உங்க வீட்ல இருக்கிற பொருட்களை வெச்சு நோய்களை விரட்டுங்க!

home medicine
Home medicine
Published on

உங்க வீட்ல இருக்கிற பொருட்களை வெச்சு நோய்களை விரட்ட டிப்ஸ்...

  • ஒரு டம்ளர் நீரில் அரை ஸ்பூன் எலுமிச்சம் பழச்சாறு, சிறிது பனை வெல்லம் போட்டுக் கலக்கி சாப்பிட்டால் நெஞ்சு எரிச்சல் நீங்கி விடும்.

  • ஜவ்வரிசியை சாதம் போல வேகவைத்து மோரில் கரைத்து, உப்பு சேர்த்து சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு, வயிற்று வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

  • தண்ணீரில் புதினா, இஞ்சி, எலுமிச்சைப் பழத்துண்டுகளைச் சேர்த்து கொதிக்க வைத்து, வடிகட்டி பருகி வந்தால் உடல் பருமன் குறையும்.

  • தலையில் நீர்கோர்த்து ஏற்படும் தலைவலிக்கு சுக்கு, பெருங்காயத்தை பால் விட்டு நெற்றியில் பற்று போட்டால் தலைவலி சட்டென்று மறைந்து விடும்.

  • கறிவேப்பிலையை துவையலாக்கி சாப்பிடுவதால் பற்கள் உறுதி பெறுவதுடன் எலும்பும் பலமாகும். பல் சம்பந்தமான வியாதிகளும் அண்டாது.

  • வெந்தயம் அல்லது வெந்தயக் கீரையை விழுதாக அரைத்து, முகப்பருவின் மீது தடவி வந்தால் பருவினால் ஏற்படும் வலி நீங்குவதோடு பருவும் மறையும்.

  • இரவு சாப்பாட்டுக்குப் பிறகு ஒரு ஆரஞ்சுப் பழச்சாறுடன், ஒரு ஸ்பூன் தேன் கலந்து பருகினால் நன்றாக தூக்கம் வரும்.

  • அடிக்கடி இருமல், தும்மல் ஏற்படுகிறதா? அகத்திக்கீரை, அகத்திப்பூ சாறுடன் சிறிதளவு தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நிவாரணம் கிடைக்கும்.

  • காலையில் வெறும் வயிற்றில் ஒன்றிரண்டு செம்பருத்தி பூவின் இதழ்களை சாப்பிட்டு வந்தால், காலப்போக்கில் இதய நோய் குணமாகும்.

  • புதினா இலைகளை காய வைத்து, உப்பு சேர்த்து பவுடராக்கி, அதைக் கொண்டு பல் துலக்கி வந்தால், பெரும்பாலான பல் உபாதைகள் நீங்கி விடும்.

  • சாதம் வடித்த நீரில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூளும், பனங்கற்கண்டும் சேர்த்துக் கலக்கி, வெது வெதுப்பாக இருக்கும்போதே குடிக்க வயிறு உப்புசம் நீங்கி விடும்.

இதையும் படியுங்கள்:
இந்தியாவின் ரகசியமான 10 காய்கறிகள்: நீங்கள் ருசித்திருக்கிறீர்களா?
home medicine
  • இஞ்சியை சிறு சிறு துண்டுளாக நறுக்கி இரண்டு வாரம் தேனில் ஊற வைக்கவும். தினமும் காலையில் இதிலிருந்து ஒரு துண்டு சாப்பிட்டு வந்தால் வாதம், பித்தம் சோர்வு, செரிமானக் கோளாறு ஆகியவற்றிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

(முக்கிய அறிவிப்பு: இக்கட்டுரையில் உள்ள தகவல்கள், பல்வேறு செய்திகளின் தொகுப்பாக மட்டுமே வழங்கப்படுகின்றன. இவை மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகள் அல்ல. உடல்நலம் தொடர்பான எந்தவொரு சந்தேகத்துக்கும், பிரச்னைக்கும், அவசியம் மருத்துவரை அணுகவும்.)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com