பாதாம் Vs வாதுமை: உங்கள் மூளைக்கு எது பெஸ்ட்?

Almond Vs Walnut
Almond Vs Walnut
Published on

உலர் பழங்கள்னாலே உடம்புக்கு நல்லதுன்னு தெரியும். அதுலயும் குறிப்பா பாதாமும் (Almond), வாதுமையும் (Walnut) மூளைக்கு ரொம்பவே பவர் கொடுக்குற சூப்பர் உணவுகள்னு சொல்லலாம். ஏன்னா, இதுல நிறைய வைட்டமின் ஈ, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் எல்லாம் இருக்கு. இதெல்லாம் நம்ம மூளை நல்லா வேலை செய்ய ரொம்ப முக்கியம்.

பாதாம் பருப்பும் வாதுமை பருப்பும் ஞாபக சக்தியை அதிகரிக்கவும், கவனத்தை ஒருமுகப்படுத்தவும், நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமா வச்சுக்கவும் ரொம்ப உதவுது. வயசாகுறதுனால வரக்கூடிய அல்சைமர், மறதி நோய் மாதிரியான பிரச்சனைகளைத் தடுக்கவும் இந்த ரெண்டு பருப்பும் பயனுள்ளதா இருக்கு. ஆனா, இதுல எது நம்ம மூளைக்கு ரொம்ப நல்லதுன்னு தெரிஞ்சுக்குவோம் வாங்க.

Almond: பாதாம்ல இருக்குற வைட்டமின் ஈயும், ஆன்ட்டி ஆக்சிடென்ட்களும் நம்ம மூளை செல்கள் டேமேஜ் ஆகாம பாத்துக்குது. அதுமட்டுமில்லாம, நரம்பு ஆரோக்கியத்துக்கும், ஞாபக சக்திக்கும் தேவையான மெக்னீசியம், நல்ல கொழுப்புகள், புரோட்டின் எல்லாம் இதுல நிறைய இருக்கு. பாதாம ஊற வச்சு சாப்பிட்டா இன்னும் நல்லது. ஏன்னா, அதுல இருக்கிற பைட்டிக் அமிலம் சத்துக்கள் நம்ம உடம்புல சேர்றதை கொஞ்சம் தடுக்கும். ஊற வைக்கும்போது அந்த அமிலம் போயிடும். டெய்லி ஒரு நாலு அஞ்சு ஊற வச்ச பாதாம் சாப்பிட்டா ஞாபக சக்தி நல்லா இருக்கும், நோயும் வராது. வயசாகுறதுனால நரம்புல வர்ற பிரச்சனைகளையும் தடுக்கலாம்.

Walnut: வாதுமை பருப்பும் பாதாம் மாதிரிதான் ரொம்ப சத்து நிறைஞ்சது. இதுல ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகமா இருக்கு. அது நம்ம மூளையோட செயல் திறனை மேம்படுத்த ரொம்ப முக்கியம். அதுல இருக்குற ஆல்ஃபா லினோலினிக் அமிலம் தான் இதுக்கு காரணம். இதுல புரோட்டின், வைட்டமின்கள், மெக்னீசியம், பாஸ்பரஸ், தாமிரம், செலினியம்னு நிறைய சத்துக்கள் இருக்கு. வாதுமை பருப்பு நம்ம அறிவாற்றலை அதிகப்படுத்தும். வயசாகுறதுனால வரக்கூடிய அல்சைமர், மறதி நோய் மாதிரியான பிரச்சனைகள் வராம இது தடுக்கும். நம்ம மூளையில ஏற்படுற வீக்கத்தை குறைச்சு, மூளை செல்கள் பாதிக்கப்படாம இது பாத்துக்குதுன்னு நிறைய ஆராய்ச்சிகள்ல சொல்லிருக்காங்க. டெய்லி வாதுமை பருப்பு சாப்பிட்டா மன அழுத்தமும் குறையும்னு சொல்றாங்க.

இதையும் படியுங்கள்:
அபாகஸ்: குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கான மாய உலகம்!
Almond Vs Walnut

இதுல எது நம்ம மூளைக்கு ரொம்ப சிறந்ததுன்னு கேட்டா, ரெண்டையுமே ஊற வச்சு சாப்பிடுறது ரொம்ப நல்லதுன்னு ஊட்டச்சத்து நிபுணர்கள் சொல்றாங்க. ஊற வைக்கும்போது சத்துக்களோட மதிப்பு அதிகமாகும். வயசாகுறதுனால வரக்கூடிய நரம்பு மற்றும் மூளை பாதிப்புகளை தடுக்க வாதுமை பருப்பு ரொம்ப நல்லது. அதே நேரத்துல ஞாபக சக்தி அதிகமாக வேணும்னு நினைக்கிறவங்க, படிக்கிற பசங்க, வேலைக்குப் போறவங்க இவங்கல்லாம் பாதாம் சாப்பிடலாம்.

பாதாம் பருப்பும் வாதுமை பருப்பும் ரெண்டுமே நம்ம மூளைக்கு ரொம்ப நல்லது. ரெண்டையும் நம்ம உணவுல சேர்த்துக்கிட்டா நம்ம மூளை நல்லா வேலை செய்யும். எதிர்காலத்துல மூளை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமையும் தடுக்கலாம். அதனால டெய்லி ரெண்டு பருப்பையும் சாப்பிடுறது ரொம்ப நல்லது.

இதையும் படியுங்கள்:
Sciatica: இந்த இடுப்பு நரம்பு பிரச்சனை பற்றி தெரியுமா?
Almond Vs Walnut

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com