
நம் உடலில் உள்ள கலோரிகளை எரிப்பதற்கு ஜாக்கிங் ஒரு சிறந்த பயிற்சியாகும். நடைப்பயிற்சிக்கு அடுத்தக் கட்டமாக ஜாக்கிங் இருக்கிறது. இதை செய்வதற்கு உடலை வருத்திக் கொள்ள தேவையில்லை. ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்வதுப் போல சிரமப்பட தேவையில்லை. இந்தப் பதிவில் இரவில் ஜாகிங் செய்வது எத்தகைய நன்மையைத் தரும் என்பதைப் பற்றி காண்போம்.
பெரும்பாலும் ஜாங்கிங் பயிற்சியை காலையில் தான் மேற்க்கொள்வார்கள். ஜாங்கிங் செய்ய வேண்டும் என்று ஆசையிருப்பவர்களும் காலையில் எழுந்து செய்ய சோம்பேறித்தனம் காரணமாக செய்யாமல் இருப்பார்கள். அப்படி இருப்பவர்கள் இரவு நேரத்தில் ஜாக்கிங் செய்யலாம், தவறில்லை. இரவு ஜாக்கிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்க்கலாம்.
1. இரவு சப்பிட்ட பிறகு ஜாக்கிங் செய்வதால் உணவு செரிமானம் ஆவதற்கு தேவையான நேரம் கிடைக்கும். உணவுகள் எளிதில் ஜீரணமாகி கலோரிகளை எரிப்பதற்கு உதவும். காலையில் ஜாக்கிங் செய்ய விரும்பாதவர்கள் இரவில் செய்வது வசதியாக இருக்கும். ஆனால், இரவு சாப்பிட உடனேயே ஜாக்கிங் செய்வதை தவிர்க்க வேண்டும்.
2. இரவு ஜாக்கிங் செய்வது நம் உடலில் அதிகப்படியான ஆற்றலை எரிக்க உதவும். இரவு ஓடும் போது தசைகளுக்கு பலம் சேர்க்கும். அவை வேகமாக வலுவடைவதற்கு உதவும். இரவு ஜாக்கிங் செல்வது தசைகள் தளர்வடைவதற்கும் உதவும் என்பதால் இரவு நன்றாக தூங்குவதற்கு உதவிடும்.
3. நம்முடைய மனநிலையை அதிகரிக்க செய்யும் எண்டோர்பின் ஹார்மோன்களை அதிகரிக்க இரவில் ஜாக்கிங் செய்வது சிறந்ததாகும். இதன் மூலமாக மனக்கவலை, மன குழப்பத்தில் இருந்து விடுப்பட உதவும். மன குழப்பத்தை நீக்கி அடுத்தநாள் சிறப்பாக திட்டமிடுவதற்கு உதவியாக இருக்கும்.
4. பகல் நேரத்தில் ஜாக்கிங் செய்வதை காட்டிலும், இரவு நேரத்தில் ஜாக்கிங் செய்வதால் சுற்றுப்புற சூழலில் இருக்கும் வெப்பத்தின் தாக்கம் குறைவாக இருக்கும். அதனால் கூடுதல் நேரம் ஓடுவதற்கு வசதியாக இருக்கும். காலையில் அவசரமாக ஜாக்கிங் சென்று விட்டு வேலைக்கு செல்பவர்கள் இரவு நேர ஜாக்கிங் பயிற்சியை தேர்ந்தெடுக்கலாம். இதனால் இரவு நேரம் அதிக நேரம் ஜாக்கிங் செய்ய முடியும்.
5. இரவில் ஜாக்கிங் செய்யும் போது கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். இரவு நேரம் என்பதால் பள்ளம், கல், குழி போன்றவை பாதங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். எனவே, கவனமாகவே இரவு நேர ஜாக்கிங்கை செய்ய வேண்டியது அவசியமாகும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)