7 வித ஊட்டச்சத்து குறைபாடுகளும் அவற்றுக்கான தீர்வுகளும்!

ஊட்டச்சத்து உணவுகள்
ஊட்டச்சத்து உணவுகள்https://tamil.examsdaily.in

ம் உடலுக்குள் மெட்டபாலிசம் என்ற வளர்சிதை மாற்றம் சிறப்புற நடைபெற வைட்டமின் B Complex, இரும்புச்சத்து, அயோடின் போன்ற சில ஊட்டச்சத்துக்களின் உதவி அவசியமாகிறது. இந்த ஊட்டச்சத்துக்களில் குறையேற்பட்டால் மெட்டபாலிச ரேட்டிலும் குறையேற்படுகிறது. இதைத் தவிர்ப்பதற்கு நாம் உண்ணும் உணவு முறையில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை இங்கு பார்ப்போம்.

வைட்டமின் D  செல்களுக்குள் குளுக்கோஸ் உறிஞ்சப்பட்டு மெட்டபாலிசம் சிறக்க உதவும் முக்கியமான சத்து. இதை தினமும் பதினைந்து நிமிடம் சூரிய ஒளியில் நிற்பதன் மூலமும், சீஸ், முட்டை, ஃபிஷ் லிவர் ஆயில், மீன் ஆகிய உணவுகள் மூலமும் பெறலாம். இச்சத்து குறையும்போது, தூக்கமின்மை, சோர்வு, எலும்புகளில் வலி போன்ற கோளாறுகள்  ஏற்படலாம்.

வைட்டமின் B12 கார்போஹைட்ரேட்ஸ், கொழுப்பு மற்றும் புரோட்டீன் ஆகியவை மெட்டபாலிசத்திற்கு உதவிபுரியும் சத்து. இதை நொதிக்கச் செய்த உணவுகளான தோசை, கெஃபிர், தயிர் ஆகிய உணவுகள் மூலம் பெறலாம். இச்சத்து குறையும்போது குமட்டல், எடை குறைதல், பலவீனமடைந்த தசை, எரிச்சல் போன்ற உடல்நலக் குறைபாடுகள் ஏற்படலாம்.

தைராய்ட் சுரப்பிகளின் செயல்பாடுகளை ஊக்குவித்து மெட்டபாலிசம் சிறக்கச் செய்வது செலீனியம். இச்சத்தை பிரேஸில் நட், ஹேஸல் நட் மற்றும் சூரியகாந்தி விதைகளிலிருந்து பெறலாம். செலீனியம் சத்துக் குறைபாடேற்பட்டால் நோயெதிர்ப்பு சக்தி குறைவது, இதய இரத்த நாளங்களில் கோளாறு, கரு உண்டாவதில் பிரச்னை, தைராய்ட் சுரப்பதில் பிரச்னை, தசைகள் எலும்புடன் கூடியிருப்பதில் பிரச்னை போன்ற பல கோளாறுகள் உண்டாகும்.

என்சைம் ஆக்டிவிட்டி, புரோட்டீன் ஸின்தஸிஸ் போன்ற மெட்டபாலிசம் சம்பந்தப்பட்ட பல செயல்களில் அதிகம் உதவிபுரிவது சிங்க். இதை நாம் பூசணி விதைகள், கொண்டைக் கடலை மற்றும் முந்திரிப் பருப்புகளிலிருந்து பெறலாம். சிங்க் குறைபாடு வரும்போது, வயிற்றுப்போக்கு, கண் நோய், முடி உதிர்தல், சருமத்தில் நிற மாற்றம், வாசனை மற்றும் சுவை அறியும் திறன் இல்லாமல்போவது போன்ற உடல் நலக் கோளாறுகள் வர வாய்ப்புண்டு.

என்சைம்ஸ் மற்றும் ஹார்மோன் ஸின்தஸிஸ் போன்ற மெட்டபாலிசம் சம்பந்தப்பட்ட செயல்பாடுகளில் அதிகம் உதவிபுரிவது புரோட்டீன். பன்னீர், பால், பருப்பு மற்றும் பயறு வகைகளில் புரோட்டீன் அதிகம் உள்ளது. கல்லீரல் வீக்கம், பலமின்மை, சோர்வு, தசைகளின் அளவு  குறைவது, மன நிலையில் மாற்றம், சருமம் மற்றும் முடி பிரச்னை போன்ற உடல் நலக் கோளாறுகள் புரோட்டீன் சத்து குறைபாட்டின் அறிகுறிகளாகும்.

இதையும் படியுங்கள்:
மழைக்காலத்தில் சாப்பிட வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள்! 
ஊட்டச்சத்து உணவுகள்

இரும்புச் சத்தை உள்ளுறிஞ்சி சக்தியை வெளிக் கொணரும் மெட்டபாலிசத்தில் காப்பர் அதிகளவில் துணை நிற்கும். பருப்பு வகைகள், சூரியகாந்தி விதைகள், ஹெம்ப் விதைகள் மற்றும் காப்பர் பாத்திரங்களில் நிறைத்த தண்ணீர் ஆகியவற்றிலிருந்து காப்பர் சத்தை நாம் பெறலாம். காப்பர் சத்து குறையும்போது அனீமியா, உடல் உஷ்ணம் குறைதல், எலும்பு முறிவு, ஆஸ்டியோபொரோஸிஸ், இதய துடிப்பின் அளவில் ஏற்றத் தாழ்வு, இரத்தத்தில் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை குறைதல், தைராய்ட் பிரச்னை போன்ற உடல் நலக் கோளாறுகளை சந்திக்க நேரும்.

சோர்வில்லாத சிறந்த மெட்டபாலிக் செயல்பாடுகளுக்கு உதவுவது இரும்புச் சத்து. இந்த சத்தை நாம் பேரீச்சம் பழம், கிரேப்ஸ், மாதுளம் பழம், வெந்தயக் கீரை, அமராந்த் போன்ற உணவுகளிலிருந்து பெறலாம். தலை வலி, சோர்வு, மூச்சு விடுவதில் சிரமம், இதய துடிப்பின் அளவில் மாற்றம், சரும நிறம் மாறுதல் போன்றவை இரும்புச் சத்து குறைபாட்டின் அறிகுறிகளாகும்.

ஊட்டச்சத்துக் குறைபாடின்றி வாழ உண்ணும் உணவில் கவனம் வைப்போம்; ஆரோக்கியம் காப்போம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com