குர் சன்னாவை தினமும் உண்பதால் கிடைக்கும் 8 ஆரோக்கிய நன்மைகள்!

Health benefits of Gur Chana
Health benefits of Gur Chana
Published on

குளிர் அதிகமுள்ள சீசனில் முக்கியமாக கவனம் செலுத்தவேண்டிய விஷயங்கள் இரண்டு. ஒன்று, குளிர் நம் உடலை நேரடியாகத் தாக்கி உடல் நலக் குறைபாடுகள் உண்டாகாமல் தடுக்க உதவும் வின்டர் கால உடைகள். இரண்டாவது, குளிரைத் தாங்குவதற்குத் தேவையான சக்தியை வழங்கக்கூடிய ஊட்டச் சத்துக்கள் நிறைந்த உணவுகள். அதில் மாலை நேர ஸ்நாக்ஸ்ஸாக உட்கொள்ளத் தகுந்தது குர் சன்னா எனக் கூறலாம். இது பஞ்சாபியர்களால் அதிகம் உட்கொள்ளப்படும் ஓர் உணவு. இதில் என்னென்ன ஆரோக்கிய நன்மைகள் உள்ளன என்பதைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

1. உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள்: குர் (வெல்லம்) சன்னாவில் உடலுக்குத் தேவையான இரும்புச் சத்து, பொட்டாசியம், மக்னீசியம் ஆகிய கனிமச் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. இவை உடலின் மொத்த ஆரோக்கியத்தையும் மேன்மையடையச் செய்து, உடலின் இயக்கங்கள் சீராக நடைபெற உதவுகின்றன.

2. ஹீமோகுளோபின் அளவு உயரும்: கொண்டைக் கடலையில் இரும்புச் சத்து அதிகம். வெல்லம் ஹீமோகுளோபின் அதிகளவு உற்பத்தியாக உதவி புரிந்து அனீமியா எனப்படும் இரத்த சோகை நோய் வராமல் தடுக்க உதவும்.

3. செரிமானம் சிறப்பாக உதவும்:  குர் மற்றும் சன்னா இரண்டிலும் நார்ச்சத்துக்கள் அதிகம். இவை இரைப்பை குடல் இயக்கங்கள் சிறப்பாக நடைபெற உதவும். அதன் மூலம் ஜீரணம் கோளாறின்றி நடைபெறும். மலச்சிக்கல் உண்டாகும் வாய்ப்பு குறையும்.

இதையும் படியுங்கள்:
மற்றவருடன் சுமூகமான உறவுக்கு வழிவகுக்கும் சில யோசனைகள்!
Health benefits of Gur Chana

4. நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்: வெல்லம் மற்றும் கொண்டைக் கடலை இரண்டிலுமே நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் குணம் உண்டு. இதனால் உடலின் பாதுகாப்பு வளையம் பலமடைந்து உடலுக்குள் தொற்று நோய்க் கிருமிகள் நுழையாமல் பாதுகாக்க முடியும்.

5. சக்தியின் அளவை உயர்த்தும்: வெல்லத்தில் சக்தி அளிக்கக்கூடிய கார்போஹைட்ரேட்ஸ் அதிகம் உள்ளன. சன்னா டாலில் புரோட்டீன் சத்து அதிகம். இவை இரண்டையும் சேர்த்து உட்கொள்ளும்போது உடலுக்கு சக்தி குறைவின்றிக் கிடைக்கும்.

6. இரத்த சர்க்கரை அளவு சமநிலைப்படும்: கொண்டைக் கடலை குறைந்த க்ளைசெமிக் இன்டெக்ஸ் கொண்டது. இதை குர் சேர்த்து உண்ணும்போது அதிலுள்ள காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட்ஸ் இரத்த சர்க்கரை அளவை சம நிலையில் வைக்க உதவும். சர்க்கரை அளவு திடீரென உயரக்கூடிய அபாயமும் தடுக்கப்படும்.

7. எலும்புகளின் ஆரோக்கியம் மேம்படும்: இந்த இரண்டு உணவுகளிலும் உள்ள கால்சியம் மற்றும் மக்னீசியம் சத்துக்கள் எலும்புகளின் ஆரோக்கியம் காக்கவும், எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்கவும் உதவும்.

8. நச்சுக்களை வெளியேற்ற உதவும்: குர் ஒரு நச்சு நீக்கியாக செயல்பட்டு கல்லீரலுக்கு உதவி புரியும். தீங்கிழைக்கும் நச்சுக்களற்ற உடம்பை உருவாக்க உதவும்.

இதையும் படியுங்கள்:
இனிப்பு சுவை ஆசையை அடக்கும் 5 வகை உணவுகள்!
Health benefits of Gur Chana

சன்னா டால் அலர்ஜி உள்ளவர்கள் குர் சன்னா ஸ்நாக்ஸ் எடுத்துக்கொள்வதை தவிர்த்து விடலாம். வெல்லத்தில் இயற்கையான இனிப்புச் சத்து அதிகம் உள்ளதால் நீரிழிவு நோயாளிகள் கவனத்துடன் இருப்பது நலம். டயட்ரீஷியனை கலந்தாலோசித்த பின்னர் முடிவெடுப்பது ஆரோக்கியம்.

குர் சன்னா தயாரிக்கும் முறை: கருப்பு கொண்டைக்கடலையை மிருதுவாகும் வரை நன்கு வறுத்து ஒரு பாத்திரத்தில் கொட்டவும். நல்ல உயர்தர வெல்லத்தை வாங்கி ஒரே அளவிலான சிறு சிறு கட்டிகளாக உடைத்து சன்னாவுடன் கலந்து காற்றுப் புகாத கண்ணாடி ஜாரில் போட்டு மூடவும். நாலு சன்னா கடலையையும் இரண்டு சிறிய வெல்லக் கட்டியையும் வாயில் போட்டு மெதுவாக மென்று சுவைக்கும்போது கிடைக்கும் ருசிக்கு அடிமையாகாதவர் எவரும் இருக்க முடியாது. ஸ்பைசி டேஸ்ட் விரும்புபவர் கடல் உப்பு, சில்லி பவுடர், ஆம்சூர் பவுடர் போன்றவற்றை சேர்த்துக் கலந்தும் உண்ணலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com