ஹார்மோன் சுரப்பை இயற்கை முறையில் சமநிலையில் வைக்க 6 டிப்ஸ்!

Hormonal deficiency
Hormonal deficiencyhttps://ta.quora.com
Published on

ம் உடலின் பல விதமான இயக்கங்களுக்கு சிறந்த முறையில் உதவி புரிபவை ஹார்மோன்கள். இந்த ஹார்மோன்கள் அளவில் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ சுரக்கும்போது சில ஆரோக்கியக் குறைபாடுகள் உடலில் ஏற்படக்கூடும். சில முக்கியமான ஹார்மோன் வகைகளையும் அவற்றை சமநிலையில் வைத்துப் பராமரிக்க உதவும் 6 டிப்ஸ்களையும் இந்தப் பதிவில் பார்ப்போம்.

செரோடோனின் நல்ல மனநிலையை உருவாக்கி சந்தோஷம் அளிக்க உதவும். டோப்பமைன், செயல் ஊக்கம் தந்து இன்பமளிக்கக் கூடியது. ஆக்ஸிடோசின் சமூக உறவை மேம்படுத்த உதவும். என்டார்ஃபின் பரவச நிலை தரும் யூஃபோரியா (Euphoria) என்ற பொருளை உண்டாக்கி இயற்கையாக வலிகளை மறையச் செய்யும். டெஸ்டோஸ்டெரான் மற்றும் ஈஸ்ட்ரோஜென் இன விருத்தியின் செயல்பாடுகளில் உதவும் கார்ட்டிசோல் மன அழுத்தத்தை சரிப்படுத்தும். குரோத் (Growth) ஹார்மோன் வளர்சிதை மாற்றத்திற்கும் செல்களை ரிப்பேர் செய்யவும் உதவும். தைராய்ட் மெட்டபாலிச ரேட்டையும் சக்தியின் அளவையும் சமநிலைப்படுத்தும்.

இந்த ஹார்மோன்களின் சுரப்பை சமநிலையில் வைத்துப் பராமரிக்க உதவும் 6 டிப்ஸ்:

* அதிகளவு காய்கறிகள், பழங்கள், ஆரோக்கியமான கொழுப்புகள் லீன் புரோட்டீன் போன்றவை அடங்கிய சரிவிகித உணவை உண்ணுதல். மேலும் அளவுக்கு அதிகமான சர்க்கரை சேர்த்து பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்த்தல்.

* ஸ்ட்ரெஸ்ஸை குறைத்து ஹார்மோன் அளவை சமநிலைப்படுத்த உதவும் நடைப்பயிற்சி, யோகா போன்றவற்றைப் பின்பற்றுதல்.

* ஒவ்வொரு இரவும் ஏழு மணி நேர ஆழ்ந்த உறக்கம் ஹார்மோன் அளவை சமநிலையில் வைக்க உதவும்.

* உடலை தளர்வுறச் செய்யும் மெடிடேஷன், ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி, எதிலும் திருப்தியான உணர்வு போன்றவை கார்ட்டிசோல் அளவை சமநிலைப்படுத்தும்.

* அதிகளவு தண்ணீர் குடிப்பது உடலை நீரேற்றத்துடன் வைத்து ஆரோக்கியத்தை காக்கவும் ஹார்மோன் சுரப்பிகளின் செயல்பாட்டை சீராக்கவும் உதவும்.

இதையும் படியுங்கள்:
அதிக நேரம் அமர்ந்திருப்பதில் இவ்வளவு ஆபத்துக்கள் உள்ளதா?  
Hormonal deficiency

* பிளாஸ்டிக்ஸ், பூச்சிகொல்லி மருந்துகள் மற்றும் கிரீம், லோஷன் போன்ற உடல் தோற்றத்தை மேம்படுத்த உபயோகிக்கும்  இரசாயனம் கலந்த பொருட்களில் உள்ள நச்சுக்கள், என்டாக்ரைன் என்ற ஹார்மோன் சுரப்பியின் செயல்பாடுகளில் பாதிப்பை உண்டாக்காதவாறு பார்த்துக்கொள்வது அவசியம்.

மேற்கண்ட 6 டிப்ஸ்களைப் பின்பற்றி ஹார்மோன் சுரப்பிகளின் செயல்பாடுகளை மேம்படுத்தி ஆரோக்கியம் காப்போம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com