பெண்கள் ஆரோக்கியத்தில் பளு தூக்கும் பயிற்சியின் 8 நன்மைகள்!

Benefits of weightlifting for women's health
Benefits of weightlifting for women's health
Published on

ற்போது உடற்பயிற்சி என்பது ஆண், பெண் என்ற பாகுபாடின்றி ஆரோக்கியம் காக்க அனைவரும் மேற்கொள்ள வேண்டியதொன்று என பரிந்துரைக்கப்படுகிறது. சிலர் வாக்கிங், மெடிட்டேஷன் போன்ற ஏரோபிக் பயிற்சிகளையும் இன்னும் சிலர் ஜிம்முக்குச் சென்று பயிற்சியாளரின் வழிகாட்டுதலோடு பல வகை பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். பெண்களும் ஜிம்முக்குச் சென்று பளு தூக்குதல் (weight Lifting) போன்ற கடினமான பயிற்சிகளை செய்ய ஆரம்பித்துள்ளனர். பளு தூக்கும் பயிற்சி மூலம் பெண்களுக்குக் கிடைக்கும் 8 ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பதை இப்பதிவில் பார்ப்போம்.

1. கிரேஸ்ஃபுல் ஏஜிங்: பளு தூக்குதல் பெண்களுக்கு வயதாகும்போது அவர்களின் தசைகளின் அளவையும் இயக்கங்களையும் சீராக வைத்துப் பராமரிக்க உதவும். இதனால் அவர்கள் நீண்ட காலம் சுறுசுறுப்பாகவும் சுதந்திரமாகவும் நடமாட முடியும். மேலும் இது, வயதான காரணத்தால் உண்டாகும் சர்கோபெனியா (sarcopenia) என்ற தசை இழப்பு செயல்பாட்டை எதிர்த்துப் போராடவும் செய்யும்.

2. ஒல்லியான தசை நிறை: பளு தூக்குதல் பெண்களின் உடலில் ஒல்லியான தசை நிறை (lean muscle mass) உருவாகக் காரணமாகிறது. இது உடம்பில் வெறுமனே சதைக் குவியலை உருவாக்காமல் உடம்பு முழுவதும் உள்ள சதைகளை சமநிலைப்படுத்தி, வலுவான பெண்மைத்தன்மையுடன் கூடிய உருவம் பெற உதவும்.

3. ஹார்மோன் அளவை  சமநிலைப்படுத்தும்: சக்தியை அதிகரிக்க உதவும் பளு தூக்குதல் பயிற்சி, உடலில் எடைப் பராமரிப்பு, மன அழுத்தம் குறைதல், ஒட்டு மொத்த உடல் நலம் பேணுதல் ஆகிய செயல்களுக்கு  உதவக்கூடிய இன்சுலின், கார்ட்டிசால் போன்ற ஹார்மோன்களின் அளவை சமநிலையில் வைக்க உதவும்.

இதையும் படியுங்கள்:
வீட்டில் நீண்ட காலம் சேமித்து வைக்கக் கூடாத அத்தியாவசியப் பொருட்கள்!
Benefits of weightlifting for women's health

4. உடல் அதிக பலமுடன் செயலாற்ற உதவும்: பெண்களின் தினசரி வேலைகளான குழந்தைகளை சுமப்பது, மளிகை சாமான்களை தூக்கி வருவது, படிக்கட்டுகளில் ஏறுதல் போன்ற வேலைகளை எந்தவித சிரமமுமின்றி செய்து முடிக்க பளு தூக்குதல் பயிற்சி உதவும். இயக்கங்கள் சிறப்பாகும்போது உடலில் காயங்கள் உண்டாகும் அபாயமும் தடுக்கப்படும்.

5. மெட்டபாலிஸ ரேட் அதிகரிக்கும்: இப்பயிற்சி மூலம் கிடைக்கும் சக்தி பெண்கள் ஏதும் செய்யாமல் இருக்கும்போது கூட மெட்டபாலிஸம் சிறந்த முறையில் நடைபெற உதவும். அதனால் அதிகளவு கலோரி எரிக்கப்படும். இது எடையைக் குறைக்க அல்லது சமநிலையில் வைத்துப் பராமரிக்க உதவும்.

6. எலும்புகளின் அடர்த்தி அதிகரிக்க உதவும்: பெண்கள் தங்கள் மெனோபாஸ் நிலையைக் கடக்கும் வயதை அடையும்போது எலும்புகள் வலுவிழப்பது சகஜம். அதனால் ஆஸ்டியோபொரோஸிஸ் நோய் வரும் வாய்ப்புண்டு. பளு தூக்குதல் பயிற்சி பெண்களின் எலும்புகளும் ஆரோக்கியமாக வளர்ந்து வர உதவி புரிவதால், வயதானபோது அவர்களின் எலும்புகள் உடைவதற்கான வாய்ப்பு உண்டாகாது. உடலின் மொத்த எலும்புகளும் வலுவுள்ளதாக செயல்படும்.

இதையும் படியுங்கள்:
அதிக மன அழுத்தத்தினால் உடலுக்கு ஏற்படும் பாதிப்புகள்!
Benefits of weightlifting for women's health

7. மூளை ஆரோக்கியம் மேம்படும்: பளு தூக்குதல் உள்ளிட்ட அனைத்துப் பயிற்சிகளும் ஸ்ட்ரெஸ் மற்றும் மனக் கவலைகளைக் குறைக்க உதவும் என்டார்ஃபின் என்ற ஹார்மோனை உற்பத்தி செய்ய உதவி புரியும். சக்தியும் உடற்தகுதி அளவும் மேன்மையடையும்போது நம் மீது நமக்கு உண்டாகும் நம்பிக்கையின் அளவும் அதிகரிக்கும்.

8. நாள்பட்ட வியாதிகள் குறையும்: தொடர்ந்து பளு தூக்கும் பயிற்சி செய்து வரும்போது இதய இரத்த நாளங்களின் ஆரோக்கியம் மற்றும் மெட்டபாலிஸ ரேட் ஆகியவை மேன்மை அடையும். இதனால் இதய நோய், மூட்டு வலி, நீரிழிவு நோய் போன்ற நாள்பட்ட வியாதிகள் வரும் அபாயம் குறையும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com