ஹார்மோன் அளவை சமநிலையில் வைக்க உதவும் 7 ஆரோக்கிய பழக்கங்கள்!

Exercising woman
Exercising womanhttps://www.onlymyhealth.com

ம் உடலின் ஆரோக்கியமான இயக்கத்திற்கு பல வழிகளில் உதவக்கூடியவை ஹார்மோன்கள் ஆகும். நாம் பின்பற்றும் உணவியல் மற்றும் வாழ்வியல் அடிப்படையில் இந்த ஹார்மோன்களின் சுரப்பில் ஏற்றத்தாழ்வு உண்டாகும். அது உடலுக்கு ஆரோக்கிய சீர்கேடுகளை கொண்டு வர நல்ல வாய்ப்பாய் அமைந்துவிடும். எனவே, ஹார்மோன் சுரப்பின் அளவை சமநிலையில் வைத்துப் பராமரிப்பது மிகவும் அவசியம் ஆகும். அதற்கு நாம் பின்பற்ற வேண்டிய 7 நல்ல பழக்கங்கள் என்ன என்பதை இந்தப் பதிவில் காணலாம்.

யோகா, மெடிடேஷன், ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி போன்ற  ஸ்ட்ரெஸ்ஸைக் குறைக்க உதவும் செயல்களில் தினமும் ஈடுபடுவது ஹார்மோன் அளவை சம நிலைப்படுத்த உதவும்.

முக்கியமாக ஹார்மோன் அளவை சமநிலைப்படுத்த தினமும் ஏழு அல்லது எட்டு மணி நேர ஆழ்ந்த. அமைதியான தூக்கம் மிகவும் அவசியம்.

ஆரோக்கியமான எடையைப் பராமரிக்க தினமும் ஏதாவது ஒரு உடற்பயிற்சியை மேற்கொள்ளுதல் அவசியம். இதுவும் ஹார்மோன் சுரப்பின் அளவை சமநிலைப்படுத்த உதவும்.

அளவுக்கு அதிகமாக காஃபின் மற்றும் ஆல்ஹகால் எடுத்துக்கொள்வது ஹார்மோன் சுரப்பில் வேறுபாட்டை உண்டாக்கக்கூடிய காரணிகளாகும். ஆகவே, உடலுக்கு சீர்கேடு தரும் மேற்கூறிய பானங்களை அளவோடு நிறுத்திக்கொள்வது நல்ல பலன் தரும்.

இதையும் படியுங்கள்:
குரங்கு, அணில், காகம் வழிபட்ட அபூர்வ சிவஸ்தலம்!
Exercising woman

சுற்றுச்சூழல் நச்சுக்கள் அதிகம் உடம்பில் படாமல் பாதுகாப்பதும், நச்சுக்களை நீக்க இயற்கை முறையில் தயாரிக்கப்படும் பொருட்களை உபயோகித்து சுத்தம் செய்வதும் ஹார்மோன் சுரப்ப்பை சமநிலையில் வைக்க கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.

பசியேற்படும்போது உணவை கவனச் சிதறலின்றி முழு ஈடுபாட்டுடன் திருப்தி ஏற்படும் வரை உண்டு முடிப்பது உடலுக்கு ஆரோக்கியம் தரும். அவசரமின்றி, நிதானமாக உணவை உட்கொள்ளுதல் ஜீரணம் சிறப்பாகவும்,  ஹார்மோன் அளவை சமநிலைப்படுத்தவும் பெரிதும் உதவும்.

சரிவிகித உணவை உட்கொண்டும் தினசரி உடற்பயிற்சி செய்தும் உடல் எடையை சமநிலையில் வைத்துப் பராமரிப்பது, ஹார்மோன் அளவை சமநிலைப்படுத்த சிறந்த முறையில் உதவி புரியும் காரணிகளாகும்.

மேற்கூறிய வழிமுறைகளை தவறாமல் பின்பற்றி ஹார்மோன் சுரப்பை சமநிலையில் வைத்துப் பராமரிப்போம்;  உடலில் ஆரோக்கியக் குறைபாடின்றி வாழ்வோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com