7 Amazing Foods That Eliminate Gut Parasites!
7 Amazing Foods That Eliminate Gut Parasites!

குடலில் உள்ள ஒட்டுண்ணிகளை நீக்கும் 7 அற்புத உணவுகள்!

Published on

நம் குடலில் உள்ள ஒட்டுண்ணிகள் நம் உடலில் வாழும் அந்நிய உயிரினங்களாகும். இவை வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், சோர்வு, ஊட்டச்சத்து குறைபாடு போன்ற பல விதமான ஆரோக்கிய பிரச்சனைகளுக்குக் காரணமாக இருக்கலாம். சில கடுமையான சூழ்நிலைகளில் இந்த ஒட்டுண்ணிகள் தீவிரமான நோய்களுக்கும் கூட வழிவகுக்கும். குடல் ஒட்டுண்ணிகளை எதிர்த்து போராட உதவும் பல இயற்கை உணவுகள் உள்ளன.‌ அந்த வகையில் குடல் ஒட்டுண்ணிகளை அழித்து செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் 7அற்புத உணவுகளைப் பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.

1. பூண்டு: பூண்டு அதன் வலுவான ஆன்ட்டி பாராசிட்டிக் பண்புகளுக்குப் பெயர் பெற்றது. இதில் இருக்கும் Allicin என்ற கலவை, பல்வேறு வகையான ஒட்டுண்ணிகளைக் கொல்ல உதவுகிறது. எனவே, தினமும் 2-3 பூண்டு பற்களை பச்சையாகவோ அல்லது உணவில் சேர்த்தோ சாப்பிடுவது நல்லது.

2. வெங்காயம்: வெங்காயம் பூண்டை போலவே மற்றொரு சக்தி வாய்ந்த ஆன்ட்டி பாராசிட்டிக் உணவாகும். இதில் உள்ள Quercetin என்ற கலவை குடல் ஒட்டுண்ணிகளின் வளர்ச்சியைத் தடுக்க உதவுகிறது. தினசரி ஒரு வெங்காயத்தை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலமாக குடலில் உள்ள ஒட்டுண்ணிகளை எளிதாக நீக்க முடியும்.

3. மஞ்சள்: மஞ்சள் அதன் அற்புதமான மருத்துவ குணங்களுக்குப் பெயர் பெற்றது. இதில் இருக்கும் Curcumin கலவை சக்தி வாய்ந்த ஆண்டிபராசிட்டிக் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டது. தினசரி பாலில் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் கலக்கி இரவில் குடிப்பது உடலுக்கு நல்லது.

4. தயிர்: தயிர் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு உதவும் புரோபயாடிக்ஸ் நிறைந்தது. இது குடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களுடன் போராடி ஒட்டுண்ணிகளின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

5. கேரட்: இயற்கையாகவே கேரட்டில் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. இது உடலில் வைட்டமின் ஏ ஆக மாற்றப்பட்டு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், குடல் ஒட்டுண்ணிகளை எதிர்த்து போராடவும் உதவுகிறது.

6. பப்பாளி விதைகள்: பப்பாளி விதைகளில் காணப்படும் கலவைகள் ஒட்டுண்ணிகளை நீக்க கூடியவை. இது குடல் ஒட்டுண்ணிகளை ஒரே அடியாக கொல்ல உதவுகிறது. ஒரு தேக்கரண்டி பப்பாளி விதைகளை முதல் நாள் இரவே தண்ணீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், குடல் ஒட்டுண்ணி பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

இதையும் படியுங்கள்:
பொரி விரைவில் நமுத்துப் போகாமல் சேமிக்கும் தந்திரங்கள்! 
7 Amazing Foods That Eliminate Gut Parasites!

7. வேப்பிலை: வேப்ப இலைகள் ஆன்ட்டி பாராசிட்டிக் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்கு பிரபலமானவை. எனவே, இவற்றை வாரம் ஒரு முறை ஜூஸ் போல அரைத்து குடித்து வந்தால், வயிற்றில் உள்ள எல்லா கெட்ட விஷயங்களும் இல்லாமல் போய்விடும்.

இதே போல கிராம்பு, நெல்லிக்காய், தர்பூசணி விதைகளும் குடலில் உள்ள ஒட்டுண்ணிகளை அழிக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது என்பதால், இவற்றை தொடர்ச்சியாக உங்களது உணவில் சேர்த்துக்கொண்டு குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள். இது உங்களது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்.

logo
Kalki Online
kalkionline.com