கோடையில் குளிர்ச்சியும் ஆரோக்கியமும் தரும் 6 வகை தாவர விதைகள்!

சூரியகாந்தி பூசணி விதைகள்
sunflower and pumpkin seedshttps://canadianfoodfocus.org

வால்நட், பாதாம் போன்ற கொட்டைகளில் இருப்பதை விட சில தாவர விதைகளில் ஊட்டச்சத்துக்கள் மிக அதிகமுள்ளன. ஊட்டச்சத்துக்களுடன் உடலுக்குக் குளிர்ச்சி தரும் குணமும் கொண்டுள்ளன சில விதைகள். அவ்வாறான 6 விதைகளைப் பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.

மக்னீசியம், சிங்க், இரும்புச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியது வாட்டர் மெலன் விதைகள். இவை நம் உடலின் உஷ்ண நிலையை சமநிலையில் வைக்கவும், அதிக வெப்பம் நிலவும் நாட்களில் உடலுக்குக் குளிர்ச்சி தர உதவும் குணமுடையவை. வாட்டர் மெலன் விதைகளை ரோஸ்ட் செய்து ஸ்நாக்ஸாகவும், சாலட் தூவியும் உண்ணலாம்.

சன்ஃபிளவர் விதைகளில் வைட்டமின் E சத்து அதிகம் உள்ளது. இது ஆன்டி ஆக்ஸிடன்ட்டாக செயல்புரிந்து சூரியக் கதிர் வீச்சுகளால் சருமத்தில் உண்டாகும் கோளாறுகளைத் தடுக்க உதவுகிறது. இதிலிருக்கும் மக்னீசியம் சத்தானது உடலின் உஷ்ண நிலையை சமநிலையில் வைத்துப் பராமரிக்க உதவுகிறது. இதை ஸ்நாக்ஸாக உண்ணலாம் அல்லது யோகர்ட், சாலட், ஓட் மீல் ஆகியவற்றின் மீது தூவியும் உண்ணலாம்.

அதிகளவு ஒமேகா 3 கொழுப்பு அமிலம், நார்ச்சத்து, ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது சியா விதைகள். இச்சத்துக்கள் கோடையில் உடலை நீரேற்றத்துடன் வைக்கவும், வீக்கங்களைக் குறைக்கவும் உதவுகின்றன. சியா விதைகளை தண்ணீரில் ஊற வைத்தால் அது ஒரு ஜெல் போன்ற பொருளாய் உருமாறும். அதை உட்கொண்டால் அது நம் உடல் உஷ்ணத்தை சமநிலையில் வைக்கவும், நீண்ட நேரம் பசியுணர்வைத் தடுத்து நிறைவுற்ற நிலையைத் தரவும் செய்யும்.

இதையும் படியுங்கள்:
நீரிழிவு நோயும், நடைப்பயிற்சியும்!
சூரியகாந்தி பூசணி விதைகள்

பூசணி விதைகளில் உள்ள மக்னீசியம், சிங்க், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உடலின் எலக்ட்ரோலைட்களின் அளவை சமநிலையில் வைக்க உதவி புரிந்து டீஹைட்ரேஷன் வராமல் பாதுகாக்கிறது. மேலும் இதிலுள்ள  வைட்டமின் E போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிக உஷ்ணத்தினால் சருமத்தில் உண்டாகும் கோளாறுகளை தடுத்து நிறுத்தி பாதுகாப்பளிக்கிறது. இதை ரோஸ்ட் செய்து ஸ்நாக்ஸாகவும் உண்ணலாம் அல்லது சாலட், சூப்களில் தூவி உண்ணலாம். இதில் பாஸ்பரஸ், ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் மற்றும் மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகளும் உள்ளன.

எள் விதைகளில் மக்னீசியம், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளன. இவை உடலின் உஷ்ண நிலையை சமநிலையில் வைத்துப் பராமரிக்கவும், வெப்பத்தினால் வரும் உடல் நலக் கோளாறுகளைத் தடுக்கவும் உதவுகின்றன. இதில் வைட்டமின் E போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்டும் உள்ளது. இது உஷ்ணத்தினால் சருமத்தில் உண்டாகும் வேர்க்குரு, வேனல் கட்டி மற்றும் கொப்புளங்கள் போன்ற  வியாதிகளை குணப்படுத்தவும், வீக்கங்களைக் குறைக்கவும், ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்ஸைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. எள்ளை சாலட், ஸ்டூ, ஃபிரை, ரோஸ்டட் வெஜிடபிள் மீது தூவியும், எள்ளுப்பொடி, சட்னி செய்தும் உண்ணலாம்.

ஹெம்ப் விதைகளில் உடலுக்குத் தேவையான அமினோ ஆசிட்ஸ் நிறைந்த கம்ப்ளீட் புரோட்டீன் நிறைந்துள்ளது. இந்த புரோட்டீனை உடல் தானாக தயாரித்துக்கொள்ள இயலாது. எனவே ஹெம்ப் விதைகளும் உடலுக்கு ஆரோக்கியம் தர உதவுகின்றன.

மேற்கூறிய விதைகளை நாமும் ஏதாவது ஒரு வழியில் உணவுடன் சேர்த்து உட்கொண்டு ஆரோக்கியம் பெறுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com