட்டோ பயன்களின் உற்பத்தி குறையும். இதனால் நோய் எதிர்ப்பு சக்தியும் குறைந்து எளிதில் ஆரோக்கியம் கெடும். இதனால்தான் தூக்கமின்மை ஆரோக்கியத்திற்கு கேடு என்கிறார்கள். தினமும் 8 மணி நேரம் ஆழ்ந்து தூங்குவதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.

6. மன அழுத்தம்: இந்த அவசர யுகத்தில் அனைவரும் பாதிக்கப்படுவது மன அழுத்தத்தினால் என்பது மருத்துவர்களின் கணிப்பு. நாள்பட்ட மன அழுத்தம் நமது உடலில் கார்டிசோல் ஹார்மோன் அதிகரிப்பதற்கு வழி வகுத்து அதனால்  நோய் தொற்றுகள் ஏற்படுத்துவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும். மன அழுத்தம் இருப்பது தெரிந்தால் உடனடியாக தகுந்த நிபுணரைப் பார்த்து அதற்குண்டான சிகிச்சைகள் மேற்கொள்வது நல்லது. ஆனால், கூடியவரை மன அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதே நீண்ட ஆயுளுக்கு சிறந்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com