இந்த உணவுகளை பிரிட்ஜில் வைத்து சாப்பிட்டா ஆபத்தா? நோட் பண்ணணுமே!

Fridge
Fridge
Published on

'மாற்றம் ஒன்றே மாறாதது' என்பது சரிதான். மாற்றம் இருந்தால் தான் வாழ்க்கை சுவாரசியமாக இருக்கும். மாற்றம், சுவாரசியம் எல்லாம் சரியே, ஆனால் நாம் அடையும் மாற்றங்கள் நமக்கு நன்மை தருமா என்பதை சற்று கவனிக்க வேண்டும். நம் வாழ்க்கையில் முக்கிய மாற்றம் எதில் ஏற்படுகிறது? அதுவும் உடனுக்குடன் , அவ்வப்போது ? உணவில்தான்! நமக்கு பிடித்ததை சாப்பிடுவதில் தவறு இல்லைதான். உண்ணும் உணவு ஆரோக்கியமாக இருப்பதுதான் முக்கியம்.

நாம் சமைக்கும் சில பொருட்களை அதிகமான உணவுகளில் பயன்படுத்துவதுண்டு. எடுத்துக்காட்டாக தக்காளி, வெங்காயம் போன்றவை சமைப்பதற்கு அதிகம் தேவைப்படும் என்பதால் மொத்தமாக வாங்கி பிரிட்ஜில் அடைத்து தினசரி பயன்படுத்துகிறோம். ஆனால் அதுதான் தவறு. சில உணவுகளை நாம் பிரிட்ஜில் வைத்து சப்பிடுவதால், பல தீமைகளை சந்திக்க நேரிடலாம். பிரிட்ஜில் எந்த உணவுகளை வைக்க கூடாது என்று இங்கு தெரிந்துக் கொள்வோம். 

பிரிட்ஜில் மறந்தும் வைக்க கூடாத 7 உணவுகள்

வெங்காயம்

வெங்காயத்தை பிரிட்ஜில் வைப்பதன் மூலம், அங்குள்ள ஈரப்பதத்தை உறிஞ்சுகிறது. இதனால் வெங்காயம்  விரைவாக கெட்டுவிடும்.

தக்காளி

தக்காளியை குளிரூட்டும்போது தக்காளியில் உள்ள லைகோபீனின் அதன் கட்டமைப்பை மாற்றி, டோமடைன் கிளைகோல்கலாய்டு எனப்படும் கிளைகோல்கலாய்டாக மாறுகிறது. இந்த டொமடைன் கிளைகோல்காய்டு உடலுக்கு அதிக தீங்கு விளைவிக்கும். எனவே தக்காளியை பிரிட்ஜில் வைக்கவே கூடாது.

இதையும் படியுங்கள்:
காபி பிரியர்களே, உஷார்! உஷார்!
Fridge

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கை பிரிட்ஜில் வைக்கும்போது அதிலுள்ள குளிர்ந்த வெப்பநிலை காரணமாக, உருளைக்கிழங்கு மாவுச்சத்து சர்க்கரையாக மாறிவிடும். இது ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். அதோடு முளைக்க தொடங்கிவிடும் என்பதால் வெளியே காற்றோற்றமாக, ஈரப்பதம் குறைவாக உள்ள இடத்தில் வைக்கலாம்.

பூண்டு

பூண்டை தோலுரித்து பிரிட்ஜில் சேமித்து பயன்படுத்துவது அதன் சுவையை குறைத்துவிடும். பூண்டை சேமிக்க விரும்பினால், உரித்த பூண்டை காற்று புகாத டப்பாவில் அடைத்து வைக்கலாம். 2-3 நாட்களுக்கு நன்றாக இருக்கும்.

ரொட்டி

குளிர்சாதன பெட்டியில் ரொட்டியை வைத்தால்,  பூஞ்சை உண்டாகி, விரைவில் கெட்டுவிடும்.

வாழைப்பழம்

வாழைப்பழத்தை அதிகமானோர் பிரிட்ஜில் வைப்பதுண்டு. ஆனால் அவ்வாறு செய்வதால் வாழைப்பழத்தின் புத்துணர்ச்சியும், சுவையும் குறையலாம். வாழைப்பழங்களை காற்றோட்டமாக வைத்திருந்தாலே அழுகாமல் இருக்கும். ஃபிரிட்ஜில் வைத்தால் 2 நாட்களுக்கு பிறகு அழுக தொடங்கிவிடும்.

தேன்

தேனை பிரிட்ஜில் வைத்தால், அதில் உள்ள குளிர்ச்சியின் காரணமாக, தேனில் உள்ள நீர் உறைந்து, அதன் தரம் குறைந்துவிடும். இதனால் தேனின் சுவை, தரம் மாறிவிடும்.

இது போன்ற உணவுகளை பிரிட்ஜில் வைப்பதை தவிர்த்து விடுங்கள். ஏற்கனவே ஆரோக்கியமற்ற உணவுகளை அதிகமாக எடுத்துக்கொண்டிருக்கிறோம். நம் ஆரோக்கியத்தை பாதிக்கும் செயல்களில் மேலும் மேலும் இறங்காமல் இருப்பது நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com