காலை எழுந்ததும் சோர்வாக உள்ளதா? கவலை வேண்டாம் தீர்வு இதோ!

Tiredness upon waking up
Tiredness upon waking up
Published on

நாள்தோறும் ஓடிக்கொண்டிருக்கும் நாம், உறங்கும் போது மட்டும் தான் எதைப்பற்றியும் நினைக்காமல் நிம்மதியாக ஓய்வெடுக்கிறோம். தூக்கம் என்பது ஒரு மனிதனுக்கு முக்கியமான ஒன்றாகும். மறுநாள் ஒருவர் தன்னுடைய எதிர்கால வாழ்க்கைக்காக மீண்டும் ஓட வேண்டியிருக்கும். அவ்வாறு ஓட, நாம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால், நமக்கு தூக்கம் மிக அவசியம்.

அந்த வகையில் நம்மில் பலருக்கும் இந்த பிரச்சனை இருக்கும். காலை எழுந்தவுடன் தூக்கமாக வரும். உடல் சோர்வாக இருக்கும். எந்த ஒரு வேலையும் செய்ய தோணாமல் மீண்டும் தூங்கினால் நன்றாக இருக்குமே என தோன்றும். ஒரு சிலருக்கு இந்த பிரச்சனை நாள்தோறும் இருக்கும். ஒரு சிலருக்கு எப்பொழுதாவது இது போன்ற உணர்வு தோன்றும். நாம் இந்த பதிவில் 'காலை எழுந்தவுடன் ஏன் சோம்பலாக உணருகிறோம்' என்பதை பற்றியும், அதனை தடுப்பதற்கான வழிகள் பற்றியும் காணலாம்.

உடல் சோர்வாக உணர்வதற்கான காரணம்:

ஒரு சிலர் 'நான் நேற்று நன்றாக தான் உறங்கினேன். ஆனாலும் எனக்கு காலை எழுந்தவுடன் சோர்வாக உள்ளது' என கூறுவார்கள். இதற்கு காரணம் என்னவென்றால், நாம் இரவு உறங்கியது போன்று நமக்கு தோன்றும். ஆனால் நம் உடல் திசுக்கள் புத்துணர்வு பெற்றிருக்காது. நாம் தூங்கும் பொழுது நம்முடைய உடல் ஹார்மோனை சுரக்கும். அவ்வாறு சுரக்கும் ஹார்மோனால் நம் உடல் திசுக்கள் புத்துணர்வு பெறும். அப்பொழுது தான் நாம் முழுமையாக உறங்கி உள்ளோம் என்பது அர்த்தம். உடல் திசுக்கள் புத்துணர்வு பெறவில்லை என்றால், காலை எழுந்தவுடன் நமது உடல் சோர்வாக, மீண்டும் தூங்கினால் நன்றாக இருக்கும் என நமக்கு தோன்றும்.

இதையும் படியுங்கள்:
55 வயதைக் கடந்தவர்கள் ஜாக்கிரதை... கணைய பாதிப்பும் அதன் அறிகுறிகளும்! 
Tiredness upon waking up

ஏன் இவ்வாறு ஏற்படுகிறது?

  • மனக்கவலை காரணமாக இரவில் நல்ல தூக்கம் வராமல் இருக்கும். ஏதோ ஒன்றை நினைத்து கவலைப்பட்டு தூங்க சென்றால், இவ்வாறு ஏற்படும்.

  • ஹார்மோன் பிரச்சனை, தைராய்டு சுரப்பி ஹார்மோனை சரிவர சுரக்காமல் இருந்தால் ஹைப்போ தைராய்டிசம் ஏற்படும். இதனால் உடல் சோர்வு ஏற்படும்.

  • பகலில் தொடர்ந்து உறங்கினால் உடல் சோர்வு ஏற்படும்.

  • காலநிலை மாற்றங்களால் இவ்வாறு ஏற்படும்.

  • உடல் எடை அதிகமாக இருப்பவர்களுக்கு, உடல் சோர்வு ஏற்படும்.

  • அடிக்கடி காபி, தேநீர் அருந்தினால் இந்த பிரச்சனை ஏற்படும்.

இரவில் நீண்ட நேரம் கண்விழித்தல், இரவு கொண்டாட்டங்கள், மொபைல் பார்த்தல், இரவு பயணம் போன்ற காரணங்களினால் இவ்வாறு ஏற்படும்.

இதையும் படியுங்கள்:
கார்ட்டிசால் அளவை சமநிலைப்படுத்தும் 10 சூப்பர் உணவுகள்!
Tiredness upon waking up

தடுப்பதற்கான வழிமுறைகள்:

  • கட்டாயம் 8-9 மணி நேரம் தூக்கம் அவசியம். எனவே இரவு முன்பாக உறங்க செல்ல வேண்டும்.

  • மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்.

  • மனக்கவலை இல்லாமல் இருக்க வேண்டும்.

  • உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

  • மேலும் இரவு உறங்க செல்லும் முன், நீரில் சிறிதளவு துருவிய இஞ்சி, சேர்த்து கொதிக்க வைத்து, அதனை வடிகட்டி அதில் தேன் 1 ஸ்பூன், எலுமிச்சை சாறு 1/2 ஸ்பூன் கலந்து இளஞ்சூடாக குடித்து வந்தால் காலை சுறுசுறுப்பாக இருக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com