கொளுத்தும் கோடை வெயில்... வாக்களிக்க செல்லும் முன்பு கவனிக்க வேண்டியவை.!

election-day-tips
election-day-tips
Updated on

தமிழ்நாட்டில் இன்று காலை 7:00 மணி முதல் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 6:00 மணி வரையுடன் வாக்குப்பதிவு நிறைவு பெறவுள்ளது. அதே சமயம் தற்போது கோடைகால வெயில் அதிகரித்து இருப்பதால், தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் வாக்களிக்க செல்வது அவசியம்.

இதன்படி மூத்தகுடிமக்கள் மற்றும் கர்ப்பிணிகள் வெயிலுக்கு முன்பாக காலையிலேயே வாக்களிப்பது சிறந்தது. ஒருவேளை நீண்ட வரிசையில் காத்திருந்து வெயில் நேரத்தில் வாக்களிக்க வேண்டியிருந்தால், அதற்கும் தயாராகவே வாக்காளர்கள் செல்ல வேண்டும்

நிழல் பாதுகாப்பு:

தற்போது தமிழ்நாட்டில் 100° செல்சியஸுக்கும் மேல் கோடை வெயில் கொளுத்துவதால், வாக்களிக்க செல்லும் முன்பு குடை அல்லது தொப்பியை எடுத்துச் செல்லலாம். நீண்ட வரிசையில் நிற்கும் போது இது உங்களுக்கு உதவும்.

நீரிழப்பைத் தவிர்க்க:

வெயிலில் நீண்ட நேரம் நிற்கும்போது உடலில் நீரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகையால் தண்ணீர், ஓஆர்எஸ் கரைசல் மற்றும் எலுமிச்சை கரைசலை உடன் எடுத்துச் செல்லலாம். அடிக்கடி சிறிது இடைவெளி எடுத்து தண்ணீர் அருந்தலாம்.

ஆடை:

வெயிலில் வெளிர் நிற தளர்வான பருத்தி ஆடைகளை அணிந்து செல்லலாம்.

சிறப்பு வசதிகள்:

மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்குச்சாவடிகளில் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த வசதிகளை அவர்கள் தவறாமல் பயன்படுத்திக் கொள்வது நல்லது. தேவைப்பட்டால் வாக்குச் சாவடிகளில் உள்ள தேர்தல் அதிகாரிகளின் உதவியை கேட்டுப் பெறலாம்.

இதையும் படியுங்கள்:
மக்களின் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு:தமிழக அரசியலையே உலுக்கிய அந்த 5 அதிர்ச்சித் தோல்விகள்!
election-day-tips

வாக்களிக்க சிறந்த நேரம்:

குறிப்பாக காலை 10 மணி முதல் 4 மணி வரை வெயில் அதிகமாக இருக்கும் என்பதால், முதியவர்கள் காலை 10 மணிக்குள்ளாகவோ அல்லது மாலை 4 மணிக்குப் பிறகோ வாக்களிக்கச் செல்வது நல்லது. வாக்களித்த பிறகு, வெளியில் நிற்பதை தவிர்த்து விடுங்கள்.

ஓய்வு தேவை:

வெயிலில் வாக்களிக்க நிற்கும் போது தலைவலி, மயக்கம் மற்றும் சோர்வு ஆகியவை ஏற்பட்டால் உடனே ஓய்வு எடுத்துக் கொள்வது நல்லது.

வாக்களிப்பது ஜனநாயக கடமை என்பதால், தவறாமல் உங்கள் வாக்கை செலுத்தி விடுங்கள். 100% வாக்களிப்பே தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கு நலன் பயக்கும்

இதையும் படியுங்கள்:
உங்கள் வாக்கை வேறு ஒருவர் போட்டு விட்டாரா? இதோ உங்களுக்கான உடனடி தீர்வு!
election-day-tips

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com