
உடல் பருமன் என்பது சிலருக்கு தீர்க்க முடியாத பிரச்சினையாகி கவலை கொள்ள வைக்கும். உடற்பயிற்சி செய்தும், உட்கொள்ளும் உணவின் அளவைக் குறைத்தும் பயனில்லை என அவர்கள் புலம்புவதையும் நாம் கேட்டிருக்கிறோம். உடல் எடையைக் குறைப்பதற்கு அவர்கள் மொத்தமாகத் தவிர்க்க வேண்டிய ஏழு வகை உணவுகள் என்னென்ன என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
1. இனிப்பு சேர்த்த பானங்கள்: சோடா, ஃபுரூட் ஜூஸ் மற்றும் எனர்ஜி ட்ரிங்க்ஸ் போன்றவை அதிகளவு சர்க்கரை சேர்த்து தயாரிக்கப்படுபவை. இவற்றிலிருந்து உடலுக்கு கலோரி எதுவும் கிடைப்பதில்லை. இரத்த சர்க்கரை அளவை உயர்த்தவும் பசியெடுக்கச் செய்யவும் மட்டுமே இவை உதவும்.
2. பதப்படுத்தப்பட்ட நொறுக்குத் தீனிகள்: சிப்ஸ், க்ராக்கர்ஸ் மற்றும் குக்கீஸ் போன்ற ஸ்னாக்ஸ்களில் அதிகளவு ஆரோக்கியமற்ற கொழுப்புகள், சோடியம் மற்றும் கார்போஹைட்ரேட்கள் உள்ளன. இவை உடலின் எடையை அதிகரிக்கச் செய்யவும், வீக்கங்களை உண்டு பண்ணவும் மட்டுமே உதவும்.
3. ஒயிட் பிரட் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்கள்: ஒயிட் பிரட், பாஸ்தா மற்றும் பேஸ்ட்ரீஸ்களில் நார்ச் சத்தும், ஊட்டச் சத்துக்களும் மிகக் குறைவு. ஆகையால் இவை விரைவிலேயே ஜீரணிக்கப்பட்டுவிடும். அடிக்கடி பசி உணர்வைத் தூண்டும். அதன் மூலம் உட்கொள்ளும் உணவின் அளவு அதிகரித்துக் கொண்டு போய், உடல் எடை உயர வழி வகுக்கும்.
4. பொரித்த உணவுகள்: ஃபிரஞ்ச் ஃபிரை மற்றும் சிக்கன் ஃபிரை போன்ற எண்ணெயில் டீப் ஃபிரை செய்யப்பட்ட உணவுகளில் ஆரோக்கியமற்ற ட்ரான்ஸ் ஃபேட்களும் அதிகளவு கலோரிகளும் நிறைந்திருக்கும். இவற்றை உட்கொள்வதால் உடல் எடை அதிகரிக்கும் அபாயம் அதிகம்.
5. இனிப்பான செரியல்கள்: காலை உணவாக எடுத்துக்கொள்ளப்படும் அநேக செரியல்களில் இனிப்பு சுவை மறைமுகமாக சேர்க்கப்பட்டிருக்கும். இதனால் அதை உண்பவரின் ஆற்றல் செயலிழக்கவும், மீண்டும் மீண்டும் உணவு உண்ணவேண்டும் என்ற ஆவல் அதிகரிக்கவும் வாய்ப்பு உண்டாகும்.
6. ஆல்கஹால்: ஆல்கஹாலிக் ட்ரிங்க்ஸ்களில் கலோரி எதுவும் கிடையாது. மேலும் இவை மெட்டபாலிச ரேட்டை குறையச் செய்யும். மோசமான உணவுகளை தேர்வு செய்யவும் தூண்டும்.
7. துரித உணவுகள்: பீட்ஸா, பர்கர், பதப்படுத்தப்பட்ட துரித உணவுகள் போன்றவைகளில் ஆரோக்கியமற்ற கொழுப்புகள், சோடியம் மற்றும் விரைவில் கெட்டுப் போகாமலிருக்க உதவக்கூடிய இரசாயனப் பொருட்களும் (preservatives) அதிகம் இருக்கும். இவை எடைக் குறைப்பிற்கு எந்த வகையிலும் உதவாதவை.
மேலே கூறிய ஏழு வகை உணவுகளை அறவே தவிர்ப்பது ஆரோக்கியமான எடைக் குறைப்பிற்கு சிறந்த முறையில் உதவி புரியும்.