நடிகர் மம்மூட்டிக்கு வந்த பாதிப்பு - வாசனை, சுவை தெரியவில்லையா? இதோ முழு விவரம்!

Anosmia & Ageusia problem and actor mammootty
Taste and smell health issues(Anosmia & Ageusia)
Published on

அனோஸ்மியா(Anosmia) என்பது வாசனை உணர்வை இழப்பதாகும். எதையும் மோப்பம் பிடிக்க முடியாத இந்நிலையை 'வாசனை குருட்டுத்தன்மை' என்றும் அழைப்பார்கள். ஒரு நபர் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ வாசனை உணர்வை இழக்கும்போது இது ஏற்படுகிறது. இந்நிலை உணவின் சுவையை உணரும் திறனைப் பாதித்து, பசியின்மை மற்றும் மனச்சோர்வுக்கு வழிவகுக்கும். சுவாசப்பாதை தொற்று நீங்கியவுடன், தற்காலிக வாசனை இழப்பு தானாகவே சரியாகிவிடும்.

அக்யூஸியா( Ageusia) என்பது நாவின் சுவை அறியும் திறனை இழப்பதைக் குறிக்கும் ஒரு அரிய நிலையாகும். உணவின் உப்பு, காரம், இனிப்பு, கசப்பு ஆகியவற்றை உணர்வதில் சிரமம் ஏற்படுவது; பசியின்மை, ஊட்டச்சத்து குறைபாடு, மன அழுத்தம் மற்றும் உடல் எடை குறைதல் போன்ற பாதிப்புகளை இது உண்டாக்கும்.

சமீபத்தில் மலையாள நடிகர் மம்மூட்டி கூட, ஒரு காலகட்டத்தில் தான் வாசனை மற்றும் சுவை (Taste and smell health issues) அறியும் திறனை இழந்ததாகவும், "ஒன்றை இழக்கும்போதுதான் அதன் மதிப்பு தெரிகிறது" என்றும் கூறினார். தற்போது அவர் அதிலிருந்து குணமடைந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

1. காரணங்கள்:

  • வைரஸ் தொற்றுகள்: சளி, காய்ச்சல் மற்றும் கோவிட்-19 போன்றவை பொதுவான காரணங்களாகும்.

  • மூக்கடைப்பு மற்றும் சைனஸ்: சைனசிடிஸ் (Sinusitis), ஒவ்வாமை (Allergy) மற்றும் நாசி பாலிப்கள் (Nasal Polyps) எனப்படும் மூக்கில் ஏற்படும் தசை வளர்ச்சி.

  • நரம்பு பாதிப்பு: மூளைக்காயம், நாசி நரம்புகளில் பாதிப்பு, அல்சைமர் மற்றும் பார்கின்சன் போன்ற நரம்பியல் கோளாறுகள்.

  • மருந்துகள்: சில ஆன்டிபயாடிக்குகள், மன அழுத்த எதிர்ப்பு மருந்துகள் மற்றும் நாசி ஸ்ப்ரேக்களின் (Nasal Sprays) அதிகப்படியான பயன்பாடு.

  • நச்சுப் பொருட்கள்: பூச்சிக்கொல்லிகள் அல்லது கரைப்பான்களின் (Solvents) வீரியமான வாசனை.

  • இதர காரணங்கள்: தலைக்காயம், தைராய்டு பிரச்னைகள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகள்.

  • வைட்டமின் குறைபாடு: வைட்டமின் A, B6, B12 மற்றும் துத்தநாகம் (Zinc) ஆகியவற்றின் குறைபாட்டினால் வாசனை இழப்பு ஏற்படலாம்.

2. தீர்வுகள் மற்றும் சிகிச்சை:

  • மூக்கடைப்பு மற்றும் வீக்கத்தைக் குறைக்க நாசி ஸ்டீராய்டு ஸ்ப்ரேக்கள் மற்றும் ஆன்டிஹிஸ்டமின்கள் மருத்துவ சிகிச்சையில் பயன்படுத்தப்படுகின்றன.

  • சைனஸ் தொற்று அல்லது பாலிப் இருந்தால் அதற்கேற்ற சிகிச்சை தேவைப்படும். மூக்கில் தசை வளர்ச்சி (Polyps) அதிகமாக இருந்தால், அதை அகற்ற அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.

  • மூக்கடைப்பை நீக்க, வீட்டு வைத்தியமாக ஆவி பிடித்தல் மற்றும் ஒவ்வாமையைத் தூண்டும் காரணிகளைத் தவிர்த்தல் போன்றவை பயனுள்ளதாக இருக்கும்.

  • வாசனைப் பயிற்சி (Olfactory Training): சில நறுமண எண்ணெய்களை (Essential Oils) தொடர்ந்து முகர்ந்து பார்ப்பது வாசனை உணர்வை மீட்க உதவும்.

  • புகைப்பிடித்தலை நிறுத்துவதும், போதுமான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வதும் சிறந்த பலனளிக்கும்.

இதையும் படியுங்கள்:
ஜிம் போறீங்களா? காபியில் கிரியேட்டின் கலந்து குடித்தால் தீங்கு விளைவிக்குமா?
Anosmia & Ageusia problem and actor mammootty

குறிப்பு: பெரும்பாலான தற்காலிக பாதிப்புகள் தொற்று குணமாகும்போது சரியாகிவிடும். எனினும், வாசனை அல்லது சுவை இழப்பு அறிகுறிகள் தொடர்ந்து நீடித்தால், உடனடியாக காது, மூக்கு, தொண்டை நிபுணரை (ENT Specialist) அணுகி ஆலோசனை பெறுவது அவசியமாகும்.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com