விழிப்புடன் இருங்கள் கர்ப்பிணிகளே! கர்ப்ப காலத்தில் இந்த சோதனை கட்டாயம்!

Pregnant women
Pregnant women
Published on

கருவுறுதல் என்பது பெண்மையின் அடையாளம். எந்த ஒரு பெண்ணிற்கும் இது முக்கியமான காலகட்டம். கரு வளரும் 9 மாதங்களும் கர்ப்பிணி பெண் பலவித சிக்கல்களை சந்திக்க வேண்டி வரலாம். அதே போல கருவில் உள்ள குழந்தையும் சில பிரச்னைகளை எதிர்கொள்ளலாம். கருவில் உள்ள குழந்தைக்கு குறிப்பிட்ட ஏதேனும் ஆரோக்கிய குறைபாடு இருந்தால், அதன் காரணமாக குழந்தை தனது வாழ்நாள் முழுவதும் பல நோய்களைச் சந்திக்க வேண்டியிருக்கும்.

சில நேரங்களில் கருவில் உள்ள குழந்தை டவுன் சிண்ட்ரோம் நோயால் பாதிக்கப்படலாம். இந்திய குழந்தை மருத்துவ சங்கத்தின் தரவுகளின் படி, 800 குழந்தைகளில் ஒருவருக்கு டவுன் சிண்ட்ரோம் நோய் உள்ளது. தற்போதைய விஞ்ஞான காலத்தில் கருவில் இருந்தே குழந்தைகள் கண்காணிக்கப்படுகின்றனர்.

ஒரு கரு வளரத் தொடங்கும் காலத்திலேயே அது ஆரோக்கியமாக உள்ளதா? என்பதை அறிந்து கொள்வது மிகவும் அவசியம். கருவில் ஏதேனும் குறைகள் அல்லது பிரச்னைகள் இருக்கிறதா? என்பதை முன்கூட்டியே அறிந்து முன்னெச்சரிக்கையாக செயல்படுவதுதன் மூலம், குழந்தைகளின் எதிர்கால ஆரோக்கிய குறைபாடுகளை சரி செய்யலாம்.

டவுன் சிண்ட்ரோம் என்பது ஒரு பிறவிக் குறைபாடு நோய், இது ஒரு குழந்தைக்கு மரபணு ரீதியாக ஏற்படுகிறது. இதை சரி செய்யவே முடியாது. இது கருவில் குழந்தை தோன்றும் போதே ஏற்படுகிறது. இந்த நோயுடன் பிறந்த குழந்தைகள் பல சவால்களை சந்திக்க வேண்டும். இதைக் கட்டுப்படுத்த மட்டுமே முடியும். இந்த நோயை கருப்பையிலேயே கண்டறிய முடியும். இதற்காக, சில முன்னேறிய சோதனைகள் உள்ளன. அல்ட்ராசவுண்ட் மற்றும் இரத்தப் பரிசோதனைகள மூலம் டவுன் சிண்ட்ரோம் நோயை கண்டறியலாம். இவற்றில் ஸ்கிரீனிங் சோதனைகளும் அடங்கும்.

முதல் மூன்று மாதங்கள் ஸ்கிரீனிங் சோதனை செய்ய வேண்டும். இதில் 11 முதல் 13 வாரங்களுக்கு இடையில் இரத்தப் பரிசோதனை மற்றும் NT ஸ்கேன் சோதனை ஆகியவை செய்ய வேண்டும். இரண்டாவது மூன்று மாத ஸ்கிரீனிங் சோதனை 15 முதல் 20 வாரங்களுக்கு இடையில் செய்ய வேண்டும்.

முதல் மற்றும் இரண்டாவது மூன்று மாத சோதனைகளை ஒருங்கிணைத்த முடிவுகள் மிகவும் துல்லியமான தரவுகளைக் கொண்டிருக்கும். மேலும் cfDNA பரிசோதனையும் செய்யப்பட வேண்டும்.

இதையும் படியுங்கள்:
மீன் எண்ணெய் மாத்திரை ஏன் சாப்பிடணும்? யார் சாப்பிடலாம்?
Pregnant women

இது கர்ப்பத்தின் 10 வாரங்களிலிருந்து செய்யக்கூடிய இரத்தப் பரிசோதனையாகும். இந்தப் பரிசோதனை நஞ்சுக்கொடியிலிருந்து டி.என்.ஏ அளவை அளவிடுகிறது மற்றும் டவுன் சிண்ட்ரோமின் கூடுதல் குரோமோசோம் 21 ஐ கண்டறிகிறது.

டவுன் சிண்ட்ரோமில் ட்ரைசோமி 21, டிரான்ஸ்லொகேஷன் மற்றும் மொசைசிசம் என்ற மூன்று முக்கிய வகைகள் உள்ளன. இந்த பாதிப்பு காரணமாக, குழந்தைகள் பல கடுமையான நோய்களுடன் பிறக்கின்றனர். மேலும் அவர்களின் வாழ்நாள் முழுவதும் மருத்துவ கவனிப்பு தேவைப்படுகிறது. அத்தகைய குழந்தைகளுக்கு கற்றல் மற்றும் புரிதலில் தாமதம் ஏற்படுகிறது. இந்த நோயை முற்றிலும் குணப்படுத்த முடியாது. சிகிச்சையின் மூலம் இதைக் கட்டுப்படுத்த முடியும்.

இதனால் கர்ப்ப காலம் தொடங்கும் போதே டவுன் சிண்ட்ரோம் பரிசோதனையைச் செய்து கொள்ளுங்கள். பிறக்கும் குழந்தைக்கு டவுன் சிண்ட்ரோம் இருக்கிறதா? இல்லையா என்பதை முன்கூட்டியே அறிந்து கொள்ளுங்கள்.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

இதையும் படியுங்கள்:
சிவபெருமானும் பெருமாளும் ஒரே கோயிலில் இரண்டு மூலவர்களாக அருளும் அரிய கோயில்!
Pregnant women

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com