
ஆன்டி ஆக்சிடண்ட்ஸ் என்பது ஃப்ரீராடிகல்களின் அழுத்தத்தால் ஏற்படும் பாதிப்புகளை நீக்கக் கூடிய பண்பு பெற்றது. புகை மற்றும் மாசுபடிந்த சுற்றுச் சூழலால் இந்த ஃப்ரீ ராடிகல்கள் ஏற்படுகிறது. ஆரோக்கியம் தரும் ஆன்டி ஆக்சிடண்ட் நிறைந்த 6 பானங்கள் பற்றி இப்பதிவில் காண்போம்
ஆன்டிஆக்சிடண்ட்ஸ் அதிக அளவு நிறைந்தது க்ரீன் டீ. இந்த க்ரீன் டீயில் காடெசின்ஸ் அதிக அளவு காணப்படுகிறது . இந்த பொருள் ரத்தச் சர்க்கரையைக் குறைக்கும், நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைக்கும். மேலும் புற்றுநோய் வராமல் தடுக்கக் கூடிய பண்புகள் பெற்றது. இந்த க்ரீன் டீயை குளிர்ச்சியாகவோ அல்லது சூடாகவோ அருந்தலாம். இதில் சிறிது எலுமிச்சை யைப் பிழிந்தால் ஆன்டி ஆக்சிடண்ட்ஸ் நன்கு உறிஞ்சப்படும்.
அடர் சிவப்பு நிறமுள்ள மாதுளம் பழத்தில் அதிக அளவு ஆன்டி ஆக்சிடண்ட் உள்ளது. இந்த மாதுளை தோல்வியை வீணடிக்காதீர்கள். அதில் அதிக பாலிஃபிபினால் உள்ளது. ஒரு மாதுளை அதாவது 3.5.அவுன்ஸ் மாதுளையில் 2.1mmol அளவு ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளது. இதை ஸ்மூத்திகளிலும் சேர்த்து உட்கொள்ளலாம்.
திராட்சை பழத்தில் ரிசர் வெட்டால் என்ற பாலிஃபினால்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது. இது மிகச் சிறந்த ஆன்டி ஆக்சிடண்டாக செயல்பட்டு இதய பாதிப்பு ஏதும் ஏற்படாமல் பாதுகாக்கிறது இது ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. 3.5அவுன்ஸ் திராட்சையில் 1.2 மிலி அளவு ஆன்டிஆக்ஸிடன்ட் இருப்பதாக தெரிகிறது.
கோகோ பௌடரில் அதிக அளவு ஆன்டி ஆக்சிடண்ட் உள்ளது . இதை அதிக அளவு உட்கொள்ளும் போது ஆண்டி ஆக்சிடன்ட் அதிக அளவு உடலில் சேரும். நீங்கள் சாக்லேட் பானத்தை சூடாக எடுத்துக்கொண்டாலும் அல்லது குளிர்ச்சியாக எடுத்துக் கொண்டாலும் இது உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். மேலும் இது ரத்த அழுத்தத்தைக் குறைத்து மூளை செயல்பாட்டை சுறுசுறுப்பாக்கும். இவையெல்லாவற்றுக்கும் காரணம் கோகோ வில் உள்ள ஃப்ளேவினாய்டுகள். நல்ல சிறந்த கோகோ பௌடரை தேர்ந்தெடுக்கவும்.
நாம் எல்லோரும் காலை நேரத்தில் அருந்தும் காபியில் அதிக ஆண்டிஆக்சிடண்ட் உள்ளது. இதில் மிகவும் ஆரோக்கியமான க்ளோரோஜெனிக் அமிலம் உள்ளது. இது நீரிழிவு நோயாளிகளுக்கும் புற்று நோயை தடுப்பதற்கும், அழற்சியை போக்குவதற்கும், சோர்வை நீக்கி சுறுசுறுப்பு அடைவதற்கும் பயனுள்ளதாக விளங்குகிறது. எஸ்ப்ரெச்சோ காபியில் 3.5அவுன்சில் 14.2மிலி ஆன்டி ஆக்சிடண்டுகள், ஃபில்டர் காபியில் 2.5மிலி ஆன்டி ஆக்சிடண்டுகள் உள்ளன.
இது ஆன்டி ஆக்சிடண்ட் நிறைந்தது இதில் அதிக அளவு வைட்டமின் சி மற்றும் கரோடினாய்டுகள், ஃப்ளேவினாய்டுகள் உள்ளன. ஆரஞ்சு ஜூஸில் உள்ள ஹெஸ்பெரிடின் என்ற ஆன்டி ஆக்சிடண்டு அழற்சியை குறைத்து புற்றுநோயை தடுக்கிறது. ஆரஞ்சு தோலியில் அதிக அளவு ஹெஸ்பெரிடின் இருப்பதாக அறியப்படுகிறது. 3.5 அவன்ஸ் ஹவுசில் 64 மில்லி அளவு ஆன்டிஆக்ஸிடன்ட் இருப்பதாக தெரிகிறது.
பாட்டிலில் அடைக்கப்பட்ட கெமிகல்கள் நிறைந்த ஜூஸ் வகைகளைத் தவிர்த்து மேற்கூறிய பானங்களை உட்கொண்டால் சிறந்த ஆரோக்கியம் பெறலாம்.
மருத்துவ மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு (Disclaimer): இந்த கட்டுரையில் உள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைகளுக்கு மாற்றாகாது. அவசர சிகிச்சைக்கும் மருத்துவ ஆலோசனைக்கும் தகுந்த மருத்துவரை அணுகவும்.
Reference