அவசியம் தவிர்க்க வேண்டிய 6 வகை உணவுகள்!

French Fries
French Frieshttps://www.bbcgoodfood.com
Published on

நாம் உண்ணும் உணவு வகைகள் நமது உடலுக்கு சத்துக்களையும் ஆற்றலையும் தர வேண்டியது அவசியம். சில உணவுகள் நமது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும். அவற்றைத் தவிர்க்க வேண்டியது அவசியம். அது பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

1. வெள்ளை ரொட்டி: வெள்ளை ரொட்டியில் அதிக கிளைசெமிக் குறியீடு உள்ளது. இது இரத்த சர்க்கரை அளவை விரைவாக அதிகரிக்கும். நீரிழிவு நோயாளிகள் அல்லது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த முயற்சி செய்பவர்கள் அறவே தவிர்க்க வேண்டிய உணவு இது. முழு தானிய ரொட்டியுடன் ஒப்பிடும்போது இதில் நார்ச்சத்து அதிகம் இல்லை. மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். வெள்ளை ரொட்டி சுத்திகரிக்கப்படும்போது வைட்டமின்கள், தாதுக்கள் போன்ற முக்கியமான ஊட்டச்சத்துக்கள் பதப்படுத்தப்பட்டு அகற்றப்படுகிறது. எனவே, இதை எடுத்துக்கொள்ளக் கூடாது. ரொட்டிக்கு பதிலாக பிரவுன் ரொட்டியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

2. சோடா: ஆரோக்கியத்திற்கு கெடுதல் விளைவிக்கும் பானங்களில் ஒன்று சோடா. இதை அருந்தும்போது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். தேவையற்ற சர்க்கரை கல்லீரலில் குளுக்கோஸாக மாற்றப்பட்டு உடலில் அது கொழுப்பாக சேமிக்கப்படுகிறது.

3. ரெடிமேடு பழச்சாறுகள்: எப்போதும் பழங்களை பிரஷ்ஷாக வாங்கி கழுவி விட்டு அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது. டின்களில் அடைக்கப்பட்ட பழச்சாறுகள் ஆரோக்கியமானவை அல்ல. இவற்றில் சுவையை அதிகரிப்பதற்காக சர்க்கரை அதிக அளவில் சேர்க்கப்படுகிறது. மேலும், கலோரிகளும் அதிகமாக இருக்கும். நார்ச்சத்து மிகக் குறைவாக உள்ளது. நீண்ட காலம் சேமித்து வைக்கப்படுவதால் வைட்டமின் சி போன்ற நல்ல வைட்டமின்களை சிதைத்து விடும். ஊட்டச்சத்துக்களை இழந்து விடும். சுவை, நிறம் மற்றும் நீண்ட நாள் பாதுகாப்பதற்காக சேர்க்கப்படும் செயற்கை சுவைகள், வண்ணங்கள், சோடியம் போன்றவை பாதகமான எதிர்விளைவுகளை உண்டாக்கும். சில சிட்ரஸ் பழச்சாறுகள் அமிலத்தன்மை கொண்டதாக இருக்கும். சிலருக்கு பல் அரிப்பு மற்றும் குடல் அசௌகரியத்துக்கு வழிவகுக்கும்.

4. பதப்படுத்தப்பட்ட இறைச்சி: பதப்படுத்தப்பட்ட இறைச்சி வகைகளில் சுவையை அதிகரிக்கவும், ஆயுளை நீட்டிக்கவும் அதில் அதிக அளவு உப்பும் சோடியமும் சேர்ப்பார்கள். இதனால் உயர் இரத்த அழுத்தம், இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்ற பிரச்னைகளுக்கு பங்களிக்கும். இதில் சேர்க்கப்படும் நைட்ரேட்டுகள் செரிமான பிரச்னையை உண்டாக்கும் மற்றும் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும். இதில் அதிக அளவு கொழுப்புகள் உள்ளதால் கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்து இதய நோய்க்கு வழிவகுக்கும். ஜீரணிக்க கடினமாக உள்ளதால் இது செரிமான பிரச்னைகளை ஏற்படுத்தும். மேலும் குடல், இரைப்பை வீக்கம் மற்றும் மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும்.

இதையும் படியுங்கள்:
இரவில் தூக்கம் வரவில்லையா? 5 நிமிடத்தில் தூங்குவதற்கான செம்ம டிப்ஸ்! 
French Fries

5. சீஸ்: சீஸ் எனப்படும் பாலாடை கட்டியில் நிறைவுற்ற கொழுப்பு அதிகமாக உள்ளது. பல வகையான பாலாடை கட்டிகளில் சோடியம் அதிகமாக உள்ளது. இது இதய நோய் மற்றும் சிறுநீரகப் பிரச்னைகளின் அபாயத்தை அதிகரிக்கும். குறைந்த அளவு சோடியம் உள்ள சீஸ் வகைகளை தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும்.

6. பிரெஞ்ச் ப்ரைஸ் (French Fries): குழந்தைகள் அதிகமாக விரும்பி உண்ணும் ப்ரைகள் தாவர எண்ணெயில் ஆழமாக வறுக்கப்படுகிறது. இதனால் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் இதில் சேரும். இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்திற்கு வழிவகுக்கும். இதில் உள்ள அதிக கிளைசெமிக் இன்டெக்ஸ் இரத்த சர்க்கரை அளவை விரைவாக அதிகரிக்கச் செய்யும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com