
தினமும் உடற்பயிற்சி செய்வது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வந்தால், நோயின்றி வாழலாம். உடற்பயிற்சி செய்வதன் மூலமாக தடுக்கக்கூடிய பிரச்னைகள், உபாதைகள் என்னென்ன என்பதைப் பற்றி இந்த பதிவில் காண்போம்.
1. இதய நோய்
உடற்பயிற்சி செய்வது இதயத்தை வலுப்படுத்தவும், ரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் ஒரு முக்கிய காரணமாக அமையும். அதனால் இது நோய்களின் அபாயத்தை கணிசமாக குறைக்கும். ஓட்டப்பயிற்சி, நீச்சல் பயிற்சி, சைக்கிள் ஓட்டுவது போன்ற பயிற்சிகள் ரத்த அழுத்தத்தை குறைக்கவும், கொலஸ்ட்ரால் அளவை குறைக்கவும், இதய ஆரோக்கியத்தை வலுப்படுத்தவும் உதவுகிறது.
2. மனநலக் கோளாறு
உடற்பயிற்சி செய்வதால் மனஅழுத்தம், மனசோர்வு, பதற்றம் போன்றவை குறையும். இதனால் மன ஆரோக்கியம் அதிகரிக்கும். தினமும் உடல் செயல்பாட்டில் ஈடுப்படுவது எண்டோர்பீன்களின் வெளியீட்டை தூண்டும். மனமகிழ்ச்சியை அதிகரிக்க செய்யும். வயதானதும் ஏற்படும் அறிவாற்றல், நிறைவாற்றலின் வீழ்ச்சியை தடுக்கும்.
3. உடல் பருமன்
உடற்பயிற்சி செய்வதால் சீரான உடல் எடையை பராமரிக்க முடியும். வழக்கமாக கலோரிகளை எரிக்கவும், வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், ஆரோக்கியமான எடை இழப்பை உக்குவிக்கவும் தான். உடற்பயிற்சியுடன் ஏரோபிக் பயிற்சிகளை சேர்த்து செய்வது தசையின் வலுவை மேம்படுத்துவதோடு கொழுப்பை எரித்து உடல் திறனை அதிகரிக்க உதவும்.
4. சுவாச நோய்கள்
உடற்பயிற்சி செய்வது நுரையீரலின் செயல் திறனையும், சுவாச செயல்பாட்டையும் அதிகரிக்கும். இது ஆஸ்துமா மற்றும் நாள்பட்ட நுரையீரல் நோய் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். இத்துடன் ஏரோபிக் பயிற்சியை சேர்த்து செய்வது சுவாச செயல்பாடுகளுடன் சேர்த்து நுரையீரல் திறன் மற்றும் ஒட்டு மொத்த சுவாச ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
5. ஆஸ்டியோபோரோசிஸ்
உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, நடனம், பளு தூக்குதல் போன்ற பயிற்சிகள் எலும்புகளை வலுவாக்கும். இதனால் ஆஸ்டியோபோரோசிஸ் அபாயம் வராமல் தடுக்கலாம். உடல் செயல்பாடு எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்க உதவும். மாதவிடாய் நின்ற பெண்களுக்கு எலும்பு வலு இழப்பதைக் குறைக்கும். உடற்பயிற்சி செய்வதால் மூட்டுவலி குறையும். நீச்சல், யோகா, சைக்கிள் ஓட்டுவது மூட்டின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கும். எனவே, இந்த நோய்கள் வருவதற்கு முன்பே காப்பதற்கு உடற்பயிற்சியை கட்டாயம் செய்யத் தொடங்குவது சிறந்ததாகும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)