58 வயதிலும் அக்‌ஷய் குமார் இவ்வளவு ஃபிட்டா இருக்க இது ஒன்னுதான் காரணமாம்... நீங்களே படிச்சு பாருங்க!

akshay-kumar-fitness-secret
akshay-kumar-fitness-secret
Published on

வயதாக ஆக உடலை கட்டுகோப்பாக வைத்துக்கொள்வது ரொம்பவே சிரமமான காரியம். ஆனால் பாலிவுட்டின் முன்னணி நடிகரான அக்‌ஷய் குமார் தனது 58 வயதிலும் சிக்ஸ் பேக்ஸ் உடற்கட்டோடு ரொம்பவே மாஸாக வலம் வருகிறார். மறைந்த சூப்பர்ஸ்டார் ராஜேஷ் கண்ணா மற்றும் டிம்பிள் கபாடியாவின் மகளான டிவிங்கிள் கண்ணாவை மணந்துள்ள இவரின் குடும்ப சொத்து மதிப்பு சுமார் 2700 கோடியைத் தாண்டும். 

ஆனால் இவ்வளவு வசதிகள் இருந்தாலும் அவரது ஃபிட்னெஸ் ரகசியம் ரொம்பவே சிம்பிளானது தான். சமீபத்தில் அவர் பகிர்ந்துகொண்ட அந்த ஆரோக்கிய ரகசியங்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க. 

6:30-க்கு அப்புறம் நோ சாப்பாடு!

அக்‌ஷய் குமாரின் மிக முக்கியமான முதல் ரூல் இதுதான். தினமும் சூரியன் மறைவதற்கு முன்பாகவே, அதாவது மாலை சரியாக ஆறு முப்பது மணிக்கெல்லாம் தனது டின்னரை அவர் முடித்துவிடுவார். அதன் பிறகு ஒரு சின்ன ஸ்நாக்ஸ் கூட சாப்பிட மாட்டாராம்.

இந்த ஒரு பழக்கத்தை மட்டும் தவறாமல் கடைபிடித்தாலே உடம்பில் எந்த ஒரு கெட்ட கொழுப்பும் தங்காது என்று அவர் ஆணித்தரமாகக் கூறுகிறார். இதை எந்த ஒரு மருத்துவரிடம் கேட்டாலும் நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மை என்று தான் சொல்வார்கள் எனவும் அவர் உறுதியளிக்கிறார்.

சினிமாவை பார்த்து ஏமாற வேண்டாம்!

சமீபத்தில் பிரதமர் மோடியின் மன் கி பாத் நிகழ்ச்சியில் கூட இவர் ஒரு சூப்பரான அட்வைஸ் கொடுத்திருந்தார். அதாவது திரையில் தோன்றும் நடிகர்களின் உடலமைப்பை பார்த்து அப்படியே காப்பி அடிக்க நினைக்கக் கூடாது. ஏனென்றால் கேமராவில் பார்ப்பதற்கு கவர்ச்சியாகத் தெரிய அவர்கள் பலவிதமான ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் மற்றும் ஃபில்டர்களை பயன்படுத்துவார்கள். 

அதனால் கண்மூடித்தனமாக யாரையும் பின்பற்றாமல், ஒவ்வொருவரின் உடலுக்கு என்ன தேவை, எது ஒத்துக்கும் எது ஒத்துக்காது என்பதை ஒரு நல்ல மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு அதன்படி நடப்பதே சிறந்த ஆரோக்கியம் என்கிறார்.

இதையும் படியுங்கள்:
உயிரைக் காக்கும் ஊசிகள்... ஆயுள் காக்கும் மேஜிக் புள்ளிகள்!
akshay-kumar-fitness-secret

ஸ்டீராய்டு ஊசிகள் ஒரு ஸ்லோ பாய்சன்!

இன்றைய இளைஞர்கள் பலரும் ஜிம்முக்கு போன ஒரே மாசத்தில் சிக்ஸ் பேக் வர வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். இதற்காக பல ஆபத்தான ஸ்டீராய்டு ஊசிகளைப் போட்டு உடம்பை ஏற்றுகிறார்கள். இது வெளியே பார்ப்பதற்கு வேண்டுமானால் அழகாகத் தெரியலாம், ஆனால் உள்ளே இருக்கும் முக்கிய உறுப்புகளை மெல்ல மெல்ல அழித்து மனிதனின் ஆயுளையே 

பாதியாகக் குறைத்துவிடும். ஃபிட்னெஸ் என்பது இரண்டு நிமிஷத்தில் ரெடியாகும் மேகி நூடுல்ஸோ, இன்ஸ்டன்ட் காபியோ கிடையாது. தினமும் விடாமல் செய்யும் உடற்பயிற்சி, யோகா, சத்தான உணவு மற்றும் நிம்மதியான தூக்கம் மட்டுமே ஒரு நிரந்தரமான ஆரோக்கியத்தை கொடுக்கும் என அவர் எச்சரிக்கிறார்.

இதையும் படியுங்கள்:
சமீபத்தில் தொல்லியல் துறையினர் கண்டுபிடித்த வரலாற்று சிறப்புமிக்க கண்டுபிடிப்புகள்!
akshay-kumar-fitness-secret

சமீபத்தில் வெளியான அவரது ஸ்கை ஃபோர்ஸ் (Sky Force) திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், அடுத்த மாதம் அதாவது 2026 ஏப்ரலில் பிரியதர்ஷன் இயக்கத்தில் அவர் நடித்துள்ள பூத் பங்களா என்ற ஹாரர் காமெடி படம் திரைக்கு வரத் தயாராக உள்ளது. இத்தனை பிஸியான ஷூட்டிங் வேலைகளுக்கு நடுவிலும் அவர் தனது உடற்பயிற்சிகளை ஒருநாளும் தவறவிடுவதில்லை. 

ஷார்ட்கட்டில் போகாமல் அவர் சொல்லும் இந்த சிம்பிளான நேச்சுரல் டிப்ஸை ஃபாலோ பண்ணினால் நாமும் எப்போதுமே ஹீரோ மாதிரி கெத்தாக இருக்கலாம்.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com