
காய்கறி நறுக்கும்போது பழங்களை வெட்டும் போது முகத்திற்கு ஷேவிங் செய்து கொண்டிருக்கும் போது சற்றே கவனக்குறைவாக இருந்தால் அது காயத்தை ஏற்படுத்தி சிறிதளவு ரத்தத்தை வரவைத்து விடும். அப்போது காயத்தை கழுவி கிருமிநாசினியைப் பூசி தேவைப்பட்டால் ப்ளாஸ்டர் போட்டு விட்டால் ரத்தம் வருவது நிற்கும். இது பெரும்பாலானோருக்கு நடக்கும் விஷயம். ஆனால் துரதிஷ்டவசமாக ஹீமோபோலியா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இப்படி நேர்வதில்லை. அவர்களுக்கு ஏதாவது காயம் ஏற்பட்டால் ரத்தம் வடியும். ஆனால் காயத்திலிருந்து தொடர்ந்து ரத்தம் சொட்டும்.
ஹீமோஃபிலியா என்பது என்ன?
ஹீமோஃபிலியா என்பது ஒரு அரிய, மரபணு ரத்தக் கோளாறாகும். இது ஒரு பரம்பரை கோளாறு. இந்தக் கோளாறு உள்ளவர்களுக்கு ரத்தம் எளிதில் உறைவதில்லை. உடலில் போதுமான உறைதல் காரணிகள் இல்லாததால் ரத்தம் உறையாமல் அதிக அளவு ரத்தப்போக்கு ஏற்படும். எக்ஸ் குரோமோசோமில் ஏற்படும் பிறழ்வுகளுடன் தொடர்புடையது. ஹீமோஃபிலியா உள்ளவர்களுக்கு ரத்தப்போக்கு மற்றும் சிராய்ப்பு காயங்கள் ஏற்படும் அபாயம் அதிகமாக இருக்கும்.
பொதுவாக மனிதர்களுக்கு கையில் ஏதாவது காயம் ஏற்பட்டால் ரத்தம் சொட்டும். உடலில் உள்ள ரத்தத்தில் உறைய வைக்கும் காரணிகள் பிளேட்லெட்டுகளுடன் இணைந்து ரத்தக் கட்டிகளை உருவாக்கும். எனவே அவை ரத்தப்போக்கை கட்டுப்படுத்துகின்றன. ஆனால் ஹீமோபிலியா இருப்பவர்களுக்கு இந்த செயல்முறை இருக்காது.
10ம் நூற்றாண்டில் முதல் முதலில் ஹீமோஃபிலியா கண்டுபிடிக்கப்பட்டது. சில ஆண்கள் தீவிர ரத்தப்போக்குக்குப் பிறகு இறந்தனர். ஐரோப்பிய அரச குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு ஹீமோகுளோரியா இருந்ததாக கருதப்பட்டது. ஐரோப்பிய அரசு குடும்பங்களில் குறிப்பாக விக்டோரியா மகாராணியின் வம்சாவழியினரிடையே இதன் பரவல் காரணமாக ஹீமோபீலியா அரச நோய் என்று அழைக்கப்பட்டது.
ஹீமோபிலியாவின் அறிகுறிகள்:
இது பொதுவாக பெண்களை விட ஆண்களை அதிகமாக பாதிக்கிறது. இதன் மிக முக்கியமான அறிகுறி அதிகப்படியான ரத்தப்போக்கு. சிராய்ப்பு உள்ளவர்களுக்கு சிறிய காயங்களில் கூட பெரிய அளவில் ரத்தப்போக்கு ஏற்படலாம்.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு வெட்டப்பட்ட இடத்திலிருந்து வழக்கத்திற்கு மாறாக நீண்ட நேரம் ரத்தப்போக்கு இருக்கும்.
மூக்கில் இரத்தக் கசிவு போன்ற காரணங்கள் எதுவும் இன்றி ரத்தப்போக்கு ஏற்படும்.
பெரிய அல்லது ஆழமான காயங்களில் இருந்து ரத்தம் வடிதல்.
சிலருக்கு தடுப்பூசிகள் போட்ட பிறகு அசாதாரணமான ரத்தப்போக்கு ஏற்படும்.
பல் சிகிச்சைக்கு பிறகும் சிலருக்கு ரத்தப்போக்கு அதிகப்படியாக இருக்கும்.
சிறுநீர் அல்லது மலத்தில் இருந்து ரத்தக் கசிவு ஏற்படுதல்.
தூக்கம் அல்லது சோம்பல், உடல் பலவீனம், வலிப்பு நோய் மற்றும் வாந்தி.
ஆழமான உட்புற ரத்தப் போக்கு:
ஆழமான தசைகளில் ஏற்படும் ரத்தப்போக்கு கை கால்கள் வீங்க வழி வகுக்கும். இரத்தப்போக்கினால் மூட்டு வலி, கணுக்கால், முழங்கால் வலி, இடுப்பு மற்றும் தோள்களில் உள்ள மூட்டுகள் வலிக்கும். மேலும் இவை வீங்கலாம், தொட்டால் சூடாக இருக்கலாம். இது உள்ளுக்குள் தன்னிச்சையாக நிகழும்.
மூளையில் ஏற்படும் ரத்தப்போக்கு மிகவும் ஆபத்தானதாகும். கடுமையான ஹீமோபிலியா உள்ளவர்களுக்கு இது ஏற்படக்கூடும். தலைவலி அல்லது இரட்டைப் பார்வையை ஏற்படுத்தலாம். அடிக்கடி தூங்க வேண்டும் என்று நினைப்பார்கள் இவர்களுக்கு மூளையில் ஹீமோபிலியா இருக்கலாம்.
சிகிச்சைகள்:
தன்னிச்சையான ரத்தப்போக்கு நிகழ்வுகளை தவிர்ப்பதற்காக ரத்த உறைதல் காரணிகளை தொடர்ந்து செலுத்துவதன் மூலம் இந்த நோயை கட்டுப்படுத்தலாம்.
ஹீமோபிலியாவிற்கு பல புதிய சிகிச்சைகள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. இது பாரம்பரிய காரணி மாற்று சிகிச்சை தாண்டி குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை குறிக்கிறது. ஸ்டெம் செல் அடிப்படையில் ஆன மரபணு சிகிச்சை ஆராய்ச்சி நடந்து வருகிறது.