Backward Walking Benefits: பின்னோக்கி நடப்பதன் 7 நன்மைகள்!

Backward Walking
Backward Walking

பொதுவாக காலையிலும், மாலையிலும் ஓடுவது மற்றும் நடப்பது ஆகியவை, நமது உடலை மிகவும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும். உடற்பயிற்சிக் கருவிகள் இல்லாமலேயே எளிதாக உடல் ஆரோக்கியத்தைப் பெறுவதற்கு பலரும் கைவசம் வைத்திருக்கும் ஒன்றுதான் நடைப்பயிற்சி. நடைப்பயிற்சியில் முன்னோக்கி நடப்பதைவிட பின்னோக்கி நடந்தால், இன்னும் அதிகமான நன்மைகள் கிடைக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

அந்தவகையில், பின்னோக்கி நடைப்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி பார்ப்போம்.

முன்னோக்கி நடைப்பயணம் செய்யும்போதோ அல்லது ஜாகிங் செய்யும்போதோ முதலில் குதிகாலை வைத்துவிட்டு பின்னர்தான் விரல்களை வைப்போம். ஆனால், பின்னோக்கி நடக்கும்போது முதலில் விரல்களை வைத்துவிட்டு, பின்னர் குதிகாலை வைப்போம். இதனால் தசை வலிமையாகிறது. மேலும் உடலை பின் தள்ளுவதால், இடுப்புக்கு கீழ் உள்ள தசைகள் அதிகமாக செயல்படுகிறது.

பின்னோக்கி நடப்பயிற்சி செய்வதால், நாம் வழக்கமாக முன்னோக்கி நடக்கும்போது நமது வேகம் கூடும். மேலும் காலில் காயம் உள்ளவர்கள், முழங்கால் கீழ்வாதம், இளம் முடக்கு உள்ளவர்கள் பின்னோக்கி நடப்பதால், தசை வலிமை மேம்படுகிறது.

பின்னோக்கி நடப்பவர்களின் கலோரிகள் 40 சதவீத அளவு முன்னோக்கி நடப்பவர்களை விட அதிகமாக எரிக்கப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஏனெனில் , பின்னோக்கி நடக்கும்போது அதிக அளவு உடல் செயல்படுகிறது.

4.  பின்னோக்கி நடப்பதால் இதயத் துடிப்பு மேம்படுகிறது. மேலும் இது இதயம் மற்றும் நுரையீரலில் அதிக ஆக்ஸிஜனை வழங்குகிறது. இதனால் உடலின் செயல்பாடுகள் மேம்படுகின்றன.

5.  எப்போதும் ஒரே திசையில் இயங்கும் உடல், எதிர்திசையில் இயங்கும்போது தசைகளின் நெகிழ்வுத்தன்மை அதிகரிக்கிறது. மேலும், மூளை செயல்பாடுகளையும் உத்வேகப்படுத்தி, சிந்தனைத் திறன் மேம்படவும் உதவுகிறது.

6.  இது உடல் எடையைக் குறைப்பதோடு, முட்டி வலி, முதுகு வலி ஆகியவற்றையும் குறைக்கிறது.

7.  மேலும் இது மன அழுத்தத்தைக் குறைத்து, இரவு நேரங்களில் நிம்மதியான தூக்கத்தையும் தருகிறது.

இதையும் படியுங்கள்:
இந்தியாவில் தாவர அடிப்படையிலான உணவின் எழுச்சிக்கு என்ன காரணம் தெரியுமா?
Backward Walking

பின்னோக்கி நடப்பது என்பது முதலில் சவாலாகத்தான் இருக்கும். ஏனெனில், பின்னோக்கி நடப்பதால் தடுமாற்றம், வலி போன்றவை முதலில் ஏற்படுவது இயல்பே. ஆனால், ஒருவாரம் பயிற்சி எடுத்தாலே பின்னோக்கி சீராக நடக்க முடியும். 40 நிமிடங்கள் முன்னோக்கி நடப்பதும், 20 நிமிடங்கள் பின்னோக்கி நடப்பதும் ஒரே அளவானப் பயிற்சியை உடலுக்கு தருகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். எனவே, தினசரி குறைந்தது 20 நிமிடங்களாவது பின்னோக்கி நடைப்பயிற்சி செய்யுங்கள். குறிப்பாக, பின்னோக்கி நடக்கும்போது கவனமாக நடப்பது மிகவும் அவசியம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com