நெஞ்செரிச்சல் எனப்படும் ஆசிட் ரெஃப்ளெக்ஸ் பிரச்னை குணமாக உதவும் 8 பானங்கள்!

நெஞ்செரிச்சல்
நெஞ்செரிச்சல்https://tamil.webdunia.com
Published on

சிட் ரெஃப்ளெக்ஸ் (Acid Reflex) என்பது நாம் உண்ணும் உணவுகள் வயிற்றுக்குள் செல்லும்போது அவை ஜீரணமாவதற்கு ஜீரண அமிலங்கள் உற்பத்தியாகி உணவுடன் கலக்கும். அப்போது, சிலருக்கு அந்த அமிலம் பின்னோக்கி வந்து உணவுக் குழாய்க்குள் சென்று அங்கு எரிச்சலை உண்டுபண்ணும். மேலும், அது  நெஞ்செரிச்சலை உண்டுபண்ணவும் காரணமாகும். பொதுவாக இந்த அசௌகரியம் சாப்பிட்ட பின் உண்டாகும். சுலபமாக குணப்படுத்தக்கூடியதுதான் இந்தப் பிரச்னை. மருத்துவ உதவியின்றி, நாமே இதை சரி பண்ணிக்கொள்ள முடியும். உணவுக்குப் பின் கீழ்க்காணும் இந்த 8 வகை பானங்களை உட்கொண்டால் ஆசிட் ரெஃப்ளெக்ஸ் ஆவதை தடுக்கலாம். அந்த 8 வகை பானங்கள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

1. தண்ணீர்: ஒரு டம்ளர் சாதாரண தண்ணீரைக் குடிப்பது, உணவு குழாய்க்குள் நுழைந்த அமிலத்தை நீர்க்கச் செய்து அதை மீண்டும் வயிற்றுக்குள் செல்ல வழி வகுக்கும்.

2. ஹெர்பல் டீ: கெமோமைல், இஞ்சி, லிகோரைஸ் போன்ற மூலிகைகளை உபயோகித்து தயாரிக்கப்பட்ட டீ குடிக்கலாம். இந்த டீ தொண்டைக்குள் வந்த அமிலத்தினால் ஏற்பட்ட எரிச்சலின் வீரியத்தை, தனது அமைதிப்படுத்தும் குணத்தினால் குறையச் செய்யும்.

3. ஆலுவேரா ஜூஸ்: இது தொண்டையிலும், வயிற்றின் உட்புறத்து மெல்லிய தோல்களிலும் உண்டாகியிருக்கும் வீக்கங்களைக் குறைக்க உதவும்; ஆசிட் ரெஃப்ளெக்ஸ் வரும் அறிகுறிகளை நீக்கும்.

4. இளநீர்: கோக்கனட் வாட்டர் குடிப்பதால் அதன் காரத்தன்மை (Alkaline) வயிற்று அமிலத்தின் தன்மையை சமநிலைப்படுத்திவிடும்.

5. பாதாம் பால்: இதுவும் காரத் தன்மையுடைய ஒரு பானம். இதைக் குடிப்பதால் அமிலத்தின் குணங்கள் சமநிலை அடையும். நெஞ்செரிச்சலும் நீங்கும்.

6. க்ரீன் ஸ்மூத்தி: பசலை, காலே, வெள்ளரி போன்ற ஆல்கலைன் குணம் கொண்ட காய்களை உபயோகித்து தயாரிக்கப்படும் ஸ்மூத்தியை உண்பதும் அமிலத்தின் குணங்களை சமநிலைப்படுத்த உதவும். இதனால் ஆசிட் ரெஃப்ளெக்ஸ் தடுக்கப்படும்.

இதையும் படியுங்கள்:
நுரையீரலில் நச்சு சேராமல் இருக்க செய்ய வேண்டியவை! 
நெஞ்செரிச்சல்

7. வாழைப் பழம்: இதிலுள்ள ஆன்டாசிட் (Antacid) என்ற அமில முறிவுப் பொருள் வயிற்றின் உட்புற சுவற்றில் மெல்லிய ஏடு போல் படிந்து ஆசிட் ரெஃப்ளெக்ஸ் ஆகும் அறிகுறிகளைக் குறைக்கும். இப்பழத்தை ஸ்மூத்தியாக செய்தும் உண்ணலாம்.

8. வெஜிடபிள் ஜூஸ்: அமிலத்தன்மை இன்றி ஆல்கலைன் குணம் நிறைந்த முட்டைகோஸ், கேரட், புரோக்கோலி போன்ற காய்களில் ஜூஸ் செய்து அருந்துவது அசிடிட்டியை குறைக்க உதவும்.

ஆசிட் ரெஃப்ளெக்ஸ் பிரச்னை உள்ளவர்கள் மேற்கூறிய 8 பானங்களை தேவைப்படும்போது உட்கொண்டு தீர்வு காணலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com