காலை உணவாக நிறைய வீடுகளில் வெண்பொங்கல் செய்வார்கள். வெண்பொங்கலில் நெய், மிளகு, சீரகம், இஞ்சி என்று பல ஆரோக்கியமான பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. பொங்கலை காலை நேரத்தில் சாப்பிட்டால் நன்றாகத் தூக்கம் வரும் என்று சொல்லப்படுவதுண்டு. வெண்பொங்கல் சாப்பிடுவதால் உடலுக்குக் கிடைக்கும் நன்மைகள் என்னவென்பதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
1. வெண்பொங்கலில் 15 கிராம் அளவிற்கு புரதச்சத்து இருப்பதால், இதை எடுத்துக்கொள்வது தசை ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
2. வெண்பொங்கலில் நெய் சேர்த்து சமைப்பதால், ஆரோக்கியமான கொழுப்புச்சத்து மூளை ஆரோக்கியத்திற்கும், மூளை நன்றாக செயல்படவும் உதவுகிறது. நெய் பயன்படுத்துவதால் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் என்ற பயம் வேண்டாம். நெய்யில் ஆரோக்கியமான கொழுப்பு உள்ளதால், கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துகிறது.
3. வெண்பொங்கலில் சேர்க்கப்படும் கறிவேப்பிலை, மிளகு, மஞ்சள் தூள் அனைத்தும் அலர்ஜி எதிர்ப்புப் பண்புகள் கொண்டவை என்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை ஆரோக்கியமாக வைக்கிறது.
4. சிறுதானியங்களில் வெண்பொங்கல் செய்து சாப்பிடுவது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. சுவையும் மாறாது அப்படியேயிருக்கும்.
5. சாதாரணமாக வெண்பொங்கலை பகலில் சாப்பிட்டால் நன்றாகத் தூக்கம் வரும் என்று சொல்வார்கள். எனவே, தூக்கமின்மை பிரச்னை உள்ளவர்கள் வெண்பொங்கலை இரவு நேரம் செய்து சாப்பிட்டால் நன்றாகத் தூக்கம் வரும்.
6. வெண்பொங்கலில் புரதம், வைட்டமின், தாதுக்கள், அமினோ அமிலம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால், இதை சாப்பிட்டால் அந்த நாள் முழுவதும் உடலுக்கு நல்ல ஆற்றல் கிடைக்கும்.
7. வெண்பொங்கலில் சேர்க்கப்படும் சீரகம், மிளகு, இஞ்சி ஆகியவை குமட்டல், வாந்தி போன்ற பிரச்னைகளை சரிசெய்ய உதவுகிறது. மிளகு மற்றும் இஞ்சி மலச்சிக்கலை தடுத்து செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. இதனால் குடல் ஆரோக்கியம் மேம்படுகிறது.
8. வெண்பொங்கலில் நார்ச்சத்து உள்ளதால், இதை சாப்பிடுவதால் நீண்ட நேரம் பசியைக் கட்டுப்படுத்தி அதிகமாக உணவு எடுத்துக்கொள்வதைத் தடுக்கிறது.
9. வெண்பொங்கல் சாப்பிடுவதால் உடலுக்குத் தேவையான ஆன்டி ஆக்ஸிடென்ட் கிடைக்கின்றது. வெண்பொங்கல் சளி, இருமல் பிரச்னைகளை சரிசெய்து நோய் தொற்று வராமல் காக்கிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. இத்தனை நன்மைகளை கொண்ட வெண்பொங்கலை காலையில் எடுத்துக்கொள்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லதாகும்.