பப்பாளிப் பழத்துடன் சேர்த்து உண்ணக் கூடாத 6 வகை உணவுகள்!

Papaya fruit
Papaya fruit
Published on

ழங்கள் சரிவிகித உணவின் ஒரு பகுதி என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. பழங்களில் உள்ள ஊட்டச் சத்துக்கள் உடல் வளர்ச்சி, இயக்கம் மற்றும் இழந்த சக்தியை மீட்டெடுத்தல் போன்ற பல வேலைகளுக்கும் நாள் முழுவதும் உடலுக்கு உதவக் கூடியவை. அதிகளவு நார்ச்சத்து, குறைந்த கிளைசெமிக் இன்டெக்ஸ், கண்ணைக் கவரும் வண்ணம் கொண்ட பப்பாளி போன்ற பழங்கள் உடலுக்கு பலவித ஆரோக்கிய நன்மைகளைத் தரக் கூடியவைகளாகவும் உள்ளன. உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்வது, செரிமானம் மற்றும் மெட்டபாலிசம் சிறப்புற நடைபெற உதவுவது போன்ற பல நன்மைகளை, சிறுவர் பெரியவர் என்ற வேறுபாடின்றி அனைவருக்கும் தரக் கூடியது பப்பாளிப் பழம். இப்பழத்திலுள்ள நன்மைகளை முழுவதுமாகப் பெற அதை எந்த உணவுகளோடெல்லாம் சேர்த்து உண்ணக் கூடாது என்று சில வரைமுறைகள் உண்டு. அவை என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

1. சிட்ரஸ் ஃபுரூட்ஸ்: நம்மில் பலர் ஆரஞ்சு, கிரேப் போன்ற சிட்ரஸ் ஃபுரூட்ஸ்ஸுடன் பப்பாளி சேர்த்து ஃபுரூட் சாலட் செய்வதுண்டு. இந்த மூன்று பழங்களிலுமே வைட்டமின் C சத்து அதிகம் உள்ளது. இவற்றை சேர்த்து உண்ணும்போது அசிடிட்டி அல்லது நெஞ்செரிச்சல் உண்டாகக் கூடிய வாய்ப்பு உருவாகும். எனவே, பப்பாளிப் பழத்தை ஆரஞ்சு மற்றும் கிரேப் பழங்களுடன் சேர்த்து உண்பது உடலுக்கு ஆரோக்கியம் தராது.

2. புரோட்டீன் நிறைந்த உணவுகள்: பப்பாளிப் பழத்தில் அதிகம் உள்ள பாப்பைன் என்ற என்சைமானது புரோட்டீன்களை உடைக்கும் தன்மை கொண்டது. புரோட்டீன் அதிகம் நிறைந்துள்ள இறைச்சி, மீன், டோஃபு போன்ற உணவுகளோடு பப்பாளி சேர்த்து உட்கொண்டால் பப்பாளிப் பழத்தில் உள்ள என்சைம்கள் செரிமான செயல்பாடுகளில் தலையிட்டு செரிமானக் கோளாறுகளை உண்டுபண்ணக்கூடும். எனவே, இறைச்சி, மீன், டோஃபு போன்ற உணவுகளோடு பப்பாளி சேர்த்து உண்பதை தவிர்த்தல் நலம்.

3. நொதிக்கச் செய்த உணவுகள்: கிம்ச்சி மற்றும்  சார்க்ராட் போன்ற நொதிக்கச் செய்து தயாரித்த உணவுகளுடன் பப்பாளி சேர்த்து உண்பது ஆரோக்கியம் அல்ல. ஏனெனில், இந்த உணவுகளில் உள்ள புரோபயோட்டிக்குகளுடன் பப்பாளியில் உள்ள என்சைம் சேரும்போது அது சீரான செரிமானத்திற்கு தடை ஏற்படுத்தும் அல்லது இரைப்பை-குடல் பகுதிகளில் கோளாறை உண்டுபண்ணும். பாலுடன் பப்பாளி சேர்த்து உண்பதும் ஆரோக்கியம் அற்றதே. ஏனெனில் பப்பாளியில் உள்ள பாப்பைன் மற்றும் ச்சைமோபாப்பைன்(Chymopapain) போன்ற என்சைம்கள் பாலை திரியச் செய்து விடும். இதனால் குடலின் செரிமான இயக்கங்களில் கோளாறு உண்டாகும். மேலும், வயிறு வீக்கம், வாய்வு, வயிற்றுப் பிடிப்பு போன்ற அசௌகரியங்கள் ஏற்படவும் கூடும்.

இதையும் படியுங்கள்:
மனித வாழ்க்கைக்கு நெறிமுறைகள் ஏன் அவசியம்?
Papaya fruit

4. ஸ்பைசி ஃபுட்ஸ்: இயற்கையாகவே ஸ்பைசி ஃபுட்ஸ் வயிற்றின் உட் பகுதியில் எரிச்சலை உண்டாக்கக்கூடிய உணவு. இதனுடன் பப்பாளி சேர்த்து உண்பது நல்ல செயலாகாது. ஏனெனில், இதனால் சீரான செரிமானத்தில் தடங்கல் உண்டாகும். இரைப்பை குடல் இயக்கம் சரியாக நடைபெறாது. நெஞ்செரிச்சல், ஆசிட் ரிஃபிளக்ஸ், வயிற்றுப் பிடிப்பு போன்ற ஆரோக்கியக் குறைபாடுகள் தோன்றவும் செய்யும். காரசாரத் தன்மையுடைய ஸ்பைசி உணவுடன் குளிர்ச்சியான பப்பாளி சேரும்போது செரிமான உறுப்புகளின் இயல்பு மாறி ஆரோக்கியக் குறைபாடுகள் உண்டாவதற்கு வாய்ப்பாகும்.

5. கொழுப்பு நிறைந்த உணவுகள்: பொரித்த உணவுகள், இறைச்சி, க்ரீமி சாஸ் போன்ற அதிகளவு கொழுப்பு நிறைந்த உணவுகளுடன் குறைவான கொழுப்புடைய பப்பாளியை சேர்த்து உட்கொண்டால் அஜீரணம் மற்றும் வயிறு வீக்கம் உண்டாகும்.

மேற்கூறிய காரணங்களால், பப்பாளிப் பழத்தை இரண்டு உணவுகளுக்கு இடையில் ஸ்நாக்ஸாக உட்கொள்வதே சிறந்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com