இந்த 8 விதைகளில் ஒளிந்திருக்கும் ஆரோக்கிய ரகசியம்!

seeds
Seeds
Published on

பல விதைகளில் வைட்டமின்கள், தாதுக்கள், ஆரோக்கியமான கொழுப்புகள், புரதம் மற்றும் நார்ச்சத்துகள் நிறைந்துள்ளன.

நம் அன்றாட உணவுகளில் இவற்றை சேர்த்துக் கொண்டால் பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன என்று உணவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இவை மெக்னீசியம், கால்சியம், இரும்பு, துத்தநாகம், ஒமேகா - 3 கொழுப்பு அமிலங்கள் போன்ற ஊட்டச்சத்துக்களின் சிறந்த ஆதாரங்கள்.

பூசணி விதை:

இந்த விதை நமது உடம்பில் உள்ள ரத்த அழுத்தம் மற்றும் உடல் எடையை குறைத்து இதய ஆரோக்கியத்தை காக்கும். ஒரு கப் பூசணி விதை சாப்பிட்டால் அன்றைய நாள் முழுமைக்கும் தேவையான மக்னீசியம் கிடைக்கும்.

முருங்கை விதை:

இந்த விதை நமது உடம்பில் உள்ள கொழுப்பைக் குறைக்கும். புற்று நோயை தடுக்கும் ஆற்றல் இந்த விதைக்கு உண்டு. முருங்கை விதைகளை உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் சோர்வு குறையும். ரத்த சோகை நீங்கும். எலும்புகள் பலப்படும்.

பப்பாளி விதை:

பப்பாளி விதைகளில் ஃபேட்டி ஆசிட் மிக அதிக அளவில் இருப்பதால் இதயக் குழாய்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கிறது. உடலில் உள்ள கெட்ட கொழுப்பையும் கரைக்கின்றது. குறிப்பாக, பப்பாளி விதைகளைப் சாப்பிடுவது கூடுதல் பலன்களை தரும்.

பலா கொட்டை:

பலாப்பழ கொட்டையில் உள்ள வைட்டமின் ஏ சத்து முடி உடைதலைத் தடுக்கிறது. இந்த கொட்டையில் உள்ள அதிகமான புரதச்சத்து முடி வளர்ச்சி மற்றும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. உச்சந்தலைக்கு புத்துணர்ச்சியைக் கொடுக்கிறது. கூந்தல் ஆரோக்கியமாக வளரும்.

seeds
Seeds
இதையும் படியுங்கள்:
மனிதர்களுக்கு ஏன் பசிக்கிறது? யோசித்ததுண்டா நண்பர்களே?
seeds

தாமரை விதை:

தாமரை விதைகளில் மக்னீசியம் அதிக அளவு உள்ளதால் ரத்த ஓட்டமும் ஆக்சிஜன் சப்ளையும் மேம்படும். இதய நோய் ஆபத்துகளும் குறையும். தாமரை விதைகளில் அதிக அளவில் பொட்டாசியமும், குறைந்த அளவு சோடியமும் உள்ளன. எனவே, இவை ரத்த நாளங்களை எளிதில் தளர்வடையச் செய்து, ரத்த அழுத்தத்தைச் சீராக்கி ஆரோக்கியமான நிலையில் வைக்கின்றன.

சப்ஜா விதை:

இந்த விதை மலச்சிக்கலை போக்குவதற்கு சிறந்த மருந்து. மலச்சிக்கலால் அவதிப்படும் முதியவர்கள் ஒரு டீஸ்பூன் சப்ஜா விதையை சூடான பாலில் கலந்து குடிக்க வேண்டும். கர்ப்ப காலத்தில் ஏற்படும் மலச்சிக்கலுக்கும் இது நிவாரணமாகும். சிறுநீர் பாதையில் ஏற்படும் புண், நீர் எரிச்சல், பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதலுக்கும் இது நல்ல மருந்து.

ஆளி விதை:

இந்த விதையில் குடல் ஆரோக்கியம் மேம்படும். இதில் பாலிஃபீனால், லிக்னின் நிறைந்துள்ளன. இதில் புரதச்சத்து உட்பட அனைத்து சத்துக்கள் உள்ளதால் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். உடல் எடையைக் குறைக்கும். கொழுப்பு படியாமல் இருக்கச் செய்யும். மார்பக புற்றுநோய், பக்க வாதம் வராமல் தடுக்கும்.

இதையும் படியுங்கள்:
உங்க வீட்ல இருக்கிற பொருட்களை வெச்சு நோய்களை விரட்டுங்க!
seeds

வெள்ளரி விதை:

வெள்ளரி விதையை சமைத்தும் உண்ணலாம். வெள்ளரி விதையில் நார்ச்சத்து, மக்னீசியம், ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆகியவை உள்ளன. வறட்சியைப் போக்கி சருமத்தை பளபளப்பாக மாற்றவும். முடி வளர்ச்சிக்கும் உதவும். புற்று நோயை தடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

(முக்கிய அறிவிப்பு: இக்கட்டுரையில் உள்ள தகவல்கள், பல்வேறு செய்திகளின் தொகுப்பாக மட்டுமே வழங்கப்படுகின்றன. இவை மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகள் அல்ல. உடல்நலம் தொடர்பான எந்தவொரு சந்தேகத்துக்கும், பிரச்னைக்கும், அவசியம் மருத்துவரை அணுகவும்.)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com