சம்மரில் உங்க ஆரோக்கியத்தை நாசமாக்கும் 6 மோசமான காய்கறிகள் பற்றி உடனே தெரிந்து கொள்ளுங்கள்!

vegetables-to-avoid-during-summer
vegetables-to-avoid-during-summer
Updated on

கோடைக்காலம் தனது கோர முகத்தை காட்ட தொடங்கிவிட்டது. நாளுக்கு நாள் அதிகரிக்கும் வெப்ப அலைகளின் தாக்கத்தால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே தயங்குகிறார்கள். இந்த சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க நாம் பெரும்பாலும் குளிர்ந்த உணவுகளை தேடி ஓடுகிறோம். 

காய்கறிகள் என்றாலே எப்போதுமே உடலுக்கு நல்லது என்பது முற்றிலும் உண்மை என்றாலும், சில குறிப்பிட்ட காய்கறிகளை இந்த கடுமையான வெயில் காலத்தில் சாப்பிடுவது நமது உடலுக்குள் எதிர்பாராத வகையில் பெரிய அளவில் வெப்பத்தை அதிகரிக்கும். 

இதனால்தான் கோடையில் சில உணவுகளைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அந்த வகையில், வெயில் காலத்தில் நாம் எக்காரணத்தைக் கொண்டும் அதிகமாக சாப்பிடக் கூடாத ஆறு காய்கறிகள் எவை என்பதை இந்த்ப் பதிவில் பார்ப்போம்.

1. கத்திரிக்காய்!

சாம்பார் மற்றும் காரக்குழம்பில் கத்திரிக்காய் இல்லாமல் நம்மால் திருப்தியாக சாப்பிட முடியாது. ஆனால், வெயில் காலத்தில் இதைத் தவிர்ப்பதுதான் உடலுக்கு ரொம்பவே நல்லது. ஆயுர்வேத முறைப்படி, கத்திரிக்காய் நமது உடலில் பித்தத்தை அதிகப்படுத்தி உடல் சூட்டை சட்டென்று ஏற்றிவிடும் தன்மை கொண்டது. இதனால் வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் மற்றும் சருமத்தில் அலர்ஜி வர வாய்ப்புள்ளது.

2. பூண்டு!

பூண்டு நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஒரு அருமையான இயற்கை உணவுப் பொருள் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. இருப்பினும், கோடை காலத்தில் பூண்டை அதிகமாக உணவில் சேர்ப்பது உங்கள் உடல் வெப்பநிலையை தாறுமாறாக உயர்த்திவிடும். இது உங்களை அதிகமாக வியர்க்கச் செய்து, உடலில் உள்ள நீர்ச்சத்தை மிக வேகமாக உறிஞ்சி சோர்வடையச் செய்துவிடும்.

3. காலிஃப்ளவர்!

பஜ்ஜி, கோபி மஞ்சூரியன் என பலரின் ஃபேவரைட் உணவாக காலிஃப்ளவர் எப்போதுமே இருக்கிறது. இதில் அளவுக்கு அதிகமான நார்ச்சத்து உள்ளதால், இது செரிமானம் ஆவதற்கு நமது உடல் அதிக ஆற்றலைச் செலவிட வேண்டியிருக்கும். இப்படி செரிமானத்திற்காக நமது உடல் கடினமாக உழைக்கும் போது தானாகவே உடலுக்குள் அதிக வெப்பம் உருவாகிவிடும்.

இதையும் படியுங்கள்:
ஆரோக்கியத்தின் பொக்கிஷம் மைக்ரோ கீரைகள்: உடல் நலத்தின் புதிய அத்தியாயம்!
vegetables-to-avoid-during-summer

4. பசலைக்கீரை!

கீரைகள் எப்போதுமே ஆரோக்கியமான உணவுப் பட்டியல் தான் வரும். ஆனால் பசலைக்கீரையில் உள்ள அதீத ஊட்டச்சத்துகள் மற்றும் புரதம் உடலின் மெட்டபாலிசத்தை ரொம்பவே துரிதப்படுத்தும் ஆற்றல் கொண்டவை. இதனால் உடலுக்குள் ஒருவிதமான வெப்ப நிலை தொடர்ந்து உருவாகும். கோடையில் இதைத் தினமும் சாப்பிடுவதை விட எப்போதாவது ஒருமுறை சாப்பிடுவது பாதுகாப்பானது.

5. குடைமிளகாய்!

சைனீஸ் உணவுகள் மற்றும் பீட்சாக்களில் பரவலாகப் பயன்படுத்தப்படும் குடைமிளகாயில் இயல்பாகவே காரத்தன்மை சற்று அதிகம் இருக்கும். இது உடலின் வெப்பத்தை அதிகரித்து ரத்த ஓட்டத்தை வேகப்படுத்தும். வெளியில் ஏற்கனவே அனல் அடிக்கும் போது, இந்த குடைமிளகாய் உங்கள் உடலை மேலும் சூடாக்கி அதிகப்படியான அசதியை ஏற்படுத்திவிடும்.

6. சர்க்கரை வள்ளிக்கிழங்கு!

பொதுவாகவே மாவுச்சத்து அதிகம் உள்ள எந்தவொரு கிழங்கு வகைகளையும் வெயில் காலத்தில் சற்று தள்ளி வைப்பதுதான் புத்திசாலித்தனம். சர்க்கரை வள்ளிக்கிழங்கை முழுமையாக ஜீரணிக்க உடலுக்கு அதிக நேரம் தேவைப்படும். இந்த நீண்ட ஜீரண செயல்முறையின் போது உடல் சூடு கணிசமாக அதிகரிக்கும் ஆபத்து உள்ளது.

இதையும் படியுங்கள்:
கொளுத்தும் கோடை வெயில்... வாக்களிக்க செல்லும் முன்பு கவனிக்க வேண்டியவை.!
vegetables-to-avoid-during-summer

வெயில் காலம், நமது உடலின் நீர்ச்சத்து மிக வேகமாக குறையும் ஒரு கடினமான காலகட்டமாகும். இந்த இக்கட்டான நேரத்தில் எந்தெந்த காய்கறிகள் உடலுக்குச் சூட்டைத் தருமோ, அவற்றை ஓரங்கட்டிவிட்டு நீர்ச்சத்து அதிகம் உள்ள காய்கறிகளுக்கு நாம் உடனடியாக மாற வேண்டும். வெள்ளரிக்காய், சுரைக்காய், பூசணிக்காய் மற்றும் தர்பூசணி போன்ற குளிர்ச்சியான உணவுகளை அதிகம் உங்களது அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com